சாதாரணமானவனின் மனது

சஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்
ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி அரசியலுக்குள் சிக்கிவிட்ட தேசியம் பேசும் அமைப்புக்கள்

நோர்வே ஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் மக்களவை உருவாக்க காலத்தில் முக்கியப்படுத்தப்பட்டவரும், ரீரீசியின் உபஅமைப்பான நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் தலைவர், பல்வைத்தியர் சிவகணேசன் அவர்களும் ஸ்ரீலங்கா அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி சில வாரங்களே ஆகும்போது பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களைத் தலைவராகக்கொண்ட நோர்வே ஈழத்தமிழர்அவை திடீரென நோர்வே ஈழமக்கள் அவைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக அறிவித்துள்ளது.

(“சாதாரணமானவனின் மனது” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்

2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

(“இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)

இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான இலண்டனின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2 தாக்குதல்களில், 6 பேர் கொல்லப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவிர, தாக்குதல்களை மேற்கொண்ட 3 பேரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:38 மணிக்கு (ஐ.இராச்சிய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10:08) ஆரம்பித்துள்ளன.

(“இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 15)

(அருண் நடேசன்)

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடுசவக்களை என்று சொல்வார்களேஇராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

(“மே 18 (பகுதி 15)” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிப் போராளிகளின் பங்களிப்பு சற்று மிகையானது என்றால்  அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாக இருக்கும் சிறப்பாக பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இன் அதிக பலமே கிழக்கு போராளிகளின் அர்பணிப்பில் உருவானது. மற்றய பிராந்தியங்களைவிட கிழக்கு பிராந்திய மக்களும் இந்த அமைப்புடன் ஒரு நெருங்கிய உறவை பேணிவந்தனர். தோழர்கள் பாஸ்கரன் தேவகுமார் இருவரது வெலிக்கடைப் சிறைப்படுகொலைக்கு பிறகு மட்டக்களப்பு சிறையுடைபாக இருக்கட்டும் இதனைத் தொடர்ந்த தோழர் குமார், சிவா ஆகியோரின் தலமைத்துவத்துடனான செயற்பாடாக இருக்கட்டும் காரை நகர் கடற்படை முகாம் தகர்பாக இருக்கட்டும் தோழர்கள் வேலு கணேஸ் ஆகியோரின் அர்பணிப்பாக இருக்கட்டும்  இதே வேளை விசேட அதிரடிப்படையின் நெருக்குவாரங்களுக்கிடையில் தோழர் நிதி, தைரி போன்றவர்களின் செயற்பாடு தோழர் வெள்ளையன் (கிருபா) ஆகியோரின் திருமலை மட்டக்களப்பு செயற்பாடு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

(“27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

அனர்த்தங்களின் பின்னரான நோய்களிலிருந்து எவ்வாறு தப்புவது?

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை, தற்போது சற்றுத் தணிந்துள்ள நிலையில், அவ்வாறான அனர்த்தங்களின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டுமாயின், சில நடைமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

(“அனர்த்தங்களின் பின்னரான நோய்களிலிருந்து எவ்வாறு தப்புவது?” தொடர்ந்து வாசிக்க…)

‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’ – டக்ளஸ் தேவானந்தா

“களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்குச் சென்ற என்னை, சிறைக் கூடமொன்றுக்குள் வைத்து கைதிகள் சிலர், பாய்ந்து தாக்கினர்” என, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (01) சாட்சியமளித்தார்.

(“‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’ – டக்ளஸ் தேவானந்தா” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கின் உதவிக்கரங்கள்…

நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றினால் அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள், இன்று பிற்பகல் 2 மணியளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தெற்கை நோக்கிப் புறப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலையீட்டின் கீழ், இந்த நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

மாலி: ஓநாய் அழுத கதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை.

(“மாலி: ஓநாய் அழுத கதை” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை, வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இருவர், படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், தமிழக காவல்துறையினரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், வாள்வெட்டுக் குழுவின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

(“யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது” தொடர்ந்து வாசிக்க…)