இது காஷ்மீரின் கதை! -370 சட்டப்பிரிவு பிறந்த வரலாறு

(நெல்லை ஜெனா)

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் அமெரிக்கா தொடங்கி ஐ.நா.வரை சென்று குரல் எழுப்பிய வரலாறும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.