யார் இந்த கௌரி லங்கேஷ்?

லங்கேஷ் என்ற கன்னட வார இதழ் கர்நாடக அரசியல் சமூக வட்டாரங்களில் மிகப் பிரபலமானது. கௌரியின் தந்தையான லங்கேஷ்தான் இந்த இதழைத் தொடங்கினார். அவர் 2000 ஆண்டு மறைந்த பின் கௌரி இந்த இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இப்போது அவருக்கு வயது 55. கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மதம், ஜாதி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அநியாயம் செய்பவர்கள் பலரைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது லங்கேஷ் பத்திரிகை. இப்போதைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார் கௌரி. லங்கேஷ் பத்திரிகைக்கு என்றே தனிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டு. ஒவ்வொரு செய்தியும் தீப்பிடிக்கும். யாரோடும் சமரசம் செய்துகொண்டால் மக்கள் நன்மைக்காக எழுத முடியாது என்பதால், இதுவரை எவ்வித வணிக விளம்பரமும் இல்லாமலேயே பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

(“யார் இந்த கௌரி லங்கேஷ்?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபையில் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்

“வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“வட மாகாண சபையில் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?

(எம்.எஸ்.எம். ஐயூப் )
வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும் செய்யவில்லை என்றும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் மாகாணத் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்களது நேர்மையைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

(“வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

‘பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடிகளை புதைக்கிறது மியான்மார்’

மியான்மார் அரசாங்கம், மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில், கண்ணிவெடிகளைப் புதைத்துவருவதாக, பங்களாதேஷ் அதிகாரிகள் சிலரை மேற்கோள்காட்டி, றொய்ட்டெர்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக, அங்கிருந்து தப்பி, பங்களாதேஷை அடைந்துள்ள றோகிஞ்சா முஸ்லிம்கள், திரும்பவும் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நம்புவதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பித்த வன்முறைகளைத் தொடர்ந்து, குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு, 125,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்குத் தப்பியுள்ளனர். இதன் காரணமாக, மாபெரும் மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

(“‘பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடிகளை புதைக்கிறது மியான்மார்’” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் ??

பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் தெரியுமா??

‘இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காண நான் தான் கருணாவினை அனுப்பிவைத்தேன்’ என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
”அப்போது நாட்டின் சனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் வெளிநாட்டில் இருந்தார்கள். அந்தப் போர் முடிவடையும் என்று நாங்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் எங்களுக்கு வந்துகொண்டே இருந்தன. பிரபாகரன் அவர்களை உயிருடன் காப்பாற்றி கப்பல்மூலமாவது கொண்டுவரவேண்டும் என்ற தேவை பலருக்கு இருந்தது. பலர் அதை விரும்பினர். ஆனால் 18 ஆம் திகதியே போர் முடிந்துவிட்டது.

(“பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் ??” தொடர்ந்து வாசிக்க…)

நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?

(காரை துர்க்கா)

ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது.

(“நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?” தொடர்ந்து வாசிக்க…)

நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்

(Ahilan Kadirgamar)

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஏற்பட்ட பூளோக பொருளாதார நெருக்கடி, உலகைத் தொடர்ந்தும் சின்னாபின்னப்படுத்துகிறது. பூகோள பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் பாரிய வீழ்ச்சியும், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. மறுபுறத்தில், இந்த நெருக்கடியின் விளைவுகள், ஜனரஞ்சக சர்வாதிகாரத்தின் தோற்றத்தையும் உறுதிப்படுத்தலையும் நெறிப்படுத்துகின்றன.

(“நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்” தொடர்ந்து வாசிக்க…)

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும்!

(பஷீர் சேகு தாவூத்)
தீய முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான முஸ்லிம் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

(“வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும்!” தொடர்ந்து வாசிக்க…)

பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ‘’பழம் பழுத்தால் வௌவால் வரும்’’ என்றவரும் ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்றவரும் மேடைகளில் முழங்கிய வேளையில் கூடவே கொக்கரித்தவர்களில் மாவையும் ஒருவர். பாசறைகள் தயாராகிவிட்டன பயிற்சிகள் தொடங்கிவிட்டன என உணர்ச்சி ஊட்டியவர் இவர்.

(“பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’

மியான்மாரின் குழப்பத்துக்கு மத்தியில் காணப்படும் வடமேற்குப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள், இராணுவத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மியான்மார் அரசாங்கம் கோரியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அரண்கள் மீது, ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ராக்கைனில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையிலேயே, மியான்மார் அரசாங்கத்தின் இக்கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

(“‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)