இந்திய – சீன எல்லை நெருக்கடி; சொந்த செலவில் சூனியம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நெருக்கடியான காலகட்டங்களில் திசை திருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல், திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற வினாக்களுக்கு மௌனத்தை மட்டுமே பரிசளிக்கின்றன. அந்த மௌனம் சொல்லும் செய்தி வலுவானது. வினாக்களுக்கான விடைகள் அந்த மௌனத்திலேயே ஒளிந்திருக்கின்றன.

இந்திய சீன மோதல்…

ஒட்டுமொத்த உலகமே நோய்த்தொற்றில் சிக்கித்தவிக்கிறது. இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இந்திய ராணுவம் சீனாவை எதிர்த்துப்போர் புரிய நிர்பந்தப்படுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை ‘கலாம் எபெக்ட்’ என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

(“கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவின் ஏழை முதலமைச்சர

முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

(“இந்தியாவின் ஏழை முதலமைச்சர” தொடர்ந்து வாசிக்க…)