ஜனாதிபதித் தேர்தல்: அவதானங்களும் அனுமானங்களும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

விதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை பல்லாயிரம் கதவுகளைத் திறக்கும்

(காரை துர்க்கா)
பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், ஏனைய இழப்புகள் தொடர்பான விவரங்களைத் திரட்டவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவா, அ.இ.பாஜகவா?- ஸ்டாலின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

மத்திய அரசின் 370 சட்டப்பிரிவு ரத்தை ஆதரிப்பதால் அதிமுக என்ற பெயரை அகில இந்திய பாஜக என்று இனி மாற்றிக்கொள்ளலாம் என்ற ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இது காஷ்மீரின் கதை! -370 சட்டப்பிரிவு பிறந்த வரலாறு

(நெல்லை ஜெனா)

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் அமெரிக்கா தொடங்கி ஐ.நா.வரை சென்று குரல் எழுப்பிய வரலாறும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக் கொண்டுவிடும். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். இதனால் முடி பிரச்சினைகள் நீங்கும்.

மாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்

மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

வெள்ளவத்தை மோதல்; மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்னை விமர்சிக்கும் முன் தமிழரசுக் கட்சித் உறுப்பினர்களான சேனாதி சிறீதரன் சரவணபவன் ஆகியோர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ச

தமிழ்த் தலைமைகள் சேறுபூச விளைந்தால் தமிழ் மக்களின் முன் ஒவ்வொருவரின் முகத்திரைகளும் கிழிக்கப்படும் – நாமல் சூளுரை
2019-08-03
எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை

‘தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’ என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது

மஹிந்தவுடன் ஈரோஸ் இணைந்தது

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.