ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!

(எஸ். ஹமீத்.)

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் அம்னா ,வயது 35 . மீனோ, வயது 26 . இவ்விருவரும் சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் பார்த்திருக்க, கோணிச் சாக்குகளில் கட்டப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

(“ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!” தொடர்ந்து வாசிக்க…)

தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!

வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

(“தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!” தொடர்ந்து வாசிக்க…)

11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி!

விடுதலைபுலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் இணைந்து திரிகோணமலையின் சாம்பூரில் “மறுவாழ்வளிக்கப்பட்ட ஐக்கிய புலிகள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். தமிழர்கள் பெயரில் இயங்கும் பிரதான கட்சிகள் தமிழர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக புதிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்களுக்கு மாற்று சக்தியாக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதில் தற்போது வரை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய 11 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் உதயத்தால் மீண்டும் புலிகள் அமைப்பு உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை அரசு உள்ளதாக தி இந்து ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என் தலைக்கு ரூ. 1 கோடி பரிசா? : மிரட்டலுக்கு பயப்படமட்டேன் என்கிறார் பினராயி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1கோடி பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகளின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குந்தன் சந்திரவாத் கூறுகையில், நான் தெரிவித்தது என்னுடைய சொந்த கருத்து என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என்றார்.

அரசியலமைப்பு: புதிதாகவே வரும்….? திருத்தம்தான் வரும்…..?

அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகள் உள்ளமையை, நேற்று (01) இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து​ தெரிவிக்கையில்,

(“அரசியலமைப்பு: புதிதாகவே வரும்….? திருத்தம்தான் வரும்…..?” தொடர்ந்து வாசிக்க…)

‘கேப்பாப்புலவுமுகாம் இருக்கும்’

“முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு பகுதியிலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி, உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு, முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(01) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மக்களின் காணிகள் இன்று (நேற்று) விடுவிப்பதாக கூறப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். தனக்கு அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின் படி, 42 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், அங்குள்ள விமானப் படை முகாம் அகற்றப்படமாட்டாது, பலாலி பகுதியில் எவ்வாறு படையினரும் பொதுமக்களும் இணைந்ததாக இருக்கின்றனரோ, அதனைபோல இங்கேயும் இருப்பர்” என்றார்.

மரண அறிவித்தல்

திரு நோபேட் ஞானப்பிரகாசம்
தோற்றம் : 2 சனவரி 1947 — மறைவு : 24 பெப்ரவரி 2017
”இறைவன் கரங்கள் எந்தன் உறைவிடமானது”
யாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Arnsberg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நோபேட் ஞானப்பிரகாசம் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று விண்ணகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சவிரியம்மா(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யேசுதாசன், அக்னெஸ்(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி எலிசபெத்(வயலற்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாதனா, டிலெக்ரா, சப்றீனா நோவெல்ரா(றீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எட்வேட் குயின்ரன்(நிக்சன்), செல்வநாயகம் மதன்சிங்(மதன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மில்லியானா, றொனால்டோ, ஷாறா, றிதன், மாவின், சாம்சன் வருண், அலெக்ஸ்சாந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதியாத்திரைத் திருப்பலி 04-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Propsteikirche, Klosterstraße 1, 59821 Arnsberg, Germany எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அனைவரும் Bürgerschützengesellschaft, Promenade 18, 59821 Arnsberg, Germany எனும் முகவரியில் ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +49293121595
ஜஸ்மின் பரிமளராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +4917179909410
நிக்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915233634201
றீனா மதன் — நோர்வே
தொலைபேசி: +4747413163
றொனால்டோ — ஜெர்மனி
தொலைபேசி: +491632886552
நந்தினி கயின்ஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623546514
வருண் — ஜெர்மனி
தொலைபேசி: +4915730250656 ஸ்ரெபான் — ஜெர்மனி தொலைபேசி:+491776813862

ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ சாதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க புலானாய்வு இயக்குனர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று அமெரிக்க புலானாய்வுத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் சிஐஏ உட்பட ஒட்டுமொத்த புலானாய்வுத் துறையின் இயக்குனராக நியமிக்கப்படவுள்ள டான் கோட்ஸ் செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இந்தியா ஒரு ராக்கெட்டின் மூலம் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.

(“ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ சாதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க புலானாய்வு இயக்குனர்” தொடர்ந்து வாசிக்க…)

நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்!

(எஸ். ஹமீத்)
அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்குப் போய் வருவார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் நிலாவுக்குச் செல்வது முதன் முறையாக நிகழவிருக்கிறது. இந்த நிலாப் பயணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நேற்று ஊர்ஜிதம் செய்துள்ளது.

(“நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்!” தொடர்ந்து வாசிக்க…)

‘எமதுசமூகம் -கனடா’ ஆரம்பகலந்துரையாடல்

‘எமதுசமூகம் – கனடா’ கடந்த ஜனவரி 13ந்திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி 10ந்திகதி முதல் இயங்கும் ‘எமதுசமூகம் – கனடா’ WhatsApp குறூப்பினை ஒரு கட்டமைப்பாக ஒழுங்கமைத்து கிழக்கில் இடம்பெறும் சவால்களையும் தேவைகளையும் எவ்வாறு ஒன்றாக இணைந்து நிபர்த்தி செய்யலாமெனவும் சிறுதொழிற்சாலைகள் அல்லது காணிகளை வாங்கி அதில் பயன்பெறுவதற்குமான ஒரு திட்டத்தினையும் வகுக்கலாம் எனஎண்ணியுள்ளோம். அதனடிப்படையில் கிழக்கிலங்கையின் நமது நிலம், பொருளாதாரம், கல்வி, பதவி போன்றவற்றில் எவ்வாறு வளர்ச்சியடையலாம் என்பன போன்ற ஆலோசனைகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தவுள்ளோம். இங்குபலர் மண்ணிற்கும் மக்களுக்குமாக பணியாற்றிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. எனவே எமதுசமூகத்திற்கு பயனுள்ள ஆலோசனைகளை கலந்துரையாட உங்களை அழைக்கின்றோம்.  மேலும் எமது சமூகம் கனடா WhatsApp இல்உங்கள் நண்பர்கள் விரும்பின் பெயர் WhatsApp இலக்கத்தையும் தந்தால் இணைத்துக்கொள்ளலாம்.
Meeting Date: March – 5th Sunday Time: 2.00 PM Place: Etobicoke Civic centre # 399 – The West Mall (427 & Burnhamthope)
நன்றி.