‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண ​சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்து​கொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 ​பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

(“‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார்: ராகுல் காந்தி விருப்பம்

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்ளி பல்கலைக்கழகத்தில் பேசினார். அப்போது அவரிடம் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார். ஆனால் இதுகுறித்து நான் முடிவு செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

(“பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார்: ராகுல் காந்தி விருப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

மியான்மார் விவகாரம்: ’மலேஷியா தலையிட வேண்டும்’

மியான்மாரில் றோகிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க, பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில், மலேஷியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(“மியான்மார் விவகாரம்: ’மலேஷியா தலையிட வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல விடலாமா?

(எஸ்.கருணாகரன்)
“தமிழ் மக்கள், நீண்ட காலமாக சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆணை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கள மக்கள், ஒற்றை ஆட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இவ்விரண்டு தரப்புகளும் எவ்வாறு ஒன்றிணையும்?”

“வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை”.

“புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபுக்கே, இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. தீர்வை எட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வருடங்களாவது தேவை. அதற்குள் தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியிலிருக்குமா?”

(“தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல விடலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம்

(அதிரதன்)

யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது.

(“திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம்” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் மதுவிருந்து தாராளம்

தொண்டைமானாறு அக்கரை பகுதியில், மது பாவனைக்குத் தடை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும் இரவு நேரங்களில் மதுவிருந்து தாராளமாக இடம்பெறுவதாக அப்பகுதி மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இரவு நேரங்களில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளஞர்கள் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால், அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

(“தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் மதுவிருந்து தாராளம்” தொடர்ந்து வாசிக்க…)

வெருகல் கலாசாரம்

வெருகல் ஒரு சிறப்பு மிகு கலாசாரத்தின் சங்கமம் கொட்டியாரத்தின் பெருமையயை பறை சாற்றும் உறவுகளின் சந்திப்பாய் தடம் பதித்த ஒரு பண்பாட்டு படர்ச்சி. திருகோணமலைத் தமிழகமும் மட்டக்களப்பு தமிழகமும் இணைந்த ஒரு தேசத்தார் கோயிலின் வளக்காறாய் நீண்டிருக்கும் தொல் மரபு இங்கு புதைந்து கிடக்கிறது.

(“வெருகல் கலாசாரம்” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லா பிரேரணை சி.விக்கு எதிராக வருகிறது?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது என்றும் அந்த தகவல் தெரிவித்தது.

தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்

தமிழ்த் தேசிய அரசியல் வழி நின்று செயற்படுகின்றவர்களான, சமஷ்டிக் கோரிக்கையினை வலியுறுத்தி நிற்கின்றவர்களான சி.வி. விக்கினேஸ்வரனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும், சமஷ்டித் தீர்வின் சாத்தியங்கள் குறித்து நேரெதிர் கருத்துக்களை / நேரெதிர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருவதொன்றாக அமையவில்லை.

(“தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

எப்போதாவது நடக்கும் கதைகள்: கதவருகே ஒரு கிளர்ச்சியாளர்

(கலாநிதி லக்சிறி பெர்ணாண்டோ)

எங்கள் முன் கதவை யாரோ மென்மையாகத் தட்டும் சத்தம் கேட்டு நான் திடீரென கண் விழித்தே. மற்ற நாட்களில் நாங்கள் அனைவரும் இந்த நேரத்துக்கு எழுந்து விடுவோம், ஆனால் இது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக விடுமுறை காலமாக இருந்தது. அதனால் நான், எனது மனைவி மற்றும் மகன் ஆகிய அனைவரும் ஒரு இலகுவான நேரத்தை அனுபவித்து வந்தோம். இவ்வளவு நேரத்துடன் எங்கள் வீட்டுக்கு யார் வந்திருக்கக் கூடும், என நான் ஆச்சரியப் பட்டேன் எங்கள் வீட்டு வேலைகளுக்கு உதவி செய்யும் பெண்ணான விமலா வெளிக் கதவை நோக்கி நடந்து சென்று அதைத் திறப்பதை நான் கேட்டேன், மற்றும் அவள் திரும்பவும் எங்கள் அறைக் கதவின் அருகே வந்து “ஐயா யாரோ உங்களைக் காண வந்திருக்கிறார்” என்று சொன்னாள்.

(“எப்போதாவது நடக்கும் கதைகள்: கதவருகே ஒரு கிளர்ச்சியாளர்” தொடர்ந்து வாசிக்க…)