தேவை ஒரு தலைமைத்துவச் சங்கிலி

(மொஹமட் பாதுஷா )

இலங்கையின் தேசிய அரசியலையும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலையும் தொடர்ச்சியாக கூர்ந்து நோக்குவோர், இந்த நாட்டை அல்லது ஒரு இனக் குழுமத்தை ஆள்வதற்கான தலைமைத்துவச் சங்கிலியில் இடைவெளி ஒன்று காணப்படுகின்றமையை அவதானிப்பார்கள்.  

உலகின் முதல் பெண் பிரதமரும் வேர்விட்ட இனவாதமும்

1959இல் பண்டாரநாயக்கவின் கொலை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு உள்முரண்பாடுகளால் ஊசலாடியது என்பதையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் வெளிக்கொண்டுவந்தது. இனிமேலும் இலங்கையின் பௌத்த பிக்குகள் அனைத்தையும் துறந்த துறவிகள் அல்ல என்ற ஏற்கக் கடினமான உண்மையை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது.

தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம்

(லக்ஸ்மன்)

இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

மதிப்புக்குரிய தர்மசிறி பண்டாரநாயக்க…!

(அ.யேசுராசா)

நேற்று இரவு, யாழ்ப்பாணம் ‘றீகல்’ திரையரங்கில் நடைபெற்ற – 9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனைக்கான விருது, புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது! ; மிக்க மகிழ்ச்சியைத் தருவ தாக அது இருக்கிறது! அவருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்து!

திம்புவா…? இலங்கை – இந்தியா…? இமாலயாவா…?

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தல் என்பதாக தற்போதும் ஒரு புது முயற்சி ஆரம்பமாகி இருப்பதாக செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இதற்கான பலபரப்பை ஏற்படுத்தியவர்கள் இதற்கான முன்னெடுப்பை உலகத் தமிழர்(Global Tamil Forum) (GTF).

7500 ரூபாவில் ஒரு நாட்டைக் கைப்பற்றல்

இலங்கையில் உள்ள சீன தூதுவர் குய் சென் ஹாங், வட மாகாணத்துக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நவம்பர் 5-7 ஆம் திகதிகளில் முன்னெடுத்து  ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஓப்பன்ஹைமர்

(ரதன்)

கிறிஸ்தோபர் நோலன் இன்று உலகின் மிக முக்கியமான ஹொலிவூட் இயக்குனர். இவரது கதை சொல்லும் முறையானது நேர் கோட்டில் அமையாது தொகையற்றிருக்கும். துண்டு, துண்டாக ஒழுங்கற்றிருக்கும். (நொன்-லீனியர்) இவை எதிரொலிகளாக, சம்பவங்களின் நினைவுகளாக, இடைச் செருகல்களாகவிருக்கும். ஆடையாளச் சிக்கல்கள், ஒழுக்க மீறல், தார்மீக பிரச்சினைகளை இவரது திரைக் கதை வெளிப்படுத்தினாலும், உலக ஒழுங்கை மீறுவதாக ஒரு மாயை தோற்றுவிக்கும்.

மார்கழி 13 1986….

மார்கழி 13 இதே நாள் 1986 ஆம் ஆண்டு இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடை செய்யும் தாக்குதலை புலிகள் தொடுத்தார்கள். தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டார்கள். போராட்டத்திலிருந்து அந்நியமாக்கப்பட்டார்கள்.

முன்கூட்டிய தயாரிப்பு இல்லாத புதுடெல்லி சந்திப்பு

(அ. நிக்ஸன்)

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால், கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. 

ஒரு பெட்டிக் கடையின் கதை

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள்.
யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி.

அக்கிராமத்தின் “நடுச்சென்ரறில்” இருக்கிறது இக்கடை. இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின் வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.