போய் வாருங்கள் தோழர் சீவரத்தினம் அவர்களே!

(Maniam Shanmugam)

ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கையைச் சேர்ந்த தோழர் அ.சீவரத்தினம் அவர்கள் இன்றைய தினம் (ஒக்ரோபர் 25) தமது 79ஆவது வயதில் இயற்கை எய்திய துயரச் செய்தி கிடைத்துள்ளது. தனது இறுதி மூச்சுவரை மார்க்சிய தத்துவத்தின்பால் பற்ருறுதியுடன் வாழ்ந்த தோழர்களில் குறிப்பிடக்கூடிய தோழர்களில் ஒருவர் அவர்.
எனக்கும் அவருக்குமான தோழமை மிக ஆழமானதும், சுமார் 55 ஆண்டுகள் பழமையானதுமாகும்.

1966ஆம் ஆண்டில் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தில் இணைந்து முழுநேரமாகப் பணியாற்றுவதற்காக கிளிநொச்சிக்குச் சென்றபோது, தோழர் சீவரத்தினத்தின் அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது அவர் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசாங்க காணி அலுவலகத்தில் ஒரு எழுதுவினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். காணி அலுவலகத்துக்குச் சொந்தமான ஒரு விடுதி வீட்டில் தனது மனைவியுடனும், ஒரே கைக்குழந்தை மகனான துஸ்யந்தனுடனும் தங்கியிருந்தார்.

கிளிநொச்சியில் கட்சி வேலைகளில் ஈடுடிட்டிருந்த எம்முடன் தொடர்பு கிடைத்ததும் அடிக்கடி எம்மை அழைத்து தனது வீட்டில் வைத்து அரசியல் கலந்துரையாடல்கள் நடத்துவதும், அதில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு வழங்குவதும் அவரது வழமையாக இருந்தது. அவரது செயற்பாடுகளுக்கு அவரது துணைவியார் எப்பொழுதும் புன்னகையுடன் மனப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியதை என் போன்றவர்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். (அவரைப்போல கிளிநொச்சியில் நில அளவையாளராகப் பணி புரிந்த புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற தோழர் தனபாலசிங்கமும் செயற்பட்டார் என்பதை இந்த இடத்தில் நினைவுகூருவது அவசியமாகும்)

தோழர் சீவரத்தினம் கட்சிப் பணிகளுக்கு வழங்கிய பங்களிப்பு பன்முகப்பட்டதாகும். அந்தக் காலத்தில் கிளிநொச்சியில் கட்சி மற்றும் விவசாய சங்க பிரசுரங்களை வெளியிடுவதற்கு எமக்கு அச்சக வசதிகளோ, பண வசதியோ இல்லாமல் இருந்த சூழ்நிலையில் அவர் தனது காணி அலுவலகத்தில் உள்ள தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் எமது அறிக்கைகளை தானே தமிழில் தட்டச்சு செய்து, பின்னர் அதை ‘றோணியோ’ மெசினில் அச்சிட்டுத் தந்து உதவியிருக்கிறார். இது அன்றைய சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புள்ள துணிகரமான செயல்.

அது மாத்திரமின்றி, நெருக்கடியான நேரங்களில் பொலிஸ் கெடுபிடிகளிலிருந்து சில தோழர்களைப் பாதுகாத்தும் உதவியிருக்கிறார்.
அன்றைய ஐ.தே.க அரசுக்கு எதிரான அரசாங்க ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தின் போது, அந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தோழர் சீவரத்தினம் தான் முக்கிய பங்கு வகித்த அரசாங்க லிகிதர் சேவைச் சங்கத்தின் ஊடாக அரும் பணியாற்றியிருக்கிறார். இப்படி பல பணிகளை கட்சிக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் ஆற்றியிருக்கிறார்.

1991இல் புலிகள் என்னைப் பிடித்துச் சென்று தமது வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் சித்திரவதை செய்து விடுவித்த பின்னர் என்னை வந்து பார்த்ததுடன், ‘உவங்கடை ஆட்டம் கன நளைக்கு இருக்காது’ எனத் தெம்பூட்டியும் வைத்தார். அதுமாத்திரமின்றி ‘வானவில் படிப்பு வட்டம்’ என்ற பெயரில் என் போன்ற பலரையும் சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு பௌர்ணமி தினமும் தனது ஆனைக்கோட்டை இல்லத்தில் கருத்தரங்குகளையும் நடத்தி வந்தார். (அதன் நினைவாக அந்த வானவில் என்ற பெயரையே நாம் கனடாவில் இருந்து வெளியிடும் எமது மாதப் பத்திரிகைக்கும் பின்னர் சூட்டினோம். இறுதிவரை அதன் அச்சுப் பிரதியொன்றை மாதம் தவறாமல் பெற்று வாசித்தும் வந்தார்)

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மிகவும் நேசித்த துணைவியார் காலமானபோது மிகவும் மனமுடைந்து போனார். ஆனாலும் மக்கள் பணிகளின் மூலம் அந்தத் துயரத்தை தேற்றிக் கொண்டார்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியும், அதிலிருந்து பிரிந்து உருவான மார்க்சிய – லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியும் செயலிழந்து போன பின்னர், பிற்காலத்தில் அவர் வேறு சில இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியதாக அறிந்தேன்.

ஆனால் எது எப்படியிருப்பினும் தோழர் சீவரத்தினம் தான் வரித்துக்கொண்ட மார்க்சியக் கொள்கைகளிலிருந்து இறுதிவரை தடம் புரளாமலே வாழ்ந்து வந்தார் என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்கும், ஆத்ம திருப்திக்கும் உரிய விடயமாகும்.
அத்தகைய ஒரு மகத்தான தோழரின் மறையையொட்டி எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், எமது செங்கொடியைத் தாழ்த்தி புரட்சிகர அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

என்னத்த சொல்றது…

இந்தியாவிலேயே முதல் நடிகர்..

தமிழ் வசன உச்சரிப்பில் அனைவருமே வியப்பது நடிகர் திலகத்தை பார்த்துதான். ஆனால் அப்படிப்பட்ட நடிகர் திலகமே சொன்னார் நான் இரண்டாவது ஆள் தான் முதல் ஆள் அவர் தான் என்று.. அந்த அவர் வேறு யாருமல்ல, சேடப்பட்டி சூரிய நாராயணன் ராஜேந்திரன் என்ற எஸ்எஸ்ஆர்.

இழுவை வலைத் தடைச் சட்டத்தின் அவசியம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

திங்கட்கிழமை (18) இரவு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படகொன்றின் மீது, இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகு மோதியதில், மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்கிற மீனவரே இவ்வாறு உயிரிழந்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகி, 40 நாள்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 14

(அ. வரதராஜா பெருமாள்)

 இக்கட்டுரைத் தொடரின் முன்னைய பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படையாக உள்ள குறைபாடுகளை தொடர்ச்சியாக அவதானித்துள்ளோம். இந்த அடிப்படைக் குறைபாடுகளுக்கு காரணமாக பல்வேறு வகைப் பட்ட உற்பத்தித் துறைகளிலும் காணப்படுகின்ற குறைவிருத்தி நிலைமைகளை நாம் அடையாளம் கண்டு புரிந்து கொள்வதுவும் அவசியமாகும். இக்கட்டுரைத் தொடரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே இலங்கையின் பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் உள்ள குறைவிருத்தி நிலைமைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இப்பகுதியில் பிரதானமான பொருளாதாரத் துறைகளில் உள்ள விருத்தியற்ற நிலைமைகள் அல்லது சமகால நிலைமைகளுக்குப் பொருத்தமான அளவுக்கு வளர்ச்சியடையாது இருக்கும் நிலைமைகளை நாம் தொடரந்து அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளிலுமுள்ள அனைத்து உற்பத்திகள் தொடர்பாகவும் நிலவும் நிலைமைகளை இங்கு விரிவாக ஆராய்வது சாத்தியமற்றது. எனவே இங்கு சில பிரதானமான – அடிப்படையான பண்ட உற்பத்திகளின் நிலைமைகளை நோக்குவதன் மூலம் முழுமையையும் புரிந்து முற்படுவோம். அந்த வகையில் முதலாவதாக இங்கே இலங்கையின் தேயிலை உற்பத்தித் துறையை நோக்கலாம். 

மாடு மேய்க்க எங்கே செல்வது?

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

வன்னியை பொறுத்த வரையில், கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாகக் காணப்படுகின்றபோதும், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள், விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜெனீவா வாக்குறுதிகளும் உள்நாட்டு மறுப்புகளும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தம்மைப் பதவியில் அமர்த்தும் மக்களையாவது ஏமாற்றக் கூடாது. ஆனால், அவர்கள் ஏமாற்றுகிறார்கள். மக்களில் பெரும்பாலானவர்கள் அரசியல், பொருளியல் போன்ற விடயங்களைப் படிக்காதவர்கள். படித்தவர்களும்கூட, அரசியல்வாதிகள் எதைக் கூறினாலும் சுயநலத்துக்காக ‘ஆமாம் சாமி’ போடுகிறார்கள் அல்லது, எதையும் எதிர்க்கிறார்கள். எனவே, அரசியல்வாதிகள் இலகுவில் மக்களை ஏமாற்றலாம்.

குழிகளாகும் கிணறுகள்

(அ. அகரன்)

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கிணங்க, நீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் உலகத்தில் உள்ள குடிநீரின் அளவு குறைவடைந்து செல்கின்றமையும் மாசடையும் தன்மையும் உயர்ச்சி வேகத்தையே காட்டுகின்றது.

சீனாவில் வலுப்பெரும் ’Worker Lives Matter’

சீனாவில் பல நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான வேலை நேரத்தை எதிர்த்து ”workers lives matters” என்னும் பிரச்சாரத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

மாடுகளையும் புண்ணாக்கிய விலையுயர்வு

அரசாங்கத்தினால் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானங்களும் “மரமேறி விழுந்தவனை மா​டேறி மித்த” கதையாகத்தான் இருக்கிறது. இறுதியில் எங்கே போய் நிற்கப்​போகிறது என்பது தெரியாமலே இருக்கிறது. அடுத்த வேளைக்கு என்ன செய்வோமென நினைப்போரின் மனங்களில் கொதித்த எண்​ணெயை வார்த்தால் போல விலைவாசி அதிகரிப்புகள் ஒவ்வொரு நாளும் எகிறிக் கொண்டே போகின்றன.

யாரும்
தீவு தான்

(Manikkavasagar Vaitialingam)

இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். “சப்த” என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது.
ஆனால் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.1974 இல் கச்சதீவும் சேர்ந்து விட்டது.