‘அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை தண்டிக்கவும்’

மினுவங்கொட பிரதேசத்தில் நேற்று (13) அமைதியின்மையைத் தோற்றுவித்த சகலருக்கும் எதிராக பாரபட்சமின்றி தண்டனை வழங்குமாறு, பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக, போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை இல்லாதொழிப்பது …..

(Mkm Shakeeb)
நேற்றைய இனவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் “ஜனாஸா” நல்லடக்க நிகழ்வில் பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டிருந்த படங்களே கீழுள்ளவை..

இனவாதத்தை இல்லாதொழிப்பது அவர்களை மிக அற்ப குழுவாக தனிமைப் படுத்துவதிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தில் ( எல்லா சமூகங்களிலும்) உள்ள இனவாதமற்ற பெரும்பான்மை மக்களிடையே நல்லுறவையும் இன சௌஜன்யத்தையும் பலப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது.

இனவாதம் பயங்கரவாதம் மதத் தீவிரவாதம் என்பன உடைமைகளையும் உயிர்களையும் அழிப்பதைதான் அவைகளின் வெற்றியாக கருதி வருகின்றன.. ஆனால் அவைகளால் மானுடம் மனிதாபிமானம் சகஜீவனம் போன்ற பெறுமானங்களை அழிப்பதில் ஒரு போதும் வெற்றிகாண முடிவதில்லை..

உடனடி பேரிழப்பாக பெரும் துயரமாக நடக்கும் நிகழ்வுகள் இருந்தாலும் அவை நல்லதும் நலன்பயத்தக்கதுமான விளைவுகளையே கொண்டு வரக் கூடியது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு விடயமுமாகும்..

முகநூலின் இனவாத பதிவுகளும் பகிர்வுகளும் நமக்கு பெரும் உலகைப் போல் மாயத் தோற்றம் தந்தாலும் உண்மையான மனிதாபிமானமும் புரிந்துணர்வும் அதுவல்லாத சமூகப் பெருவெளியில் சாதாரண சக ஜீவிகளிடமும் புத்திஜீவிகளிடமும் பரந்திருக்கிறது.. அவைகளை மிகப் பலமாக கட்டியெழுப்புவதில் தான் இனவாதம் எனும் தீ அணைக்கப்படும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

பிற்குறிப்பு:
முகநூலில் இனவாதத்தையும் குரோதத்தையும் வளர்த்துக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் அவர்களால் சிறிது நேரம் கூட நிம்மதியாக உறங்கக்கூட முடிவதில்லை போல் தெரிகிறது..!!!

இனங்களின் இணைவு மட்டுமே இனக்கலவரங்களை தடுத்து நிறுத்தும்

இலங்கை மீண்டும் எரிகிறது. அநகாரிக தர்மபால போன்ற இனவெறிபிக்குகள் எடுத்துக் கொடுத்த சிங்கள பவுத்த நாடு என்னும் இனவெறிக் கோட்பாட்டை டி.எஸ் சேனநாயக்கா, ஜெ.ஆர் ஜெயவர்த்தனா என்னும் மக்கள் விரோதிகள் தூக்கிப் பிடித்து மூட்டிய சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தீ தொடர்ந்து எரிகிறது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் எதிரிகள் என்று சுயநல அரசியல்வாதிகள் தொடர்ந்து விதைத்த வெறுப்பினால் இலங்கை எரிகிறது.

புலிகளிடமிருந்து சிறிலங்காவை காப்பாற்றிய மகிந்த! மைத்திரியிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றி ரணில்! இந்த இருவரிடமிருந்தும் சஹ்ரான் போன்றவர்களையே காப்பாற்றி வைத்திருந்த மைத்திரி!

(ப. தெய்வீகன்)
கடந்த இரண்டு வாரங்களாகவே முஸ்லிம் மக்களின் வீடுகள், மசூதிகள் போன்றவற்றில் சிறிலங்கா பொலீஸாராலும் சிறப்பு படையினராலும் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கத்திகள் மற்றும் வாள்களைவிடவும் கூரான ஆயுதங்களோடு அந்த தம்பிமார் வீதி வீதியாக கத்தியபடி வருகிறார்கள். கடைகளின் மீது கற்களை வீசியெறிந்து உடைந்து நொருங்கும் கண்ணாடி சத்தங்களில் ஆனந்தம் கொள்கிறார்கள். மேலும் மேலும் சத்தமிட்டவாறு கையில் கிடப்பவற்றையெல்லாம் வீசியெறிந்து இயன்றளவு சேதம் செய்கிறார்கள். வீடு வீடாகவும் வீதி வீதியாகவும் கால் நடையாகவும் வாகனங்களிலும் சென்று கண்டதையும் உடைக்கிறார்கள். தீயிட்டு கொழுத்துகிறார்கள். கடைகள், மசூதிகள், வீடுகள் எல்லாம் ஒங்கிய ஒளிப்பிழம்புகளாக இரவெல்லாம் எரிந்துகொண்டிருந்தன.

‘கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த, துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்’

ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு வலியுறுத்தியதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

‘நிலைமையைக் கட்டுப்படுத்த, முழு அதிகாரமும் பயன்படுத்தப்படும்’

வன்முறைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த, இராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துமெனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, மேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்தவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

48 மணி நரேஙரகளில் 30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல், 9 பள்ளிவாயல்கள் சேதம்

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருப்பையா ராஜேந்திரனிடம் வாக்குமூலம் பெற நீதவான் அனுமதி

தற்கொலைக் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று (13) பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார். கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இந்த வெடிப்புச் சம்பவத்தின் 10ஆவது சந்தேகநபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கா, ஹபாயா வேண்டா​மென எதிர்ப்பு

புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில், வட மேல் மாகாணத்துக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.