நடுத்தெருவில் பாய்ந்த சட்டமும் கொடுமையான மகிழ்வும்

தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, கடலுக்குள் பாய்ந்த இளைஞன், கைக்கூப்பிக் கும்பிட்டு மன்றாடியும், பொல்லுகளினால் அடித்தே கொன்ற சம்பவமொன்று பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள கடலில் 2009இல் இடம்பெற்றமை யாவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். அக்காட்சிகளை இப்போது பார்த்தாலும் இரத்தத்தை உறையவைக்கும்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பற்றிய இருவரின் உரையாடல். உண்மைச் சம்பவம்.

(Selvan Thevasy)

A- அண்ணை அங்கை பாருங்கோ ஆராவது mask போட்டிருக்கினமோ பாருங்கோ?நீங்களும் போடேல்லை, யாருமே mask போடாமல்த்தானே போகினம். நாங்கள் பாதுகாப்பை கடைபிடிக்காமல்த்தானே யாழப்பாணத்திலை இப்படி மோசமாய் கொரோனா பரவினது.
B- என்ன தம்பி சொல்றாய் அரசாங்கம்தானே இஞ்சை கொரோனாவை கொண்டுவந்து பரப்புது! எதுக்கு முகக்கவசம்?

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு

(என்.கே. அஷோக்பரன்)

மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது.

தீவுப்பகுதியை வளமாக்கும் கண்டல் காடுகள் – ஒரு கடற்படை அதிகாரியின் விடா முயற்சி

கரையோரப் பகுதிகளை ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளிலிருந்து காத்தல், மண்ணரிப்பைத் தடுத்தல் முதல் அருகே வாழும் மனிதருக்குத் தேவையான கடலுணவு மற்றும் எரிபொருட் தேவைகளை வழங்கிவரும் இயற்கையின் கொடையான கண்டல் தாவரங்கள்கடந்த காலங்களில் இலங்கையில் பேரழிவுக்குட்பட்டு வந்தன. போர்க்காலத்தில் பெரும்பாலானவர்கள் தமது விறகுத் தேவைக்கு இத் தாவரங்களையே பெரிதும் பயன்படுத்தினார்கள்.

“உலக காடுகள்தினம்”

(Ramamurthi Ram)

எச்சரிக்கையை
-உணர்ந்து வாழ்வோம்!!
இன்றுமட்டுமல்ல தினந்தோறும் காடுகள் தினமாக அனுசரித்து எஞ்சிய காட்டைக் காப்பாற்றினால் மட்டுமே மனிதர்களாகிய நாம் இந்த பூமியில் மிஞ்சுவோம்…

யாரிடம் சொல்லியழ? பியர் குடித்த உயிர்

(எஸ். றொசேரியன் லெம்பேட்)

தலைமன்னார் பியர் பகுதியில், செவ்வாய்க்கிழமை (16) மதியம் இரண்டு மணியளவில், மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸூம் அநுராதபுரத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணித்த ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு மாணவர்கள், ஆசிரியர், பொது மக்கள் என 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

நீயா, நானா? யாருக்கு யார் அச்சுறுத்தல்?

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

‘ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்’ என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்குள் ஓடோடி வருகின்றன. காடுகளின் காவலனாக விளங்கும் யானைகள், பல விதமான அச்சுறுத்தல்களைச் சந்திப்பதாலேயே இந்நிலைமை தொடர்கின்றது.

வல்லாதிக்க நாடுகளின் புதிய ஆயுதம்!

(Maniam Shanmugam)

மேற்குலக நாடுகள் தமது உலக ஆதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதற்காக புதிய புதிய ஆயுதங்களைக் கண்டு பிடித்து வருவதில் சமர்த்தானவை. இப்பொழுது அவை கண்டு பிடித்திருக்கும் ஆயுதம் கொவிட் – 19இற்கு எதிரான தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி இந்த ஆதிக்க நாடுகளால் கொவிட்டுக்கு எதிராக மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. புள்ளி விபரங்களைப் பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

செங்கை ஆழியான்

(Manikkavasagar Vaitialingam)

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்.

மனிதர்கள்தான் கடவுள்

(R Ram Doss)

வோளாங்கண்ணி போகும் வழியில்,
மதிய உணவுக்காக பஸ்ஸை திருவாரூரில் ஹோட்டலில் நிறுத்திய
போது தான்,
அவரை கவனித்தேன்,
அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்…
கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும்,
வாயில் விசிலுமாய்,
ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்…