காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது – மோடி

(Stanley Rajan)
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது என்ற அளவில் மோடி அழுவது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் இம்சை இந்திரா ஒரு காலத்தில் அப்படி அழுதார் என்றால் காரணம் இருந்தது, பெரும் சவாலாக அவர் உலக நாடுகளுக்கு திகழ்ந்தார். ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே, நிக்சன் என உலக பிரபலங்கள் எல்லாம் அவர் சாகவேண்டும் என விரும்பின அல்லது துடித்தன‌

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

னம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் அவர்களுக்கு!

(Sanjayan Selvamanickam)

கொழும்பில் எனது 85 வயது அம்மாவின் வாடகை வீட்டில் உள்ள தேங்காய் உடைக்கும் கத்தி சற்றுப் பெரியது. அதை சந்தேகக்கண்ணுடன் பார்த்தால் வாள் போன்று தெரியலாம்.

“இறுதிப்போரும் நானும்”

(Suren Karththikesu)

இந்நாட்களில் முள்ளிவாய்க்கால்

ஐ.நா வரப்போகிறதாம் என்றும் கதைக்கிறார்கள். செஞ்சிலுவைச்சங்க கப்பல், நிவாரண கப்பல் என இரண்டும் முள்ளிவாய்க்கால் கடற்பகுதிற்கு வந்து போனதால் மக்களும் ஐ.நா காப்பாற்ற வரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மறுபக்கம், இயக்கம் ஒருபக்கத்தால உள்ள இறங்கி அடிக்கப்போகுதாம். இப்படி கதைக்கிறார்கள். கொல்லப்படும் மக்கள் அதிகரித்துக்கொண்டே சென்றது. பலர் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று விட்டார்கள். விலையுயர்ந்த பொருட்களுக்கு பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. தங்கத்தினை விட ஒரு கிலோ அரிசியின் விலை அதிகம். ஒரு கிலோ செத்தல் மிளகாய் ஒன்பதாயிரம் ரூபாயினை தாண்டிச்சென்றது. சீனி ஐயாயிரம். நான்கு தேங்காயை கொடுத்தால் ஒரு ஆட்டோ வேண்டமுடியும். ஒரு உழவு இயந்திரத்தின் விலையும் அப்படித்தான். சில்லறை காசுகள் பாவனையில் இல்லாமல் போய்விட்டது. வெற்றிலைக்கு பதிலாக நாயுண்ணி இலைகள், பாக்குக்கு பதிலாக நாவல் மரத்து பட்டைகள், பசிக்கொடுமையில் அடம்பன் கொடியினையும் விடவில்லை. பனை வடலியின் குருத்தும் எங்களுக்கு பசியினை போக்கியது. இன்னும் எத்தனை நாட்கள் சண்டை தொடரப்போகின்றது என்றும் தெரியவில்லை. நானும் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்தேன்.

உங்கள் எதிரிகள் இவர்கள்

பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்புக்கு முன்னூறுக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்இதற்கு Isis அமைப்பு உரிமை கோரியுள்ளது.இந்தப் பயங்கரவாதிகள் அமைதியான நமது நாட்டைக் குறி வைத்து தாக்கியது யாரும் எதிர்பார்க்காத விசயம்.

வழிபாட்டு இட வன்முறைகள்

இவை ஒன்றும் நமது நாட்டுக்கு புதிது அல்ல.இன்று கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் நடந்த வன்முறைகளை பலரும் கண்டித்து கவலையோடு பேசுகிறார்கள்.இதைச் செய்தவர்களை பயங்கரவாதிகள் என உலகமே சொல்லும்போது இதில் கொஞ்சமேனும் சம்பந்தப்படாத அப்பாவி இஸ்லாமிய மக்கள்மீது பழிகளை போடுவதில் அர்த்தம் இல்லை.

சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.