காலநிலை மாற்றத்திற்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் இடையிலான தொடர்பு

காலநிலை மாற்றத்திற்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் இடையிலான தொடர்பை பலர் கவனிப்பதில்லை. 2006 – 2011 காலப் பகுதியில், சிரியாவில் கடுமையான வரட்சி நிலவியது. அதற்கு முன்பிருந்தே, நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு ஐம்பது சதவீதம் குறைந்தது. விவசாயத்தை நம்பி வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள், நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள். சிரிய அரசு, பணப் பயிர்களாக கருதப் பட்ட, கோதுமை, பருத்தி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், பிற உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தவறாக கையாளப்பட்ட நீர்ப்பாசனமும் விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. கிராமங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களால், நகரங்களில் சனத்தொகை பெருக்கம் அதிகரித்தது. ஏற்கனவே ஈராக் போர் காரணமாக இடம்பெயர்ந்து வந்த அகதிகளும் ஏராளமாக இருந்தனர். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
மக்கட்தொகைப் பெருக்கம், விவசாய உற்பத்தி வீழ்ச்சி, வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி போன்ற அனைத்துக் காரணங்களும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருந்தன. (நன்றி: Le Monde diplomatique, september 2015)

குற்றாச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தன்னுடன் கோபமுற்றுள்ளதாக கூறி மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்த வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பிலுள்ள தலைவர்களிடையே மோதலை உண்டாக்கும் நோக்கிலேயே குறிப்பிட்ட சிலரால் இவ்வாறான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாங்களின்போது தான் பங்கேற்காததால் த.தே.கூ தன்னுடன் கோபமுற்றிருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை பதவி விலக்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் கூறப்படும் செய்திகள் குறித்து பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறானதொரு பிரச்சினையோ அல்லது முரண்பாடுகளோ த.தே.கூட்டமைப்பிற்குள் இல்லை எனவும் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னுடன் சுமுகமான முறையிலேயே பழகுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வரதராஜப்பெருமாள்

இன்று யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் யாழப்பாண சர்வதேச சினிமா விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தென்னிலங்கை , இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிருந்து பலர் பங்குகொண்டனர். அரங்கு நிறைந்த பர்வையளர்களுடன் நீண்டகாலத் திற்குப் பிறகு பல்கலைக்கழகத்தைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. விழா அழகாகவும் எளிமையாகவும் நடந்தது. முதல் நாள் காட்சியாக PHOENIX எனும் ஜெர்மானிய திரைப்படம் காண்பிக்கப்பட்டது.இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளரும் ஈபிஆர்எல்எவ் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபை முதல்வரும் கலந்துகொண்டார். 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடவெளி வரதராஜப்பெருமாள் போன்றவர்களையும் யாழ் பல்கலைக்கழகம் வரை சுதந்திரமாக நடமாட வைத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளி வந்தது உண்மை!

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுவயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு,மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம் பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், யுத்தம் நடந்து முடிந்த பின் தமிழ் மக்களை அப்போதைய மஹிந்த அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்று உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தார்.

(“மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளி வந்தது உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவுடன் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை மீள் மின்னேற்றலாம்

வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மின்னை மீள் நிரப்பும் நிலையங்களின் உபகரண கட்டமைப்பு நாடளாவிய ரீதியாக இல்லாமையினால் நுகர்வோர் நெருக்கடியை எதிர்நோக்குவதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்காலத்தில் மோட்டார்சைக்கிளின் பாவனையை குறைத்து, துவிச்சக்கரவண்டியின் பாவனையை அதிகரிக்குமாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி பரிந்துரை செய்துள்ளார்.

சம்பூரிலிருந்து கொழும்புக்கு நேரடி பஸ் சேவை

சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை 30 வருடங்களின் பின்னர் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. சம்பூர் கட்டைப்பறிச்சான் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வினையடுத்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நேற்று முதல் சம்பூர் கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பஸ், சம்பூரிலிருந்து இரவு பத்துமணிக்கு புறப்பட்டு அதிகாலை காலை ஆறுமணிக்கு கொழும்பு கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தினை வந்தடைந்ததன் பின்னர் அங்கிருந்து வௌ்ளவத்தையில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, நாளைய தினம் (புதன்கிழமை) கையளிக்கவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வினைத் தொடக்கி உரையாற்றிய போதே, அல் ஹுஸைன் இவ்வாறு தெரிவித்தார்.

(“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

அத்தனகல அமைப்பாளராக சந்திரிகா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சினையை பெரிதுபடுத்தி சிலர் குளிர்காய முனைகின்றனர் – முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

 

கட்சிக்குள் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சாதாரண விடயமென்றும், அதனை ஒருசில சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் பெரிதுபடுத்தி அதில் குளிர்காய முனைவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின்போது முதலமைச்சர் நடந்துகொண்ட விதம், குறிப்பாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து கட்சிக்குள் கடந்த நாட்களாக பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் தெரிவித்தபோதே, இவ்வாறு குறிப்பிட்டார்.

(“பிரச்சினையை பெரிதுபடுத்தி சிலர் குளிர்காய முனைகின்றனர் – முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)