கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

எதிர்வரும் 2 வாரங்களுக்கு மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்கான அனுமதிகளை வழங்குவதை நிறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றார்.

குறிப்பாக வெளிநாடுகளில் அதிகளவில் மக்கள் கூடிய இடங்களிலிருந்தே கொரோனா தொற்று பரவியுள்ளதென தெரியவந்துள்ளதென தெரிவித்த அவர், இலங்கைக்குள் தனிமைப்படுத்தபட்ட மருத்து ஆய்வு கூடங்கள் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன என்றார்.

அதனால் சில குறைபாடுகள் நிலவியிருக்காலம் எனத் தெரிவித்த அவர், அந்த நேரத்தில் இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தெரிவித்த எதிர்ப்பால் அந்த பணிகள் மேலும் தாமதமாகின என்றார்.

​அதேபோல் வீடுகளிலிருந்து தனிமைப்படுத்தபட்ட ஆய்வை செய்ய முறையாக ஒத்துழைப்பது அவசியமென கோரிய அவர் வெளிநாடுகளிலிருந்து வருவோராலேயே நோய் பரவுகிறது என்றார்.

மேலும் கொரோன தொற்று ஒழிப்புக்கான செயலணியின் பணிகள் நாளைய தினம் முதல் ராஜகிரியவில் அமைக்கப்படவுள்ள வி​ஷேட அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.