PHD’ ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள்..!

விஜய் டிவியின் புகழ் “டிடி” அவர்கள் ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்கள்..
‘முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்’ என்ற பொய்யை பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம்.

(“PHD’ ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள்..!” தொடர்ந்து வாசிக்க…)

நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும்

தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமியின் பெயர் இரண்டு காரணங்களினால் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களில் அடிபட்டது.

(“நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(3)

(மணக்களுக்கு கிடைத்த திருமண பரிசு )

இந்த சூழ்நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே மிகுந்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(3)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 56 )

உணவுத் திணைக்கள ஊழல்கள் ஒருவாறாக பற்குணத்தால் கட்டுப்படுத்தப் பட்டாலும் சிலர் இரகசியமாக தொடர்ந்தனர்.ஆனாலும் அவர்களால் பெரிய அளவில் தொடர முடியவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 56 )” தொடர்ந்து வாசிக்க…)

“அஸ்மிதா” : கதை திரும்புகிறது..

குஜராத் 2002 இன அழிப்பு நடந்த கையோடு புகழ்பெற்ற சமூகப் பொருளாதார ஆய்விதழான EPW ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் உள்ள மிக முக்கிய அறிஞர்கள் அனைவரும் குஜராத் இன அழிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருந்தனர். உடனடியாக அவற்றை தமிழில் பெயர்த்தேன். எனது கட்டுரைகளையும் இணைத்து (மொத்தம் சுமார் 350 பக்கங்கள்) “குஜராத்: அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்” எனும் நூலாக அது வெளிவந்தது (அடையாளம் பதிப்பகம்).

(““அஸ்மிதா” : கதை திரும்புகிறது..” தொடர்ந்து வாசிக்க…)

லண்டனில் இருந்துகொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்?

அது வேறு யாருமல்ல ஒன்பது வயதுகூட ஆகாத பச்சிளம் பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக ஆட்சேர்;ப்பு செய்து, கொலை செய்யவும்; முடமாக்கவும், விகாரப்படுத்தவும் மற்றும் காயப்படுத்தவும் புத்திமதிகள் கூறியவரும் மற்றும் தீவிரவாத பயிற்சியை நிறைவு செய்தபின் அவர்களுக்கு சயனைட் குளிகைகளினால் ஆன மாலை சூட்டியவருமான அடேல் பாலசிங்கம் தான் அவர். இரண்டு உலகத் தலைவர்களைக் படுகொலை செய்தது உட்பட தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய எல்.ரீ.ரீ.யினது பெண்கள் பிரிவிற்கு ஒரு ஆலோசகராக செயற்பட்டதுக்கு மேலதிகமாக அடேல் ஒரு படைப்பாற்றல் மிக்க தீவிரவாத பிரச்சாரகர், தென் கொரியாவில் இருந்து ஆயுதங்களை அனுப்புவதற்காக ஆயுதக் கப்பல்களில் பயணம் செய்தது உட்பட ஒரு தொடர் சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இன்று அடேல் லண்டனில் சுகமாக வாழுகிறார்.

(“லண்டனில் இருந்துகொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்?” தொடர்ந்து வாசிக்க…)

2006 ஆகஸ்ட் 12 தோழர் கேதீஸ் நினைவு நாள்

10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன!

யுத்தத்தினூடே தமிழச் சமூகம் புலமைத்துவ வறுமை கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது. தோழர் கேதீஸ் தேசிய இனப்பிரச்சனை மற்றும் பல்லினங்களின் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கனவுகளுடன் வாழ்ந்தவர்.அவருடைய கட்டுரைகள் நூல்கள் மீள் வாசிக்கப்படவேண்டும். அறிவார்ந்த முறையில் பிரக்ஞை பூர்வமாக சமூகங்கள் மீள் இணைவதற்கான தேடலைப்பிரதிபலிப்பன. சமகாலத்தில் அவரின் வெற்றிடம் தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒன்றாகவே எம்மால் உணரப்படுகிறது. இந்த கட்டுரை அவர் படுகொலை செய்யப்பட ஒரு சில நாட்களில் எழுதப்பட்டது. ஒருசில மாற்றங்களுடன் மீளவும் அந்தக்கணங்களின் உணர்வுநிலை -நினைவலைகள் சார்ந்தது.

(“2006 ஆகஸ்ட் 12 தோழர் கேதீஸ் நினைவு நாள்” தொடர்ந்து வாசிக்க…)

றியோ ஒலிம்பிக்: யாருக்காக?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விளையாட்டு அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி மக்களை இணைக்கிறது என்று சொல்வர். விளையாட்டுக்கு அவ்வாறான ஒரு பெறுமதி ஒரு காலத்தில் இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. விளையாட்டை வணிகம் தின்று விழுங்கியதன் எச்சத்தையே, நாம் விளையாட்டாகப் பார்க்கப்பணிக்கப்பட்டுள்ளோம். விளையாட்டு அதன் அடிப்படை விழுமியங்களை இழந்து விட்டது. விளையாட்டுகளின் நோக்கங்களும் மாறிவிட்டன. இன்று உலகமயமான வணிகமே விளையாட்டை உலகெங்கும் கொண்டு செல்கிறது; பிரபலமாக்குகிறது; வருவாய் பெறுகிறது. ஒலிம்பிக் இதற்கு விலக்கல்ல!

(“றியோ ஒலிம்பிக்: யாருக்காக?” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(2)

(பிரிக்கப்பட்ட புதுமண தம்பதிகள்)

புலிகளால் கட்டயமாக பிடித்து செல்லப்பட்டு சில நாட்களில் பயிற்சிகளின் பின் தொழில்முறை இராணுவத்துடன் போரிடுவதற்காக போர்களங்களில் விடப்படுவதை தவிர்ப்பதற்கு கிளிநொச்சி முல்லைதீவில் வாழ்ந்த மக்களுக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு திருமணங்கள். கட்டய ஆட்சேர்ப்பை ஜூன் 2006ல் புலிகள் தொடங்கியபோது திருமணம் செய்துகொண்டவர்களை பிடித்துசெல்வதை தவிர்த்திருந்தனர். எனவே இதனை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக்கொள்ள நினைத்த பெற்றோர்கள் தங்கள் இளவயது பிள்ளைகளுக்கு அவசரமாக திருமணம் முடித்துவைத்தனர். திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட திருமணங்கள் இரவோடு இரவாக செய்யது வைக்கப்பட்டன. தங்கள் பெண்பிள்ளைகள் கர்ப்பிணியாகிவிட்டால் அவர்களை புலிகள் பிடித்து செல்ல மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால் இவர்களின் நம்பிக்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(2)” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனும் வன்னி மாணவர்களும்

காட்டிக்கொடுத்த மாணவர்களுக்கு பரிசாக அவர்களை வீடுகளுக்கு அனுப்பி பல்கலை கழகம் செல்ல வைத்தார். இந்த மாணவர்கள் பெயரில் வேறு நபர்கள் பரீட்சை எழுதியதனாலும் திறமையான மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் தடுக்கப்பட்டதாலும் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பினாலும் புலிகளின் விசுவாசிகளான மாணவர்கள் பல்கலை கழக அனுமதியை பெற்றுக்கொண்டனர்.

(“பிரபாகரனும் வன்னி மாணவர்களும்” தொடர்ந்து வாசிக்க…)