பயிரை மேய்ந்த வேலிகள்..(2)

(பிரிக்கப்பட்ட புதுமண தம்பதிகள்)

புலிகளால் கட்டயமாக பிடித்து செல்லப்பட்டு சில நாட்களில் பயிற்சிகளின் பின் தொழில்முறை இராணுவத்துடன் போரிடுவதற்காக போர்களங்களில் விடப்படுவதை தவிர்ப்பதற்கு கிளிநொச்சி முல்லைதீவில் வாழ்ந்த மக்களுக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு திருமணங்கள். கட்டய ஆட்சேர்ப்பை ஜூன் 2006ல் புலிகள் தொடங்கியபோது திருமணம் செய்துகொண்டவர்களை பிடித்துசெல்வதை தவிர்த்திருந்தனர். எனவே இதனை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக்கொள்ள நினைத்த பெற்றோர்கள் தங்கள் இளவயது பிள்ளைகளுக்கு அவசரமாக திருமணம் முடித்துவைத்தனர். திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட திருமணங்கள் இரவோடு இரவாக செய்யது வைக்கப்பட்டன. தங்கள் பெண்பிள்ளைகள் கர்ப்பிணியாகிவிட்டால் அவர்களை புலிகள் பிடித்து செல்ல மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால் இவர்களின் நம்பிக்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

சுதாகரித்துக்கொண்ட புலிகள் 2006 ஆகஸ்டில் ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தனர். அதாவது 2006 ஜூன் மாத்ததின் பின் செய்யப்பட்ட அனைத்து திருமணங்களும் செல்லுபடியற்றவை என்பதாக அந்த அறிவிப்பு இருந்த்தது. அத்துடன் ஆண்களின் திருமண வயது வரம்பு 40 ஆகவும் பெண்களின் திருமணவயதுவரம்பு 35 எனவும் கட்டளை பிறபித்திருந்தனர். அவ்வாறு திருமணம் செய்துகொண்ட இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் வீடுகளுக்குள் அத்து மீறி நுழைந்த புலிகளால் பிடித்துச்செல்லப்பட்டனர். சந்தர்ப்பம் கிடைத்தால் 2006 ஜூனுக்கு முன்பு திருமணம் செய்தவர்கள் கூட இரவோடு இரவாக கடத்தி செல்லப்பட்டனர். கருவுற்றிருத இளம் பெண்கள் கருக்களைப்பு செய்ய்ப்பட்டு பயிற்சிக்காக் அனுப்பபட்டுகின்றனர் என பெற்றோர் தமது இயலாமையை கோயில்களில் கடவுளர்களிடம் முறையிட்டுவதை தவிர அவர்களிடம் வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே மிகுந்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியது.

(தொடரும்..)

(Rajh Selvapathi)