சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.