ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு

வருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.

(“ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூர் விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிப்பு

நாடாளுமன்றத்தில், நேற்றுக் காலை சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுன் பிரகாரம், உள்நாட்டு விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான அனுமதியின் பின்னர், குறிப்பிடப்பட்ட உள்நாட்டு விமானச் சேவையை ஆரம்பிப்பதற்கும் பொல்கஹாவெல- குருநாகல் வரையிலும், அளுத்கமை – காலி பகுதிகளுக்கு, இரட்டை புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கும் 1.05 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று திட்டங்களுக்கும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொது- தனியார் பங்குகளின் அடிப்படையிலேயே, இந்த விமானச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டங்களை, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு கையாளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

36 அகதிகள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது.

(“36 அகதிகள் நாடு திரும்பினர்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும்

உரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்தும் இலக்கோடு 2017ஆம் ஆண்டுக்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும் எதிர்வரும் 2017.04.02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு காவத்தை நகர கூட்டுறவு சங்க பண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அச் சங்கத்தின் வருடாந்த அறிக்கையை சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாவும், வருடாந்த கணக்கறிக்கையை பொருளாளர் என்.தியாகராஜுவும், முன்னேற்ற அறிக்கையை உப தலைவர் எம். புண்ணியசீலனும் வழங்கவுள்ளனர்.

(“மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

‘புலிகள் தொடர்பில் தகவல் இல்லை’

“1972 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தம்மிடம் இல்லை” என, அரசாங்கம், நாடாளுமன்றில் நேற்று (23) அறிவித்தது. அத்துடன், அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்த 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

(“‘புலிகள் தொடர்பில் தகவல் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்த கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல்

பிரபாகரனும் புலிகளும் கொலை வெறி பிடித்து, ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய பொதுமக்களைக் கொலை செய்த போதும் எதுவித கண்டனமும் தெரிவிக்காமல், கிறிஸ்தவன் என்ற ரீதியிலேயே ஆதரித்தவர்தான் இந்த கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கும் பாதிரி. நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன்விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கின்றேன்.

(“பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்த கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல்” தொடர்ந்து வாசிக்க…)

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்

ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தாக்குதலாளி எனக் கருதப்படுபவர், ஆயுதந்தரித்த பொலிஸரால் சுடப்பட்டதாக, சபாநாயகர் டேவிட் லிடின்ங்டன் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில், குறைந்தது ஐந்து பேர், காரால் மோதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு பெண் இறந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஏனையவர்கள் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(“பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்” தொடர்ந்து வாசிக்க…)

ஹொம்ஸ் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள், போராளிகள் வெளியேற ஆரம்பித்தனர்

சிரிய அரசாங்கத்துடனான, ரஷ்யாவினால் ஆதரவளிக்கப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ், ஹொம்ஸிலிலுள்ள இறுதி நிலையிலிருந்து, எதிரணியினரும் அவர்களின் குடும்பத்தினரும், நேற்று முன்தினம் (18) வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமும் வெளியேறுதலைக் கண்ட ஒருவரும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வெளியேறுதல்களில், பாரியதொன்றாக இது காணப்படும் என நம்பப்படுகிறது.

(“ஹொம்ஸ் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள், போராளிகள் வெளியேற ஆரம்பித்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்

யேமன் கரையோரத்தில், ஹெலிகொப்டர் ஒன்று, கடந்த வியாழக்கிழமை (16) படகொன்றைத் தாக்கியதில், 42 சோமாலிய அகதிகள் கொல்லப்பட்டதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு, யேமனில் போரில் ஈடுபடும் சவூதி தலைமையிலான கூட்டணியை, சோமாலியா கோரியுள்ளது.

(“ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

‘முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்’

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(“‘முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)