தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும்…..

(Karunakaran Sivarasa)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் அதன் மீது மக்களுடைய எதிர்ப்புணர்வும் கூடிக் கொண்டு வருகிறது.

மக்கள் விரோதச் சக்தியாக கூட்டமைப்பு மாறிவிட்டது என்பதே பலருடைய கருத்துமாகும்.

பிரபாகரன் நயவஞ்சகமாக இருந்தான் என்பதே உண்மை.

(தமிழ் நேசன்)

தமிழரும் சிங்களவரும் அங்காங்கே முட்டி மோதிய காலமது.

எந்த நேரத்திலும் இரு தரப்புக்குமிடையில் மிகப் பெரிய கலவரம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலரது வாய்களும் பகிரங்கமாக பேசிய காலமது.

ஈழ விடுதலை போராட்ட ஆரம்ப காலப்பகுதியில் ஒரு இயக்கத்தின் தாக்குதலுக்கு மற்ற சக இயக்கங்களின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் இருந்து வந்த அற்புதமான காலமும்கூட அது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 5)

(அந்தோணி!)
மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.

Dragon fruit

(Rubasangary Veerasingam Gnanasangary)

வணக்கம் நண்பர்களே.
எழுதுவதற்குப் பல நூறு விடயங்கள் இருந்தும் எதை முதலில் எழுதுவது என்று ஜோசித்துக் கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் Dragon fruit பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். ஆகவே அதையே முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

விக்ரமின் சமிக்ஞை: இழப்பைக் கடந்து தொடரட்டும் சந்திரயானின் சாதனை

சமீப நாட்களாக நிலவுக்கான தரையிறங்கு கலம் ‘விக்ரம்’ பற்றிய கவலை இந்தியர்களை ஆக்கிரமித்திருக்கிறது. நிலவை ஆராயும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முயற்சியில், இந்தக் கலம் சற்று வேகமாக விடுபட்டு, நிலவின் தரையில் சாய்ந்ததுடன் தகவல் தொடர்பையும் இழந்துள்ளது. மற்றபடி, நிலவை ஆராயும் முயற்சி வெற்றிகரமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. விக்ரமிடமிருந்து சமிக்ஞைகள் பெறுவதுகூடச் சாத்தியம்தான் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளில் ஒருசிலருக்கு இருக்கிறது.

புதின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதா?

(பிரெட் ஸ்டீபன்ஸ்)

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் வீழ்ச்சிக் காலம் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. அரசியல்ரீதியாக உள்நாட்டில் எதிர்ப்பு வலுத்துவருகிறது; அவரது செல்வாக்கு வேகமாகச் சரிந்துவருகிறது. இப்போது அவர் எதிர்ப்புகளை அடக்கியாள்வதில்தான் பெரும் அக்கறை காட்டுகிறார்.

‘தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்’

“மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே தற்போது பெற்றுக்கொடுத்துவருகின்றது. எனவே, மலையக அரசியல் தலைமைகள் அன்று தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் இந்நேரம் முழுமையானதொரு சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்.’’ என, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

சில தவறான, நேர்மையற்ற ஏதிர்வினைகள்

எமது கட்டுரைகளுக்கு வரும் சில ஏதிர்வினைகள் எம்மைப் பற்றி சில தவறான, நேர்மையற்ற கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கின்றன. நாம் மக்கள் விடுதலை முன்னணியின் (J V P) ஆதரவாளர்கள் அல்லது முன்னைய அங்கத்தவர்கள் என்னும் பொருள்பட சிலர் எழுதுகிறார்கள். நாம் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள், இந்நாள் ஆதரவாளர்கள் அல்ல. நாம் மக்கள் விடுதலை முன்னணியின் தவறுகளை விமர்சனமும் , அதில் தமது பாத்திரங்களை சுயவிமர்சனமும் செய்து கொண்டு வெளியேறிய முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்புக்களின் ஆதரவாளர்களாகவே இருக்கிறோம்.

முத்தையா முரளிதரன்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரன் விடுதலைப் புலிகள் பற்றிக் கூறிய கருத்து அந்த இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இயல்பானதுதான்.
முரளிதரன் இத்தகைய ஒரு கருத்தை விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில், அதுவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச பங்குபற்றிய ஒரு நிகழ்ச்சியில் வைத்து ஏன் கூறினார் என்பது சிந்தனைக்குரியதுதான்.