தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விலத்தி நிற்போம்….. விலத்தி வைப்போம்…

(சாகரன்)

தற்போது உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரனா வைரஸ் என்று அறியப்பட்டு இன்று கோவிட் 19 வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள வைரஸ் பற்றிய எனது மூன்றாவது பதிவு இது.

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அவசர நிலை – இனி என்னவெல்லாம் நிகழலாம்?

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 5,000க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 132,500 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸ் தொற்றால் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 43 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று உள்ளவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸும் மட்டக்களப்பு அரசியலும்

Dr. விஷ்ணு சிவபாதம் அவர்களின் ஆதங்கம்

இந்தப் பதிவானது எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக நேற்று இதை எழுதவில்லை. ஆனாலும் இன்று மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களால் ஒரு வைத்தியராக என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை.

கொரோனா வைரஸ்: அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அதுவோர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு… அன்றைய விரிவுரையை நடத்துவதற்கு, அறைக்குள் வந்த பேராசிரியர், தான் கற்பிக்கப் போகும் விடயப் பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார்.

இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றுக்குள்ளாகி அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெறும் நபருடன் வசித்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் கொரனோ தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு

வடக்கில் கொரனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த .சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்

கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

(Kumaravelu Ganesan)

கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.