கடும் வெப்பத்துக்கு 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

குஜராத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

பங்களாதேஷ் சிறையில் தீ: கைதிகள் தப்பி ஓட்டம்

பங்களாதேஷில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  இதனால் ஏற்பட்டுள்ள வன்முறையில் 39 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூதூர் விபத்தில் 52 யாத்திரிகர்கள் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம்  நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் ஒன்று, இன்று மாலை கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வங்கதேச வன்முறை: 105 பேர் பலி; ஊரடங்கு அமல்

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

“22” க்கான ஆணியை பிடிங்கி திருப்பி அடித்தார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்ட மூலம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை

அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கண்டியில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி, தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக  புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

மீண்டும் குழப்பம்: வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (15) காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதலில் 71 பேர் பலி

காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த  தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சூரிய சக்தியை ஜனாதிபதி திறந்து வைத்தார்

வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.