பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை

(கே. சஞ்சயன்)
குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது.

(“பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு, துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்து, தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன. சிரியாவிலிருந்து, தனது படைகளை ஐக்கிய அமெரிக்கா வெளியேற்றக்கூடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கியமான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

(“துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.

(“நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!

டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐதேக பின்னர் அவரது மகன் டட்லி சேனநாயக்கவின் தலைமையின் பின்னர் அந்த கட்சியை இதுவரை ஜயவர்தன குடும்ப சொத்தாகவே இருந்து வந்துள்ளது, இலங்கையில் ஒரு தலைவருக்கான அதி கூடிய அதிகாரத்தை நாடாளுமன்றம் மூலமும் மக்களின் வாக்களிப்பு மூலமும் பெற்றுக்கொண்ட முதல் மனிதர் ஜெ ஆர் ஜயவர்தன, ரணில் அவர்களின் மாமா, இடையில் பிரேமதாசாவின் இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் ஜனாதிபதியாக வந்தார், எனினும் ஐதேக ஜேஆர் குடும்பத்தை விட்டு வேற்று மனிதர்களிடம் கைமாறிவிடவில்லை அதன் தலைமையை ரணில் விக்கிரம சிங்க பொறுப்பேற்றார், இவரது தலைமைக்கு எதிராக பிரேமதாசாவின் புதல்வர் எத்தனை முறை முயற்சித்தும் அது கைக்கூடவில்லை, இப்போது பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரி ரணில் அவர்களுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்துள்ளது.

(“ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

‘பதிலளிக்கத் தேவையில்லை’

“தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கேட்டபோது, “தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” தெரிவித்துள்ளார்.

உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?

(அதிரன்)

பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றனர்.

(“உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?” தொடர்ந்து வாசிக்க…)

‘அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்’

“அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று (02) காலை பிரதமரின் அழைப்பின் பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனும் அதன் செயலாளரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

(“‘அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

120 குளங்களை புனரமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு

“வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த நிலையில் காணப்படும் 120 குளங்களை புனரமைப்புச் செய்வதுக்காக நல்லிணக்க செயலணியால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவருமாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

(“120 குளங்களை புனரமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு” தொடர்ந்து வாசிக்க…)

சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்.உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி

பொதுவாகவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்றுக்காலம் முதலே இருதரப்பு உறவுகள் வலுவாக இருந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியான போக்கே தற்போதும் காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிறப்பாகவே உள்ளது. இன்றைய காலத்தில் அந்த பிணைப்பு மென்மேலும் வலுவானதான ஒன்றாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தற்போது மேம்பட்டுச் செல்கின்றன.

(“சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்.உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தம்பி தில்லை முகிலன்

தோழர் தம்பி தில்லை முகிலன் என நம் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் 31.03.2018 அன்று மரணத்தைத்தழுவிக்கொண்டார்.இன்று (01.04.2018) மாலை அவருக்கான இறுதிக் கடமைகள் நிறைவேற்றப்பட்டன.தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT)தோழர்களும் கலந்து தொண்டு தமது இறுதி அஞ்சலிகளைத் செலுத்தினர்.

(“தோழர் தம்பி தில்லை முகிலன்” தொடர்ந்து வாசிக்க…)