தமிழ் நாடு இந்துவத்துவா ஆதிக்கத்திற்குள் உள்ளாகுமா….?

(சாகரன்)
தமிழ் நாட்டில் அண்மைக்காலமாக நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் அதீத தலையீட்டில் ஒரு பொம்மை அரசு ஆட்சிசெய்கின்றதுல் என்பதை கட்டியம் காட்டி நிற்கின்றன.
மரணம் அடைந்த ஜெயலலிதாவின் மத்திய அரசுக்கு அடி பணியாத தன்னாட்சியைத் தொடர்ந்து இதற்கு பாடம் புகட்டல் என்பதில் இருந்து ஆரம்பமான இந்த ஆட்டம் அவரின் மர்ம மரணத்துடன் நின்று விடவில்லை. இந்த மர்ம மரணத்தின் முடிச்சுக்களும் சசிகலா போன்றவர்களின் கைதுகளும்.. தினகரனின் தனிவழியும்… பிரிந்து நின்று போர் கொடி தூக்கி தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் என்று இரட்டைக் குழல் வெற்றுத் துப்பாக்கி போல் பாஜகவின் விருப்ப அரசியலும் இதனை நிறுவியே நிற்கின்றன.

காவிரி நிதிப பங்கீடுபற்றிய உச்ச நீதி மன்றத் தீர்பை மதியாது காலக் கெடுவான 60 நாள்கள் வரை காத்திருந்து இறுதியில் நீதி மன்றத்திடமே மீண்டும் விளக்கம் கேட்டிருக்கின்றோம் என்ற மத்திய பாஜக அரசின் செயற்பாடும்; இதற்கு எதிர்பு தெரிவிப்பது போன்ற பாராளுமன்றத்தை முடக்கி நம்பிக்கையில்லா பிரேரணை தடை போட்ட ஜெயலலலிதா இல்லாத ஆனால் வரிக்கு வரி அம்மா ஆட்சி என்று ஆதி இருந்து அந்த தமிழ் நாடு ஆட்சி உறுப்பினர்களின் புராணம் பாடும் செயற்பாடுகள் அதிமுக தமது சுயத்தின இழந்து எவ்வளவோ காலங்கள் ஆகிவிட்டன என்பதையே கோடிட்டு காட்டுகின்றன.

தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் எப்பாடு பட்டாவது தனது ஆட்சி அதிகாரக் காலை நேரடியாகவோ அது முடியாவிட்டால் மறைமுகமாகவோ பதிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே இது பார்க்கப்பட வேண்டும். எச் ராஜாகளின் பெரியார் சலையை உடைப்போம் என்ற ஏதெச்சாகார பேச்சுகளும் ரத யதாத்திரை செயற்பாடுகளும் இதற்கு வழி வகுத்தும் நிற்கின்றன.
பெரியாரின் பகுத்திறவுக் கோட்பாடும் இதன் செயற்பாடுகளும் சுரண்டலில் ஈடுபட்ட ‘உயர்தட்டு’ சமூக அடுக்காக பார்பனியம் பார்க்கப்பட்டதும் இதன் தொடர்சியாக பார்பனியத்திற்கு எதிரான செயற்பாடும் மக்கள் எழுச்சியும் திராவிடர் கழகங்களாக பல கட்சியாக பிரிந்து நின்றாலும் இன்றும் சாமி கும்பிட்டாலும் பெரியாரிச சிந்தனையின் வெளிப்பாடுகளை தமிழ் நாட்டின் பல்வேறு அடிமட்ட மக்கள் பிரிவினரிடையே ஆழமாக இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துவத்துவா அமைப்புகள் தமது வேலைகளை தமிழ் நாட்டில் இன்றும் காட்ட முடியாத சூழ்நிலையில் நிலவ காரணமாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

காவிகளின் சேட்டைகளிலும் ஏனைய வகுப்புவாத சாதி வெறிகளில் விழிப்படைந்த தமிழகம் ஏனைய இந்திய வடமாநிலங்கள் போலன்றி இவற்றில் ‘தெளிவாகவே’ இருக்கின்றது. இது தமிழகத்தின் பலமாக இருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. மறு புறத்து திராவிட பாரம்பரிய வேர்கள் தம்மை மக்கள் உட்பட யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் தமக்கான வாக்கு வங்கிகளை இதுவரை அசைக்க முடியவில்லை என்பதனினால் ஏற்பட்ட மமதை தத்தமது ஆட்சிக்காலத்தில் ஊழல் என்று தாராளமாக செய்தே வந்திருக்கின்றன. இன்னும் விசாரிகப்பட வேண்டிய ஊழல் பட்டியல் இருந்து கொண்டும்தான் இருக்கின்றன.

இந்த ஊழல் பட்டியலை தனது கைகளில் வைத்த வண்ணமே மத்திய பாஜக தமிழ் நாட்டின் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டையும் ஒரு எல்லை மீறி தனக்கு எதிராக செயற்படவிடாமல் கடிவாளம் போட்டிருக்கின்றன. இதுவே ஜெயலலிதா போன் ஆளுமை திகிலென மறைந்த பின்பும் அதிமுக பல கூறுகளாக பிரிந்த பின்பும் தன்வசம் 90 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சட்டசபையில் வைத்திருந்தும் ஸ்டாலின் போன்றவர்களால் கூட தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

தேசியக் கட்சியான காங்கிரஸ் மூப்பனார் காலத்திற்கு பின்னராக தமிழக ஆதரவு வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தளம்பல்களும் இதற்கு ஏதுவாக அமைந்துவிட்டன. கருணாநிதி என்ற ஆளுமையின் முதுமையும் இதற்கு முந்திய குடும்ப உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாத கழுத்து இறுக்கல்களும் இவரகளுடன் இணைந்து பயணித்து தமிழ் நாட்டு அரசியலில் வெளிக்கரமான பாஜக வை முழமையாக அம்பலப்படுத்தி வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்திய நாடு முழுவதும் தனது எதேச்சாகார இந்துவத்துவா கொள்கை மூலம் ஆட்சியை நகர்த்த முற்படும் காவிகளை கட்டிற்குள் கொண்டுவர எதிரணிகளை தற்காலிகமாகவேனும் இணைய வைத்திருக்கின்றன. இவற்றையும் மீறி திரிபுரா உட்பட கோவா வரை ஆட்சியை கைப்பற்றி இன்னும் சில மாநிலங்கள்தான் பாக்கி என்று மமதையுடன் பயணப்படும் பாஜக ஆட்சியின் கரங்களை தமிழ் நாட்டிலிருந்து தவிர்க்க பிரயதனப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய நாட்டின் மதச்சார்பற்ற ஆட்சியை நிறுவுதல் என்பதற்காக காங்கிரஸ் இடதுசாரிகள் ஏனைய பிராந்திய கட்சிகள் தமக்கிடையே ஒருமைப்பாட்டுடைய விடயங்களின் அடிப்படையில் இணைந்து செயற்படுதல் பிராந்திய நலன்களில் மட்டும் தமது அரசியை நிறுத்திக்கொள்ளாது செயற்படும் பரந்துபட்ட போக்குமே தமிழ் நாட்டில் காவிகளின் வலிந்த ஆதிகத்தை நிறுத்தி பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க உதவும்.

(Apr 19, 2018)

என்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்?

(Gopikrishna Kanagalingam)

இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மிர் பகுதியில், ஆசிஃபா என்ற 8 வயதேயான சிறுமியொருத்தி, சில நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்ற செய்தி தான், இந்தியாவை இப்போது ஆக்கிரமித்திருக்கின்ற முக்கியமான செய்தியாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பெண்களுக்குப் பாதுகாப்புக் குறைவான நாடுகளுள் ஒன்றாக இன்னமும் கருதப்படுவதோடு, தினசரி ஏராளமான வன்புணர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

(“என்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்?” தொடர்ந்து வாசிக்க…)

காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி

(புருஜோத்தமன் தங்கமயில்)

வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள்.

(“காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி” தொடர்ந்து வாசிக்க…)

பதைபதைத்துத் தவிக்கிறதே மனது…

(பிருந்தா காரத்)
பாலியல் வன்கொடுமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாஜக தலைவர்களும், அவர்களது சங் பரிவார் கூட்டாளிகளும் வெளிப்படையாக ஆதரவளித்து வருவது கதுவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும் ‘பசுக் குண்டர்கள்’ கட்டவிழ்த்து விட்ட சூறையாடல்களை, வன்முறைகளை இந்திய தேசம் கண்டுள்ளது. ‘பாலியல் வன்கொடுமை புரிந்தவர்களின் பாதுகாவலர்கள்.’

(“பதைபதைத்துத் தவிக்கிறதே மனது…” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்

-அதிரன்

கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான முட்டைகளை மணலுக்குள் இட்டுப் புதைத்துவிட்டு, அந்த முட்டைகளுக்குள் இருந்து முதலைக்குட்டிகள் வெளியில் வரும் வேளை, அங்கு போய், வௌியில் வரும் குட்டிகளைப் பிடித்து விழுங்கிவிடுமாம் முதலை.

(“இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி

(கே. சஞ்சயன்)
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன.

(“சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்

மலையகத்தமிழர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டது தேசப்பற்றினால் இல்லை சமூக அந்தஸ்திற்காய்… :- தமிழ்க் கவி

சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்த நீங்கள் இதைச்சொல்லக்கூடாது அன்ரி. நீங்கள் எதுக்காக இயக்கத்துக்கு போனீங்க என்று கொஞ்சம் பின்னுக்குச்சென்று பாருங்க.

உங்களைப்போல சோத்துக்காக இயக்கத்துக்கு போனவங்கள் இல்லை வன்னிப்போராளிகள். பிறந்தது முதல் சுதந்திரக்காற்றை சுவாசித்து அந்த சுதந்திரத்திற்காய் இறுதிவரை உறுதிகுன்றாது போராடியவர்கள்.

(“தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்” தொடர்ந்து வாசிக்க…)

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு

இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே . எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம். இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று

(“அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்

(மொஹமட் பாதுஷா)
‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும். எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன.

(“மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

முன்னுரை:

‘ஒரு மனிதனின் கல்வி அவனின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல,அவனின் குடும்பத்திற்கும் அவன் வாழும் சமுகத்திற்கும் எழுச்சியும் விழிப்புணர்வு கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டுமென்பது எனது கருத்து. அக்கருத்து, பல வருடங்களாக லண்டனிலிருந்துகொண்டு தொடர்ந்த,பலதரப்பட்ட படிப்புகள், அனுபவங்கள்,ஆய்வுகளால் வந்ததாகும்.’

(“சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘” தொடர்ந்து வாசிக்க…)