சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

முன்னுரை:

‘ஒரு மனிதனின் கல்வி அவனின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல,அவனின் குடும்பத்திற்கும் அவன் வாழும் சமுகத்திற்கும் எழுச்சியும் விழிப்புணர்வு கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டுமென்பது எனது கருத்து. அக்கருத்து, பல வருடங்களாக லண்டனிலிருந்துகொண்டு தொடர்ந்த,பலதரப்பட்ட படிப்புகள், அனுபவங்கள்,ஆய்வுகளால் வந்ததாகும்.’

‘சுவாமிகள்’ என்றதும் அதன் வரைவிலக்கணம் பெரும்பாலும் காவியணிந்த, பழமைக் கருத்துக்களைத் தழுவிய,அக்கருத்துக்களை மக்களிடம் ஏதோ ஒரு வகையில் திணிக்கும் ஒரு சமயவாதி என்ற நினைவுதான் பலருக்கும் வரும். சுவாமி விபுலானந்தர் இந்த வரையறைகளுக்குள் அமிழ்த்தப்படமுடியாத பன்முகத் திறமை கொண்ட மிகச் சிறந்த புத்திஜீவியாக வாழ்ந்து பல சமய, அரசியல், இலக்கிய, சமுதாய மாற்றங்களைச்; செய்தவர்.

தமிழர்களுக்கான முதலாவது பல்கலைக்கழகமான இந்தியாவில்,அண்ணாமலை பல்கலைக் கழகம்
உருவாகக்காரணியாக இருந்தவர்களில் ஒருத்தர் மட்டுமல்ல அண்ணமலைப் பல்கலைக் கழகம்,இலங்கைப் பலகலைக்கழகத் தமிழ்துறைக்கு முதலாவது பேராசிரியராகவிருந்த பெருமையும்,ஆளுமையும் கொண்ட ஒரே ஒருத்தர்,சுவாமி விபுலானந்த அடிகளார்.

கல்வியில் மட்டுமல்லாது,சுவாமி விவேகானந்தரின்; முக்கிய நூலான ‘யாழ்நூல்’ எழுதப்பட்டதற்கு,விஞ்ஞான பட்டதாரியான விபுலானந்தருக்கு இளமையிலிருந்து அவர் வணங்கிய கண்ணகி அம்மையும்,கண்ணகியுடன் தொடர்புள்ள சிலப்பதிகாரத்திலுள்ள ஈர்ப்பும்,அதையொட்டி ஊரில் நடக்கும் சமய சடங்குகளும் அவர் அடிமனத்தில் பதிந்து கிடந்து’யாழ் நூல்’ எழுதும் உந்துதலைக்கொடுத்ததா?

அல்லது, இந்தியாவில் அவர் வாழ்ந்;த காலத்தில் தமிழகத்தில் எழுச்சி பெற்ற’தமிழ்ப் பாரம்பரியம்’ பற்றிய கருத்துக்கள் அந்த நூலுக்கு உரு கொடுத்ததா என்பதை ஆய்வது மிகவும் அவசியமான வேலையாகும்.இசையில் ஞானம் உள்ளவர்கள் அந்தப் பணியைக் கட்டாயம் தொடர்வார்கள் என்ற நப்பிக்கை எனக்கு இருக்கிறது.
முத்தமிழ் வித்தகராக. உலகுக்கு அறியப் பட்ட அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மானுடத்தின் வளர்ச்சிக்குச் செய்த பணிகள் மிகவும் விளக்கமாக ஆராயப்படவேண்டியவையாகும்;.

‘யாழ்நூல்’ ‘மாதங்க சூளாமணி’ போன்ற அற்புத நூல்களை எழுத முதல், விபுலானந்த அடிகளார்,கிழக்கிலங்கை,கல்வியின் மேம்பாட்டையுயர்த்தப் பாடுபட்டார்.அதன் நீட்சியாக,ஒட்டுமொத்தமாகக் கிழக்கிலங்கையின் உயர்மூச்சுடன் இணைந்த பாரம்பரிய இசை,இயல்,நாடக மரபை உயர்த்த எப்படி அவர் வழிகாட்டினார் என்பதையும்,கிழக்கிலங்கையின்
சமூக மேம்பாட்டை முன்னெடுத்ததற்கு அவருக்கு உந்துதல்களாகவிருந்த பேராளுமைகள் யார்,என்பதையும் விளக்காமல்,சுவாமி விபுலானந்தரைப் பற்றிப் பேசமுடியாது.

1832ம் ஆண்டு,பிரித்தானியரின் கணக்குப்படி 117 எண்ணிக்கையிலுள்ள படித்த மாணவர்களைக் கொண்ட கிழக்கிலங்கையில் சுவாமிகளின் சேவையால் கல்வியும் கலைகளும் வளர்ந்தன.அவர்
காலத்தில் வாழ்ந்தவரும் அவரின் நண்பர் ஏ.எம்.ஏ அஷீர் என்பரும் தமிழ், முஸ்லிம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தினார்கள் என்பதும் சரித்திரத்தில் பதிந்திருக்கும் ஒருதகவல்.

இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்காக,அதிலும்,கிழக்கிலங்கையரின் வாழ்க்கையில் உள்ள தமிழ்,முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் பிரமாண்டமான கல்வியாலான மாற்றத்தைக் கொண்டு வந்த அவரின் அன்றைய தூய கனவின் தொடரை இன்று நாங்கள் என்னவென்று முன்னெடுக்கலாம் என்று விரிவாக ஆராய வேண்டும் என்பதற்காக இக்கட்டுரையை எழுதுகிறேன்.இளம் தலைமுறையினர் இப்பதிவைப் படித்தால் நல்லது.

1-அந்நியராட்சியில் மாற்றமடைந்து கொண்டு வந்த பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள்:

இலங்கையும் இந்தியாவும் ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆங்கிலேயரால் நிர்வகிக்கப் பட்டுக்கொண்டிருந்த 18-19ம் ஆண்டு காலத்தில் கிறிஸ்தவ பாதிரிகளால் பல பாடசாலைகள் நிறுவப் பட்டன. விபுலானந்தர்; வாழ்ந்த கால கட்டத்தில் (1882-1947),மேற்கத்திய ஆளுமையால் அழிந்து கொண்டிருக்கும் தங்கள் பாரம்பரிய கலாச்சார,சமய,பண்பாட்டு விழுமியங்களைக் காப்பாற்றி, மீழ் திறனுடன் மக்களுக்குக் கொண்டுசெல்ல இலங்கையிலும் இந்தியாவிலும் பல அரசியல் சமுதாய மாற்றங்களைப் பல அறிஞர்கள் முன்னெடுத்தார்கள்.

அந்த வரிசையில் இலங்கையைப் பொறுத்தவரையில்,சங்காலத்தில்,ஈழத்தைச் சேர்ந்த பூதந்தேவனார் தொடங்கிக் கடந்த நூற்றி ஐம்பது வருடங்களாக இலங்கையில் தமிழின் மேன்மையை வளர்க்கும் அறிஞர்களாக, ஆய்வாளர்களாக மேற்கோள் காட்டப்படும்,நல்லூர் அரசகேசரி,சபாபதி நாவலர்,சங்கர பண்டிதர்,சி.வி.தாமோதரம் பிள்ளை,சுன்னாகம் குமாரசாமிப் புலவர்,நவாலியுhர் சோமசுந்தரம் பிள்ளை,நல்லூர் ஞானப் பிரகாசம்,தனிநாயகம் அடிகள், பண்டிதமணி கணபதிப் பிள்ளை,திருகோணமலை கனகசுந்தரம்,போன்ற தகைமைகளுடன் சுவாமி விபுலானந்தரும் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தப் படுகிறார்

கிழக்கிலங்கை காரைதீவைத் தாயகமாகக்கொண்ட சாமித்தம்பி கண்ணம்மை தம்பதிகளின் புதல்வர் மயில்வாகனம் எனபவர் இளமையிலேயே அதிபெரும் புத்திஜீவியாக இருந்தார் என்பதற்கு அவர் படித்த கல்வியின் தராதரங்கள் சாட்சியங்களாகும். 1925ம் ஆண்டுக்குப் பின்,அவரின் பல திறமைகளில் ஒன்றான,அவரின் கல்வித் திட்டத்தால் கிழக்கிலங்கையிலும் மற்ற இடங்களிலும் நடந்த சமூக மாற்றங்களை இச் சிறு பதிவிற் காணலாம்;.

மயில்வாகனம் என்ற,விஞ்ஞான ஆசிரியர், துறவறமெடுப்பதற்குக் காரணம்,அக்காலத்தில் இராமகிருஷ்ண மிசன் மூலம் சமதாய மாற்றங்கள் செய்து கொண்டிருந்து விவோகானந்த அடிகளும்; (12.1.1863-1902),அத்துடன் சாதி மதம் கடந்த கல்வித் தொண்டு செய்வதற்கு,மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் உந்ததலாகவிருந்தார்கள்; என்பதே என்பது சரித்திரத்தில் பதிந்திருக்கும் பிரமாண்டமான உண்மைகளாகும்;.

இந்தியா,இலங்கை அரச நிர்வாகத்தில் ஆங்கிலேயரால் கிறிஸ்தவக் கல்வியால் ஆளுமை கொண்டிருந்த ‘உயர் சாதியினர்’,சமய கலாச்சார விழுமியங்களால் ‘வர்ணாஸரமம்’ அடிப்படையாகக் கொண்ட பலதரப் பட்ட ஒடுக்கு முறைகளைக் பாவித்து,சாதி,சமய,பாலின ரீதியில் பெரும்பான்மை மக்களை அடக்கி வைத்திருந்தார்கள்.

இந்திய மக்கள் அன்னியராட்சியாலும்,சமயத்தை முன்னெடுத்து மக்களைப் பிரித்து அந்தக் கட்டுமானங்களால்; நன்மை பெறும் ஒரு ஆதிக்க சக்தியாலும் துன்பப்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தத்தளித்தபோது, விவேகானந்தர்,எந்த சமய கட்டுமானங்கள் மக்களை வருத்துகிறதோ அதே சமயக் கோட்பாட்டிலுள்ள ஆத்மீகக் கருத்துக்களை முன்னெடுத்து மக்கள் வாழ்க்கையை மாற்றலாம் என்று போதித்தார்.

விவேகானந்தர் (நரேந்திரன்).அவர் தனது இளமைக்காலத்தில் இசையோடு மிகவும் இணைந்திருந்தார்.சமய உபதேசங்களின் வாயிலாக இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தர்,1886ல் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் இறந்ததும் அவர்களின் சீடர்கள் நரேனும் மற்ற சீடர்களும் வராக நகரில் ஒரு ‘சிறுமடம்'(முதலாவது இராமகிருஷ்ணமடம்) அமைத்தார்கள் அப்போது நரேன்’விவிஷானந்தர்’ என்ற பெயரில் அறியப் பட்டார்;.

பெரும்பான்மையான மக்கள் அவர்களின் வாழ்க்கையில் மேம்பட முடியாத நிலையையுண்டாக்கி வைத்திருக்கும் சாதி,சமய,காரணிகளைக் கண்டு மனம் நொந்தார்.

அக்கால கட்டத்தில், சாதி சமய அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் அநியாகமாக ஒடுக்கப் படுவதைத் தடுக்க பிரித்தானிய அரச முயற்சித்தாலும் ஆளுமையிலிருந்த பார்ப்பனியக் கட்டுமானங்களால் ஒட்டுமொத்த இந்தியாவின் சமுக சிந்தனையையும் அவர்களால் மாற்ற முடியாதிருந்தது.

‘சமயம் விழுமியங்கள் என்ற பெயரில்,இறந்த கணவனின் பிணத்தோடு உயிருடன் பெண்களைத் தள்ளி எரிப்பவர்கள் இந்தியக் காட்டுமிராண்டிகள்,சாதி ரீதியில் மக்களை மிருகமாக நடத்தும் மனிதமற்ற பிறவிகள்’ என்பது போன்ற பல இந்தியாவைப் பற்றிய கருத்துக்கள் அப்போது ஐரோப்பிய நாடுகளிற் பரவியிருந்தன.

இந்திய மக்கள், புதிய சிந்தனைகளுடன் பழைய கருத்துக்களைத் தூக்கியெறிந்து முன்னேற என்னவென்று உதவுவது என்று திணறினார் விவேகானந்தர்;.
மக்களின் முன்னேற்றத்தைக் கண்ணும் கருத்துமாகவிருந்த அவர் வெறும் சமய உபதேசங்களில் நம்பிக்கையிழந்தார்.
இந்திய மக்கனை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற யோசனையுடன்,தெற்கு நோக்கி வந்த விவிஷானந்தர். கன்னியாகுரிரிக் கடற்கரை அலைகளை நீந்திப் போய் ஒரு கற்குன்றில் மூன்று நாள் தியானம் செய்தார்.
அதன்பின் சென்னை வந்தார். ஓட்டுமொத்த மக்களின் முன்னேற்றத்திகுச் சாதி மதபேதம் கடந்த அறிவு கொடுக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள இளம் தலைமுறைக்குப் போதித்தார்.

சாதி சமயம் தாண்டிய மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட பல கம்பீரமான உபதேசங்களால் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க முனைந்தார்.

அவரின் மனித நேயம் சார்ந்த உபதேசங்கள் எங்கும் பரந்தது.இந்தியாவின்,தொன்மையான தத்துவமான,’ஒன்றே குலம் ஒருவனே கடவுள்’ என்ற அறம் சார்ந்த ஆத்மிகத்தை,இந்தியருக்கு மட்டமல்லாமல்,அந்நியருக்கு உபதேசம் செய்யவேண்டும் என்றும் விவேகானந்தரிடம்; பலர் சொன்னார்கள்.

கேத்ரி மன்னரின் உதவியுடனும் அவர் சுவாமிக்கு வழங்கிய ‘விவேகானந்தர்’ என்ற பெயருடன்,அமெரிக்கா சென்றார்.1893ம் ஆண்டு,சிக்காவோவில் நடந்த அகில உலக சமயப் பாராளுமன்ற மகாநாட்டில் அவர் ஆற்றிய உரை,அமெரிக்கா மட்டுமல்லாது,அகில உலகமே இந்தியாவின் ஆத்மிக வழிமுறைகளைத் திரும்பிப்பார்க்க வைத்தது.
மக்களை இறுகப் பிடித்திருக்கும் சமுதாயக்கட்டுமானங்களைத் தகர்த்து, சமயம் சார்ந்த அறமிகுந்த ஆத்மீகம் பணியின் துணையோடு இந்தியா மட்டுமல்ல, உலகம் பரந்த விதத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் போதனைகளைத் தொடர்ந்தார்; சுவாமி விவேகானந்தர்.
சமுதாய மாற்றத்திற்குப் பெண்களின் கல்வி ஞானம் அத்தியாவசியம் என உணர்ந்தார்

விவேகானந்தரின்; சிந்தனையால்,நிவேதிதா அம்மையார்,அவருக்கு,1895ல் சீடையாகி இந்தியா வந்து பெண்களுக்கான கல்வியை (1898)அறிமுகப் படுத்தினார் நிவேததிதா தேவி(மார்க்கரெட் எலிசபெத் நோபல் (28.10.1867-13.10.1911) என்ற மேற்கத்தியமாது. சுவாமி,விபுபலானந்த அடிகளாரின், மக்களை மேம்படுத்தும் கல்விச்சேவையைத் துண்டிய விவேகானந்தரின் கோட்பாடுகள் எப்படி சுவாமி விபுலானந்தரின் பொதுப்பணிகளுடன் இணைந்து கிடக்கிறது என்பதை ஆய்வுகள் செய்யும்போது அறிந்து கொள்ளலாம்.

அத்துடன் சுவாமி விபுலானந்தர் காலத்திற்கு முன்னரே, வட இலங்கையில் தமிழ் மொழி,சைவ விழுமியங்களை மீண்டெடுக்கப் பல பணிகள் செய்த ஆறுமுகநாவலா,(18.12.1822—5.12.1879) அவர்களின் சேவையும், தென் இலங்கையில் சிங்கள மொழி, பௌத்த மதத்தின் வளர்ச்சியைத் தூண்ட பல முன்னெடுப்புக்கள் எடுத்த அநாகரிக தர்மபால(17.9.1864—29.4.1935) என்ற
பௌத்த நலவாதியின் வேலைகளும் எவ்வளவு தூரம் விபுலானந்தரின் கிழக்கிலங்கையின் வளர்ச்சி பற்றிய சிந்தனைகளைத் தூண்டியது என்பதும் ஆய்வு செய்யப் படவேண்டிய முக்கிய பகுதிகளாகும்;.

ஆறுமுக நாவலர் கல்வி மூலம்,சைவ வெள்ளாள மேலாண்மையை நிலை நிறுத்தப் பாடுபட்டார். அநாகரிக தர்மபால,என்பரும் பல செயற்பாடுகள் மூலம் ‘ஆரிய சிங்கள’ அடையாளத்தை நிலைப் படுத்தப் பாடு பட்டார்.ஆனால் விபுலானந்தா அடிகளாhர் சாதி,மத.பாலின வேறுபாடற்ற கல்வியின் மூலம் மக்களின் அறிவை மேம்படுத்திய தொண்டுகள் செய்தார்

சமயவாதிகளின் இறுகிய போக்குகளை உடைக்க மக்களுக்குக் கல்வி கொடுத்து அவர்களை மேம்படுத்திய,இராமகிருஷ்ண பரமஹம்ஸர்,விவேகானந்தர்,பாரதி,அம்பேத்கார்,பெரியார்,அண்ணா போன்ற அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் அவர்களின் வெவ்வேறு ஆளுமையின் அடி;படையில்,மனித நேயம் சார்ந்த பல கருத்துக்களை முன்கொண்டு வந்தார்கள்.

விபுலானந்தரின் சமத்துவ,உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்களில் இன்னுமொரு பெரிய சக்தியான மகாகவி பாரதியார், நிவேதிதா தேவியை 1906ம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் சந்தித்தார். பாரதியார்,நிவேதிதா தேவியாரின் சமத்துவக் கோட்பாடுகளாற் கவரப் பட்டார். பாரதியின் பாடல்கள்,சமத்துவ சமதாயத்தைப் படைக்கும் ஆவலைச் செயற்படவைத்தது.

இலங்கை இந்திய நாடுகளில் நடந்த இம்மாற்றங்களுக்கு அடிகோலாக அமைந்த திருப்பங்களில் சில முக்கியமான நிகழ்ச்சிகள், மேற்கு நாடுகளில்19ம் நூற்றாண்டில், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களாகும். இதன் எதிரொலியாக.இந்தியாவில்;.வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராகவும்.சாதி பேதத்தால் மக்களைத் தீண்டாதவர்களாக்கி அடிமட்டத்தில் வைத்திருக்கும் பார்ப்பனிய கொள்கைகளுக்கும் எதிரான
சமூகமாற்றத்திற்கான பல சக்திகள் உருவாகிக்கொண்டிருந்தன.

இதன் உந்துதால் சகல மக்களுக்கும் சமத்துவம் தேடி தமிழ் நாட்டில் உருவாகிய நீதிக் கட்சியின் ஆரம்பம் பற்றிய ஓரிரு வார்த்தைகள் சொல்லலாம். இந்தியாவில் காலம் காலமாகத் தங்கள் சாதித் திமிரால் பெரும் ஆளுமைகளை வைத்து மற்றவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருக்கும் பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக இக்கட்சி உருவாகிப் பல மாற்றங்களைச் செய்தது.

1902ம் ஆண்டு வீரமுனி விவேகானந்தர் இறந்தார். ‘ஒன்றே உலகம் ஒருவனே கடவுள்’என்ற இராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவக் கொள்கைகளளை இராமகிருஷண மிசன் மூலம் அவரின் சீடர்கள் தொடர்ந்தார்கள்.1907ம் ஆண்டு மட்ராஸ் இராமகிருஷ்ண மிசன் ஆரம்பிக்கப் பட்டது.

அக்கால கட்டத்தில், சாதி சமயம் கடந்த முறையில் மக்களை மேம்படுத்த அரசியல் விழிப்புணர்வுடன் செயற்படப் பலர் உருவானார்கள்.
1909ம் ஆண்டு மட்ராசில்,பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து ,அவர்களால் சாதி ரீதியாகப் பிரித்து வைக்கப் பட்டிருந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ‘நீதிக் கட்சி’ ஆரம்பிக்கப் பட்டது.அவர்களால் ஒட்டுமொத்த மக்களுக்குமான பல நல்ல திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டன.

அக்கால கட்டத்தில் மக்களின் விழிப்புணர்வைத் தூண்டப் பல கவிதைகளைப் படைத்தவர் சுப்பிரமணிய பாரதியார்.பார்ப்பன சாதியிற் பிறந்த பாரதியும் சாதி மத பேதங்களை எதிர்த்துக் கவிதைகள் எழுதினார். அதன் பின் வந்த கால கட்டத்தில்,இந்தியாவில் பேராசிரியராக வாழ்ந்த காலத்தில், சுவாமி விபுலானந்தர் பாரதியாரின்; சமத்துவக் கோட்பாடுகளை உலகுக்கு அறிமுகப் படுத்தப் பெருமுயற்சிகள் செய்தார். பார்ப்பனியரால் வெறுக்கப் படும் பாரதியை,’ சமத்துவத்தைக் கவிதையால் போதிக்கும் ‘மகாகவி’ என்று பெருமைப்பட்டார். பாரதி கனவு கண்ட,சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க சுவாமி விபுலானந்தர் வழிதேடினார்;.

அக்கால கட்டத்தில் காங்கிரஸ்காரனாகத் தனது அரசியலை ஆரம்பித்த,பெரியார்.இ.வே.இராமசாமி காங்கிரஸ்காரரின் ‘தீண்டாமைக் கொள்கையை’எதிர்த்து வெளியேறி, நீதிக்(ஜஸ்டிஸ்) கடசியிற் சேர்ந்தர். 1924ல்’ சுய உரிமைக்’ கட்சியை ஆரம்பித்தார் அதன்பின், அத்துடன்,டாக்டர் அம்பேத்காரின் சாதிக்கெதிரான போராட்டங்களும்(தலித் விடுதலை-1927) ஒன்றோடு ஒன்றிணைந்த வரலாற்று சரித்திரங்கள்.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தை நிலை நிறுத்தப் பெரியார் இ.வே.ராமசாமி அவர்களின் உண்டாக்கிய’திராவிட சிந்தனைகளும்,விபுலானந்தரின் தமிழ்க்கலைத் தேடலின் ஒரு நீட்சியாகி’யாழ்நூல்’பிறக்கக் காரணமாகவிருந்தது என்பதா என்பது அடிகளாரை ஆய்வு செய்வோருக்குத் தோன்றும் ஒரு கேள்வியாகவிருக்கலாம்;.
இந்த சமுக நலவாதிகள்,இந்தியாவில் செய்த மாற்றங்கள் சுவாமி விபுலானந்தரை எப்படி ஈர்த்தன,எந்த கால கட்டத்தில் சுவாமி விபுலாந்தர் இந்த அரசியல் சமுதாய மாற்றங்களைக் கவனித்தார் என்பதெல்லாம் அவரது வாழ்க்கையின், மாற்றங்களைக் கவனமாக ஆராயும்போது தெரியவரும்.

2-இலங்கையில் நடந்த மாற்றங்கள்:

அமெரிக்காவில் நடந்த சுதந்திர போராட்டத்தின்பின ;(1765-17830) பெருவாரியான அமெரிக்க பாதிரிகள் பிரித்தானிய காலனித்துவ நாடுகளுக்கு வந்து கல்வியின் அடிப்படையில்,கிறிஸ்தவ மதம் பரப்பும் வேலையில் ஈடுபட்டார்கள்.
இந்தியாவில்,181ம் ஆண்டு, கிட்டத்தட்ட 111 கிறிஸ்தவ பாடசாலைகள் திறக்கப்பட்டன. இலங்கையிலும் கல்வியின் மூலம்; சமயத்தைப் பரப்பும் அவர்களின் வேலை ஆரம்பமானது.இலங்கையில்,கிறிஸ்தவமதத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட கல்வியால் யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகள் நிறுவப்பட்டன. வெள்ளாள சாதியினர்,அமெரிக்கப் பாதிரிகளின் கல்விக் கூடங்களிற் ஆங்கிலம் படித்த,ஒரு அதிகார வர்க்கமாக உருவானார்கள்.

தமிழர்கள்,கத்தோலிக்க கல்வியின் மூலம்; படித்து யாழ்ப்பாணத்து வேளாள சமுதாயம் மேம்பட வேண்டுமென்பதற்காக,கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்த ஆறுமுகநாவலர்(1822-1879);,இலங்கையில் தொடரும் அந்நியர் ஆட்சியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முனைந்தபோது, தமிழர்களின் ‘சைவ வேளாள கலாச்சார ஆதிக்கம்;’ அழிக்கப் படுவதையுணர்ந்து சைவ,தமிழ் வளர்ச்சிக்கான பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

அவரின் கொள்கைகள் இந்தியாவில் பார்ப்பனியர் தங்கள் சாதியை முன்படுத்தியதுபோல்,இலங்கையில் (யாழ்ப்பாணத்தில) ‘மேல்;சாதி என்று தன்னை வரித்துக் கொண்ட’வேளார்களுக்கு’ மட்டும் முன்னுரிமை கொடுத்தது. தமிழ் ஆர்வலர்களால்
1820ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப் பட்டது.

‘மேற்குடி’ வெள்ளான அதிகாரம்,ஆங்கிலேயக் கல்வி முறையில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங்கிய கல்வி உரிமைகளை வெறுத்தது.அந்த கால கட்டத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் கல்வியின் விளைநிலமாகக் கருதப் பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைப்பது கடினமாகவிருந்தது.

1832ல் பிரித்தானியர் எடுத்த இலங்கை பற்றிய முதலாவது,கணக்கின்படி யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தொகை 145638 என்றும் அத்துடன், சாதி அடிப்படையில் ஆண்கள் பெண்கள் உட்பட 20543 மக்கள்,எந்த வித அடிப்படை உரிமையுமில்லாமல், பெரிய சாதியினரின் அடிமைகளாகவிருந்தார்கள். (ஆதாரம்:’வுhந hளைவழசல ழக டீசவைiளா நஅpசைந———————‘டில சுழடிநசவ ஆழவெபழஅநசல ஆயசவin நளங -1832)

1833ம் ஆண்டளவில், பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்திலிருந்த,’அடிமை’முறைகள் தகர்த்தப் பட்டன.கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்ப்பாண சென்ட்ரல் கொலிஜ்ஜில், பொறுப்பிலிருந்த பீட்டர் பேர்ஸிவல் என்பவர்;,தாழ்த்தப்பட்ட தமிழ் மாணவர்களைப் பாடசாலையில் சேர்த்துக் கொண்டபோது அதை எதிர்த்த ஆறுமுகநாவலர் 1847ல் பாடசாலையை விட்டு வெளியேறினார்.வண்ணார்பண்ணையில் ‘உயர்சாதியினருக்கு’ மட்டுமாக ஒரு பாடசாலையை உண்டாக்கினார்.அதன் பின் நெடுங்காலம், சைவம், வேதம் வளர்க்கும்; பல தொண்டுகளுடன் வேளாளரை முன்படுத்தும் பல வேலைளையும்; தொடர்ந்தார்.
1876ல் யாழ்ப்பாணத்தில் மக்கள் பலர் பட்டினியால் மக்கள் அவதிப் பட்டபோது நாவலர் ‘ உயர்சாதி’ மக்களுக்கு மட்டும் உணவு சேர்த்துக் கொடுத்தார்.

3- மனித நேயத்தில் ஈர்ப்பு கொண்ட பன்முக ஆளுமைகள்;:

அக்கால கட்டத்தில்,கிழக்கிலங்கையின் பொருளாதாரம் கல்வி நிலைகளைப் பற்றி எந்த அக்கறையையம் யாரும் எடுக்கவில்லை. 1815ம் ஆண்டு இலங்கை முழுவதையும் தங்கள் ஆடசிக்குள் கொண்டுவந்த பிரித்தானியர்,தங்கள் பாதுகாப்புக்காகத் திருகோணமலைத் துறைமுகத்தைக் கொஞ்சம் வளம் படுத்தினார்கள். 1832;ம் ஆண்டு ஆங்கில அரசின் தகவல்களின்படி,மட்டக்களப்பு மக்களின் தொகை 29031 என்றும் அதில் படித்தமாணவர்கள் தொகை 39,என்றும்,திருகோணமலை மக்கள் தொகை 12461,’அடிமைகளாக'(சாதி ரீதியாக?) இருந்தவர்கள் 34 மக்களென்றும் பதிவிடப் பட்டிருக்கிறது. மக்கள் தொகைளில் படித்தவர்கள் தொகை அக்காலத்தில 117 என்று (ஆண்கள் மட்டும்) என்ற பதியப் பட்டிருக்கிறது.

1871ல் மட்டக்களப்பில் கத்தோலிக்க பாதிரிகளால் புனித மைக்கல் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்முனையிலுள்ள கிறிஸ்தவ பாசாலையிற் தொடங்கிய மயில்வாகனத்தின் படிப்பு,மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிற் தொடர்ந்தது.
1912 ம்; ஆண்டில் ஓரு தமிழாசிரியராகப் பரிணமித்த மயில்வாகனம்,1916ல்,அவரின் இருபத்துநான்கு வயதில், தனது தமிழ்ஞானப்படிப்பால்,மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் நடத்திய பரீட்சையில் ‘பண்டிதர்’பட்டம் பெற்ற முதல் இலங்கையர் ஆனார்;.
லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான பரிட்சையில் பட்டதாரியாகப் பட்டம் பெற்றாh.; இடைவிடாத அவரின் அறிவுத் தேடலால்,அவரது பல மொழி அறிவு,தமிழ்,கிரேக்கமொழி,லத்தின்,சமஸ்கிருதம்,சிங்களம் எனப் பரந்தது அது அம்மொழிகளிலுள்ள பிரபல்யமான கலைப் படைப்புகள்,அறிவு சார்ந்த விழுமியங்களை உணர உதவியது. இதாரணமாக அடிகளாரின் நாடக நூலான ‘மாதங்கசூளாமணி’ ஆங்கில நாடகாசிரியான வில்லியம் ஷேக்ஸ்பியரின் (1564-23.4.1616) நாடகங்களை ஆழமாக அறிந்திருக்காவிட்டால் எழுதியிருக்கமுடியாது.

உலகமெங்கும் உள்ள பெரிய சக்திகள் தங்களின் ஆளுமையை நிலை நிறுத்த முதலாவத உலகப் போரைத் தொடங்கிய 1914ம் ஆண்டு பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்த பல நாடுகளிலுமிருந்து பலர் போர்முனைக்குச் சென்று மடிந்தார்கள். ஆங்கிலேயர் இரண்டாம் போருக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கும்போது, மயில்வாகனம் கண்டியிலுள்ள இராணுவமுகாமில் இராணுவப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. உலகப்போர் தொடர்ந்த கால கட்டத்தில் மக்களின் மேன்மைக்கான பல தேசிய சிந்தனைகள் பல நாடுகளிலும் உருவெடுத்தன.இந்தியாவின் சுதந்திரத்திற்குப் போராட காந்தியடி அவர்கள் தென் ஆபிரிக்காவிருந்து 1915ம் ஆண்டு,இந்தியா வந்தார். இந்திய சுதந்திரத்திற்கு இந்து -முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசினார்.

விபுலானந்த அடிகளார் 1917ம் ஆண்டு இந்தியாவிலிரந்து இலங்கை வந்திருந்த,இராமகிருஷ்ண மிசன் அடிகளாரான சுவாமி தர்மானந்;தாவைச் சந்தித்தார்

அக்கால கட்டத்தில, ஏற்கனவேஈ1893;;ம் ஆண்டு சிக்காகோ நகிரில், அகில உலக மகாநாட்டில் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து, சுவாமி விவேகானந்தரின் ஆத்மிகப் பேச்சுக்களில் ஈர்ப்பு கொண்ட இலங்கையைச் சேர்ந்த பௌத்த குருவான அநாகரிக தர்மபால,சிங்களத் தொன்மையை நிலை நாட்ட பல வேலைகளைச் செய்தார் இந்தியவில், புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தைக் கொண்ட இடத்தைப் ‘புனித கயாவாக’ மாற்றப் பெரும்பாடு பட்டார்.

இலங்கையில்,20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்,’ஆரிய சிங்கள’ மேன்மையைப் பரப்பிய அநாகரிக தர்மபாலாவின், இஸ்லாமியர்களுக்கெதிரான பேச்சுக்கள் அக்காலத்தில் இடம் பெற்றன. சிங்கள-முஸ்லிம் கலவரம் 1915ல் வெடித்தது. டட்லி சேனநாயக்கா போன்றோர் கைது செய்யப் பட்டார்கள் அவர்களுக்குவாதா சேர். போன் இராமநாதன் இங்கிலாந்து சென்றார்.

இந்தியாவில் விவேகானந்தரின் வழிவந்த கல்வி முறை பரவலாகிக் கொண்டிருக்கும்போது, வுpபலான்த சுவாமிகளுக்கு,1917ம் ஆண்டு இராமகிருஷ்ணமிசன் சுவாமி தர்மானந்தாவின் தொடர்பு ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் (1917) ஒடுக்கப் பட்ட மக்களுக்கு விடுதலை கொடுத்த இரஷ்ய புரட்சி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் அக்காலத்தில், சுப்பிரமணிய பாரதியார்,மானுடம்,கடவுள் பற்றிய கவிதைகள் மட்டுமல்லாது இரஷ்ய,புரான்ஸ்,புரட்சிகள் பற்றிக் கவிதைகள் எழுதினார்;.

1920ம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில்
விபுலானந்தரால் மிகவும் மதிக்கப்பட்ட மகாகவி பாரதி 11.9.1921ம் ஆண்டு இவ்வுலகத்தை விட்டு மறைந்தார்;. பாரதியின் எழுத்துக்கள் மனித நேயத்தின் மேன்மையைப் பிரதிபலிப்பது என்பதையுணர்ந்தவர் சுவாமி விபுலானந்தர். சாதிக்கெதிரானது மட்டுமல்லாமல்,பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான பாரதியின் கொள்கைகளால் பாரதியின்; மரணம்கூட பார்ப்பனியர்களால் பகிஸ்கரிக்கப்பட்டது.பாரதியின் கடைசி யாத்திரை பதின்நான்கு மனிதர்களுடன் நடந்து முடிந்தது.

பிரித்தானிய பெண்களின் பல்லாண்டு போராட்டத்தால்,பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் ஒட்டுமொத்த மக்களுக்கும் வாக்குரிமை என்ற சட்டம் வந்தபோது,படித்தவர்களுக்குள் ஆளுமை பறிபோவதையுணர்ந்த யாழ்ப்பாணத்து மேற்குடி அதைத் தீவிரமாக எதிர்த்தது.

1929 ஆடி14—புரட்டாதி14 கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்த பட்ட மக்களுக்;கெதிரான பல மோசமான கலவரம் வெடித்தது. ஓடுக்கப்பட்ட மக்களின் பல வீடுகள் தீக்கிரையாகின. தாழ்த்த சாதி மக்கள்; தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள்.’டொனமூர் கொமிஸன்’ இலங்கையிலிருந்த(வடக்கிலிருந்த) சாதி அடக்குமுறையை எதிர்த்தது.
அக்கால கட்டத்தில் 1928-29ம் ஆண்டு கிழக்கிலங்கையின் சனத்தொகை 192821 ஆகும். அதில் தமிழர் 101880,சிங்களவர்கள் 8600,முஸ்லிம்ஸ்75475.இந்தியவம்சாவழியினர் 1371.ஆகும் (ஆதாரம் டொனமூர் அறிக்கை).
சுவாமி விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் சகல மக்களுக்கும் கல்வி புகட்டக் கிழக்கிலங்கைளில் பல,இராமகிருஷ்ண மிசன் பாசாலைகள் பெருகிக் கொண்டு வந்தன.இதில் தமிழர்,இஸ்லாமியர் என்ற எந்தப் பாகபாடமின்றி அத்தனை குழந்தைகளும் கல்வி கற்றார்கள்.

4- சுவாமி விபலானந்தரின் ஆத்மீக குருவாகிய வீரமுனி விவேகானந்தரும் அவரின் சீடையான நிவேதிதா அம்மையாரும்:

இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கெதிரான ஒரு கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் சமுதாயத்தில் மேல் நிலையிலிருந்த பிராமணர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது.அவர்களின் கோட்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட சாதிமக்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் வாழ்க்கை சமய அடிப்படையில் அவர்களுக்கிருந்த செல்வாக்கைக் காலம் காலமாக நிலநிறுத்திக் கொண்டிருந்தது.
‘ந சூத்ர மதிமம் தத்யா'(சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே) என்ற பார்ப்பனியக் கோட்பாட்டால் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு; கல்வி கிடைப்பது கடினமாகவிருந்தது.

விவேகானந்தர், பிராமணியக் கோட்பாடுகளைத் தாண்டி அனைத்து மக்களும் ஒரு நாட்டின் சுதந்திர பிரஜையாக வாழவும் தங்களின் நிலையை மேம்படுத்தவும் பல வழிகளைத் தேடினார்.முக்கடலும் முத்தமிடும் தென் இந்தியாவின் கன்னியாகுமரிக் கடற்கரையிலுள்ள குன்று ஒன்றில் மூன்று நாட்கள் அவர் தனது தியானத்தை மேற்கொண்டார்.இறுதியில், அவர், கடவுளால் படைக்கப் பட்ட அத்தனை மக்களும் உலகத்திலுள்ள அத்தனை செல்வங்களுக்கும் உரித்துடையவர்கள்.அதையுணரவும், அடையவும் கல்வி ஞானம் தேவை என உணர்ந்தார்.

அவரின் சிந்தனைக்கு லண்டன் மாநகரில் அவர் சந்தித்த கத்தோலிக்க கன்னியஸ்திரியான செல்வி மார்க்கரெட் எலிசபெத் நோபல்(நிவேதிதா அம்மையாரின) தொடர்பு(1895) மிகவும் உதவியாகவிருந்தது. நிவேதிதா அம்மையார் ஸ்கொட்லாந்த்-அயர்லாந்தைச் சேர்ந்த பிரபுக்கள் பரம்பரையைச் சேர்ந்த சீமாட்டி.

அவரின் தந்தையார் சாமுவேல் றிச்மெண்ட் நோபல் என்பவர்,பிரித்தானியரிடமிருந்து அயர்லாந்து விடுதலை பெறவேண்டும் என்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.அத்துடன் ஏழை எளிய மக்களுக்கு உதபுவர். மார்க்கரெட் எலிசபெத்தும் தகப்பன் மாதிரியே பல பரந்த குணங்களைக் கொண்டவர்.எழுத்திலும் வல்லமை கொண்டவர். படிப்பு முடிந்ததும் ஆசிரிiயாக வேலை செய்தவர்.செல்வமான மார்க்கரெட்எலிசபெத் தனது,அவரின் ஆடம்பர வாழ்வைத் துறந்து பொதுப்பணி செய்ய கன்னியாஸ்திரியாகியிருந்தார்.

அவர் அப்போது லண்டனிற் தங்கியிருந்த சுவாமி விவேகானந்தரை,1895ம் ஆண்டு சந்தித்தார்.
விவோகானந்தரின் தத்துவங்களில் முக்கியமான’கல்வி மூலம் அறத்தையும்,மனதிதத்தையும் மேம்படுத்துவது மிகவும் பிரமாண்டமான சமயத் தொண்டு’என்பதை எலிசபெத் (நிவேதிதா) அம்மையார் புரிந்துகொண்டார்

விவேகானந்தரின் அழைப்பின்படி இந்திய வந்தார்.1989ம் ஆண்டு, விவேகானந்தரின் வேண்டுகோளின்படி பெண்களுக்கான பாடசாலையை கல்கத்தாவில்;, இராமகிருஷ்ணபரமஹம்ஸரின் குலதெய்வமான காளிதேவையின் பூசையன்று ஆரம்பித்தாh

விவேகானந்தரின்; கோட்பாடுகளும் வேலைத் திட்டமும் இந்தியாவிலுள்ள சாதாரணமக்களின் வாழ்க்கையில் கல்வி ரீதியாகப் பல மாற்றங்களைச் செய்தன. விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்திய மக்கள் அத்தனைபேரும் பாரதமாதாவின் குழந்தைகள் என்ற தத்துவத்தைப் போதித்தார். மற்ற சமயங்களான இஸ்லாம், கிறிஸ்டியானிட்டி போன்றவற்றையும் அறிந்து கொண்டார். சாதி மத பேதமற்ற ஒரு உலகத்தை வளர்த்தெடுக்க இராமகிருஷ்ண பரமாத்மா கனவு கண்டார்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான நிவேதிதா அம்மையார், ஆன்மீகத் தொடரின் நீட்சியான அவரது உள்ளுணர்வின் உந்துதால் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார்.இந்தியா வந்ததும் சுவாமி பரமஹம்ஸரின் மனைவி சாரதா தேவியின் நெருங்கிய சினேகிதியானார். இந்து மத தத்துவத்துடன் ,சமயச் சடங்குகள் தாண்டிய பௌத்த மத தத்துவங்களிலும் அவர் ஈர்ப்புக் கொண்டார்.

நிவேதிதாவின் ஆன்மீகக்குரு விவேகானந்தர்,ஒரு சாதி மக்களின் உயர்வை மட்டும் குறிக் கோளான பார்ப்பனியக் கொள்கைகள் தாண்டி பாரத மாதாவின் அத்தனை மக்களும் கல்வி மூலம் உயர்நிலையடைய வேண்டும் என்ற கொள்கையைப் பரப்பியதால்,அவர்’வீரமாமுனிவர் விவேகானந்தர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். விவேகானந்தர், இந்தியாவில் பல பகுதிகளிலும் கல்விக் கூடங்;களை அமைத்துச் சாதாண மக்களுக்குக் கல்வி புகட்டி மகத்தான மாற்றங்களைச் செய்தார்.உயர்சாதியின் சொத்தாக இருந்த கல்வி வளத்தைப் பொதுவுடமையாக்கினார்.நிவேதிதா அவரின் கொள்கைகளைப் பரப்பினார்.அம்மையாரின் தொண்டு இந்தியாவில் பல இடங்களிற் பரவியது.

5- விபுலானந்தரின் வழிகாட்டியான பாரதி,’நிவேதிதா தேவியாவைச்’சக்தியாகக்’கண்டார்;:

பிராமணியக் கோட்பாடுகளைத்தூக்கியெறிந்த சுப்;பிரமணிய பாரதியார், நிவேதிதா அம்மையாரின் சேவையையும்; ஆளுமையைளும்; கேள்விப்பட்டு அவரை 1905ம் ஆண்டு சந்தித்தார்.அந்தச் சந்திப்பு,பாரதியின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அந்தச் சந்திப்பு இருந்தது. நிவேதிதா அம்மையார் பெண்களின் ‘சக்தி’யின் பிம்பமாகப் பாரதிக்குச் சந்தோசத்தைக் கொடுத்தார்.

மானுட சக்திகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைந்து ,அன்பு அறம்,நீதி நேர்மை என்பற்றை வளர்க்கத் தேவையான கல்வியைப் பெற வர்ணஸ்ரமத்தால் உண்டாக்கப் பட்ட சாதி பேதம் தடையாயிருப்பதைஉணர்ந்த பாரதி,’சாதிகள் இல்லைடி பாப்பா,’ என்று சொல்லிய பாரதி பாடல் பார்ப்பனிய சமுதாயத்தை ஆத்திரமூட்டியது.

20;ம் நூற்றாண்டின் ஆரம்பம் இந்திய அரசியல்,சமூக் சமய வழிகளின் போக்கை மாற்றும் பல ஆளுமைகளை உலகிற்குத் தந்தது.அக்கால கட்டத்தில் லண்டன் பரீட்சையில் விஞ்ஞானத்தில் டிப்ளோமா எடுத்து சித்தியடைந்த சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணம் புனித பட்ரிக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அப்போது,வேளை,’உலகத்து மக்களெல்லாம் ஒரு இனத்தவர்,அவர்களை ஒன்று படுத்தவும் மேன்மைப் படுத்தவும் கல்வி ஒரு கருவியாக இருக்கவேண்டும்’;’ என்ற தத்துவத்தைப் போதிக்கும் இராமகிருஷ்ண மிசனைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தர் 1916ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

பாரதி,’சாதிகள் இல்லைடி பாப்பா,குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,நீதி உயர்ந்த மதி கல்வி,அன்பு நிறையுடையவர்கள் மேலோர்’- ‘எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இந்திய மக்கள்’ என்ற சமத்துவத்தை முன்னெடுத்து சகல மக்களையும் சுதந்திர போராட்டத்தில் இணைக்கப் பாடுபட்டு வெள்ளையரசால் பாரதி கைது செய்யப்பட்ட (1918) அதே கால கட்டத்தில்,அன்றைய,யாழ்ப்பாண கல்வி,பொருளாதாரம் அத்தனையும் உயர்சாதிக் காரர்களின் கையில் இருந்தது.

படித்தவர்கள் மட்டுமே வாக்குரிமையளிக்கும் முறையின் அடிப் படையில் இலங்கையில் மிகவும் கூடுதலான படிப்பாளிகளைக் கொண்ட அடிப்படையில், 1918ல் இலங்கையின் சனத் தொகையில் நான்கு விகிதத்தைக் கொண்ட தமிழர்களுக்கு 50:50 அரசியல் நிர்வாகம் தேவை என்று திரு.பி. அருணாச்சலம் போன்றவர்களால் கேட்ட படியால் பிரித்தானிய காலனித்துவ அரசும் சிங்களத் தலைவர்களம் அதை எதிர்த்தார்கள்.

இவை தொடர்ந்த கால கட்டத்தில்,தன் சொந்த முயற்சியால் லண்டன் விஞ்ஞான பரிட்சையில் பட்டம் பெற்ற மயில்வாகனம்,மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராக 1920ம் ஆண்டு பதவியேற்றார்.

தங்கள் நிர்வாகத்திற்குத் தேவையானவர்களுக்குக் கல்வி புகட்ட ஆங்கிலேயர்களால் உண்டாக்கப் பட்ட கிறிஸ்தவ பாடசாலைகளில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஓரு சில குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு மட்டும் கிடைத்தது. அதிலும் சைவக் குடும்பத்தின் வாரிசான மயில்வாகனம்(விபுலானநத் அடிகாளார்) தனது மேற்படிப்புக்களைக் கிறிஸ்தவ பாடசாலைகளிற் தொடர்ந்ததும் அதற்கு அவ்விடங்களிருந்த ஆசிரியர்கள் உதவி செய்து அவரது கல்வி ஆளுமையை மேம்படுத்தியதம்; கிழங்கிலங்கை செய்த அரிய தவத்தின் பலனாகும்.

20; நூற்றாண்டின் ஆரம்பத்தில்,இலங்கையை ஆண்ட அந்நிய அரசோ, அவர்களின் அதிகாரிகளாக இருந்த,ஆங்கிலம் படித்த மேல்வர்க்கமோ,தலைநகருக்கு வெகு தூரத்திலிருந்த கிழக்கிலங்கையையின் கல்வி,பொருளாதார வளத்தை வளர்க்க எந்த அக்கறையும் காட்டவில்லை.ஏனென்றால் கிழக்கிலங்கை,ஆங்கில அரசின் நிர்வாகத்திறகுள் வரமுதல்,கண்டியரசனின் ஆட்சியின் நிர்வாகத்திலிருந்தது. ஆங்கிலேயர் ஆடசி காலத்தில், வடக்கிலிருந்து உத்தியோக ரீதியாக வந்த தமிழ் அதிகாரிகள் கிழக்கிலங்கையின் நிலை புரியவில்லை.

1922ம் ஆண்டு,தனது பதவியைத் துறந்து,பொது மக்களுக்குச் சேவை செய்யும் சமய நிறுவனமான இராமகிருஷ்ண மிசனில் தன்னைப் பிணைத்துக் கொண்டார். 1924ல்,இராமகிருஷ்ண தீட்சாநாமமான,’சுவாமி விபுலானந்தரானார்’. அவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தென்னிந்தியாவில் நடந்த சமுதாய மாற்றங்கள் எவ்வளவு தூரம்,என்னென்ன தாக்கங்களையுண்டாக்கியிருக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம்.

1925ல் இலங்கைக்குத் திரும்பி வந்த விபுலானந்த சுவாமிகள்,இலங்கையிலுள்ள இராமகிருஷ்ண மிசனின் வளர்ச்சியின் தார்மிகப் பொறுப்பை 1925ம் ஆண்டு எடுத்துக் கொண்டு உடனடியாகப் பொது மக்களுக்கான அவரின் கல்விப் பணியைத் தொடங்கி விட்டார்.அடுத்த ஆறு ஆண்டுகளில் கிழக்கிலங்கையில் நூற்றாண்டுகளாக நடக்காத பல மாற்றங்களைச் செய்தார்

விவோகானந்தருக்கு ஒரு நிவேதிதா தேவி இருந்து பெண்கள் கல்வியை மேம்படுத்தயதுபோல் விபுலானந்தருக்கு இலங்கையில் யாருமிருக்கவில்லை. விபுலானந்தர் பெண்களின் கல்வி முன்னேற்றம் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதையுணர்ந்து,காரைதீவில் பெண்களுக்காகச் சாரதா மகளீர் வித்தியாலயம் ஆரம்பித்தார்.அது மட்டுமன்றி ஆதரவற்ற பெண்களுக்கான இல்லங்களையும் அமைத்தார்.

அத்துடன் கிழக்கிலங்கையில் பல பாகங்களிலும் பல கல்வி நிறுவனங்கள் உண்டாகின. மண்டூர்,ஆரையம்பதி,ஆனைப்பந்தி, அக்கரைப்பற்று, போன்ற இடங்களில் தமிழ்க் கல்வி நிறுவனங்களும்,மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் ஆங்கிலக் கல்விக்காக ‘சிவானந்தா வித்தியாலயமும்’ தொடங்கப் பட்டன.
திருகோணமலை தொடக்கம்,திருக்கோவில் வரை 38 பாடசாலைகள் 1925ம் ஆண்டுக்குப் பின் சுவாமிகளின் முயற்சியால்,நிறுவப்பட்டன.
அத்துடன் சாதி மத பேதமற்ற முறையில் அனாதைக் குழந்தைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வைத்தீஸவர வித்தியாலயத்தையும் மட்டக்களப்பில் சிவானந்தா வித்தியாலயத்தையும் நிறுவினார்.
சுpவானந்தாவிற் படித்த முஸ்லிம் ஆளுமைகள் சிலர் இன்று லண்டனில் வாழ்கிறார்கள்.

பாரதியின் கவிதைகளை மக்களிடம் பரப்ப கிழக்கிலங்கை முழுதுமும் பாட்டுப் போட்டிகள்,பேச்சுப் போட்டிகள் முன்னெடுக்கப் பட்டன. பாரம்பரிய நாடகக் கலையை மீட்டெடுக்க நாடகப் போட்டிகள் மாவட்ட ரீதியாக நடத்துவது ஆரம்பிக்கப்; பட்டன.

6- சுவாமி விபுலானந்த அடிகளாரின் இந்திய பயணமும் அங்கு நடந்து கொண்டிருந்த மாற்றங்களும்;:

அவரது திறமையைக் கேள்விப் பட்ட, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அங்கு அவரைத் (1932) தமிழ் பேராசிரியராக்கியது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகவிருந்து பெருமை ஒரு இலங்கைத் தமிழனுக்கு அதிலும் கிழக்கிலங்கிலங்கைத் தமிழனுக்குக் கிடைத்த மாபெரும் பெருமையாகும். அதைத் தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகவும் (1943) நியமிக்கப் பட்டார். ஒரே கால கட்டத்தில் இரு நாடுகளில், இருபெரும் பல்கலைக் கழகங்களின் தமிழப் பேராசிரியிருந்த அண்ணல் சுவாமி விபுலானந்தர் மட்டுமே.அந்தப் பெருமையை இன்றுவரை உலகத்தில் யாரும் அடையவில்லை.

‘எம்மதமும் சம்மதமே’என்ற கோட்பாடுடைய அறிஞரான இவர் சாதி பேதங்களை அறுத் தொழிக்கப் பல செயல்களை முன்னெடுத்தார். அடிகளார்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவிருந்த கால கட்டத்தில், தீண்டாத ஒடுக்கப்பட்டவர்களாக ‘உயர்(?)சாதியிரால் தாழ்த்தப்பட்டு,திருவேட்களம் என்ற இடத்தில் வாழ்ந்த ஆதிதிராவிட மக்களுக்குப் பாடசாலைகளை ஏற்படுத்தினார்.இதனால் பார்ப்பனியர் அவரில் ஆத்திரம் கொண்டு அவர் குடிப்பதற்குத் நல்ல குடிநீர் கொடுக்க மறுத்தார்கள்.அடிகளார் பல காலம் உவர் நிர் குடித்து வாழவேண்டிய நிலையேற்பட்டது.
சுவாமி விபுலானந்தர் பாரதியின் மனித நேயக் கருத்துக்கள் கொண்ட சமத்துவக் கருத்துக்களைப் பரப்ப பல கூட்டங்கள் நடத்தினார்.

அக்கால கட்டத்தில் வட(1937) இந்தியாவில் சாதிக்கெதிராகப் போராடும் டாக்டர் அம்பேத்கார்,’ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான,’மூக் நாயக்'(தலித் மக்களின் தலைமை) என்ற பத்திரிகையைத்’ தொடங்கினார்;.

தென் இந்தியாவில் பெரியார்,தமிழர்களின் மேன்மைக்கான ‘திராவிடக்’ கழகத்தைத் தொடங்கினார்.
இந்தியாவில் சுவாமி விபுலானந்தர்; வாழ்ந்த காலத்தில் மனித நேயத்தின் மறுமலர்ச்சிக்காக நடந்த மாற்றங்கள் பல. அத்துடன் தமிழர்களின் மொழி,கலை பண்பாடு பற்றிய புதிய வழிப்பாடும் அறிஞர் அண்ணா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் அவர்களின் பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ள, அவர்களின் புகத்தறிவை வளர்க்கத் தமிழகத் தின் பல முனைகளிலும் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் நாடகம், சினிமா போன்ற துறைகளைப் பாவித்துத் தமிழ் உணர்வை வளர்த்தார்கள். பாரதி பாடல்கள், பாரதி தாசன் பாடல்கள், என்பனவும் மக்களின் அறிவு எழுச்சிக்கு உதவின. தமிழ்க்கலைகளின் மீழ் எழுச்சி கொடுத்த அந்த நிகழ்வுகளின் நீட்சியாக,சுவாமி விபுலானந்தர்’ தமிழ் இசைபற்றிய ‘யாழ்நூல்’ பற்றி எழுத விழைந்திருக்கலாமா என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.

1882ம் ஆண்டு,விபுலானந்தரின் சமத்தவ வழிகாட்டியான பாரதி பிறந்தார்.இந்தியாவில் உ.வே. சுவாமிநாதய்யர் அவர்கள்,சேரநாட்டுச் செல்வன் இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை 1992ல் வெளியிட்டார். அதே வருடம்,பாரதிக்குப் பத்து வருடங்கள் கழித்துப் பிறந்த (1892) சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமிழிலும் தமிழ்க்கலைகளிலும் கொண்ட பாரிய ஈர்ப்பால் ‘யாழ்நூல்’ படைத்து 1947ல் வெளியிட்டார்.

1947ம் ஆண்டு அவர் பலகாலங்களாக ஆய்வு செய்து எழுதிய அரிய நூலான’ யாழ்நூல்’ வெளியிடப் பட்டது. அதன்பின்னர் சொற்ப காலத்தின்பின் நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டப் பிரிந்தார்.’யாழ் நூல்’; மட்டுமல்லாது அவர்,’ஆங்கிலவாணி’,’விவேகானந்த ஞானதீபம’,’கர்மயோகம’;,ஞானயோகம்@ போன்ற வேறு பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

கிழக்கிலங்கையின் கல்வி,பொருளாதார,கலை கலாச்சார மாற்றங்களுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப் பரியன. 20ம் ஆண்டின் நடுப்பகுதியில்,கல்லடி,ஆரையம்பதி, கல்லாறு,காரைதீவு,திருக்கோயில், திருகோணமலை போன்ற பல கிழக்கிலங்கை; ஊர்கள் படிப்பில் முன்னேறின. பாரம்பரியக் கலைகளான தென்மோடி,வடமோடி நாடகங்கள் மேம்பட்டது.
கிழக்கிலங்கை,கல்லடியைச் சேர்ந்த பாலு மகேந்திரா இந்தியாவில் கமெராவின் மூலம் கலை படைக்க கிழக்கிலங்கையில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் கலையார்வம் ஒருகாரணி என்பது கவனிக்கப் படவேண்டியது.

இன்ற பாரம்பரியக் கிழக்கிலங்கை கூத்துக்கலை மட்டுமன்றி,கூத்து.நவீன நாடகத் துறைகளால்; தமிழர் வாழுமிடமெல்லாம் புகழ் பரப்பித் தமிழ் உலகம் போற்றும் கலைஞராகத் திகழும் கிழக்கிலங்கைப் பேராசிரியர் மௌனகுரு போன்றவர்கள் சுவாமி விபுலானந்தவரின் கனவை நனவாக்கும் அற்புதக் கலைஞர்கள்.

ஆனாலும்,கடந்தமுப்பது ஆண்டுகள் தொடர்ந்த போரால் கிழக்கிலங்கை மக்கள் அனுபவித்த துயர்கள் சொல்லில் அடங்காதவை. உயிர்கள் உடமைகள் என்று இழந்த இழப்புகள் எண்ணிலடங்காதவை.விபுலானந்தரால் 1925ம் ஆண்டில் கிழக்கிலங்கையில் தொடங்கிய கல்வி மேம்பாட்டு வேலைகள் கடந்த மூன்று தாசாப்தங்களில் சிதறியழிந்து விட்டது. படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டிய ஒரு தலைமுறை மண்ணோடு மண்ணாகி விட்டது.

சமூகப் பொருளாதார உறவுகளால் பின்னிப் பிணைந்திருந்த இன உறவுகள் நிர்மூலமாகப் பட்டிருக்கிறது. வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியற் கருத்துக்களால்,கிழக்கிலங்கைத் தமிழர்கள் தங்களுக்குள் பல பிரிவுகளையுண்டாக்கிப் போட்டி பொறாமையுடன் வாழ்வதால் எங்கள் மூதாதையர் வளர்த்த,முத்தமிழ் வித்தகர் உரமூட்டிய தங்கள் அழகிய பிரதேசத்தின் பாரம்பரிய பெருமைகள் வளரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது..

ஆனாலும் ஒருசில நல்ல மனிதர்கள்,கடந்த சில ஆண்டுகளாகக் கிழக்கிலங்கை தனது பாரம்பரியக் கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தப் பல முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். கிழக்கிலங்கை மக்கள்,போரினாற் பாதிக்கப் பட்ட கிழக்குத்தமிழ் பாரம்பரியங்களைக் கட்டியெழுப்ப பல தரப்பட்ட பன்முகக் கட்டுமானங்களை எடுக்கவேண்டியிருக்கிறார்கள். இன்று,சமூகநலத்தில் அக்கறை கொண்ட எழுத்தாளிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி,இசை,இயல்,நாடகம் என்ற பல துறைகளிலும்; அக்கறை கொண்ட அத்தனைபேரும்,சுவாமியின் தொண்டின் வளர்ச்சியை கிழக்கிலங்கையிற் தொடரவேண்டும் என்பதற்காக இக்கட்டுரையில் அவர் பற்றிய ஆய்வுகளைத் தொகுத்தபோது கிடைத்த பல பன்முகத் தகவல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்;.

20; நூற்றாண்டின் ஆரம்பத்தில்,சுவாமி விபுலானந்த அடிகளாரின், சமுதாய முன்னேற்ற சிந்தனையில்;,தமிழ்க்கலைகளில் உள்ள அளவிடமுடியாத ஈர்ப்பால் பரிணமித்த அவரது புனித செயற்பாடுகளால் கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை ஆய்வு செய்தபோது அவர் பிறந்த பூமியிற் பிறந்தது பெருமையாகவிருந்தது.

ஓரு சாதாரண தமிழ் ஆசிரியராகப் பயிற்சிபெற்றுப் பல மொழிகளிலும் திறமைபெற்று அம்மொழிகள் வாயிலாக உலகத்தின் பலமொழிகளின் திறமைகளையும் அறிந்து தமிழ்மக்களுக்கு எவ்வளவோ நற்பணிகளைச் செய்தது மட்டுமல்லாமல்,கிழக்கிலங்கையின் பாரம்பரியத்தின் தீபத்தை அணையாமற் பாதுகாத்த இம்மாமனிதன்,வீரமாமுனி விவேகானந்தரின் சீடன்,பாரதியின் தாசனான சுவாமி விபுலானந்தர் விழாவுக்கு என்னை’விசேட பேச்சாளராக’ அழைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.