நாளை மறுதினம் (10.02.2018) நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல் நிலவரம் பற்றிய கண்ணோட்டம்…

யாழ் மாநகர சபை

—————————-

தமிழ்த்தேசியப் பேரவை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. எந்தத் தரப்பும் பெரும் பெரும்பான்மையைப் பெறக் கூடிய நிலைமை காணப்படவில்லை. ஆகவே, இதுவரையான வரலாற்றுக்கு மாறான முறையில் இந்த முறை புதியதொரு மாநகராட்சி அமையக் கூடிய வாய்ப்புகளே உள்ளன.

(“நாளை மறுதினம் (10.02.2018) நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல் நிலவரம் பற்றிய கண்ணோட்டம்…” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்

(சமரன்)

புதிய பதிவுக்காகவும்
புதிய தலைமுறைக்காகவும்
இவற்றைச் சொல்லியே ஆகவேண்டும்.
கால் நூற்றாண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகளின் நினைவுகள்.

(“ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்

(Ahilan Kadirgamar)
சிவப்புக் குறிப்புகள்

சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள – பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன்.

(“இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் துணுக்காய் வதைமுகாம்.

சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து
அவர்கள் மீது கொடிய சித்திரவதைகளை மேற்கொண்டு
ஏறத்தாழ இhண்டாயிரம் தமிர்களைக் கொலை செய்த புலிகளின் பாரிய சிறைக் கூடம். 28 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம். புலிகளால் ஈரக்கமின்றி கொன்று எரிக்கப்பட்ட எமது மக்களுக்கு இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.

சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர். இங்கு சிறைவைக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய சமரன் அவர்களையே இங்கு காண்கிறீர்கள்.

துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி.இங்கே புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாம் மாவீரன் ? (“புலிகளின் துணுக்காய் வதைமுகாம்.” தொடர்ந்து வாசிக்க…)

செழியன் என்ற மனிதநேயன்

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

உள்மனதை எழுத்தில் வடிக்கும் உண்மையான கவிஞன். உழைக்கும் மக்களின் விடிவுக்காகத் தன்னையே தேய்த்துக்கொண்டவன். தன் வாழ்வுக்கும், எழுத்துக்கும் கருத்துவழிப்பட்ட அர்த்தத்தைத் தேடியவன். அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறுகல்லைத்தன்னும் இறுதிவரை எறிந்துகொண்டே இருந்தவன். அமைதியாகத் தூங்கிவிட்டான்.

(“செழியன் என்ற மனிதநேயன்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?

(அதிரதன்)
“யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப் போகிறோம் என்பது எல்லோரிடமும் எழும் கேள்விதான்.

(“தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

மக்களோடு மக்களாய்: தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் மாணவர் அமைப்பு
தமிழ் மாணவர் பொதுமன்றம் 04/02/2018 அன்று திருகோணமலை காரியாலயத்தில் சமூகத்தின் வளர்ச்சியில் மாணவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி கலந்துரையாடப்பட்டபோது

மரணத்தை பலமுறை கண்டு புன்னகை மலர்ந்த  தோழன் இவன்.

மலர்ச்சி இழந்த மக்களின்

மகிழ்ச்சி முகம் காண அன்று
மாணவ பருவத்தில் சுடு மணலில் விளையாடியவர்
மஞ்சம் சுகவாசம் துறந்தவர்

(“மரணத்தை பலமுறை கண்டு புன்னகை மலர்ந்த  தோழன் இவன்.” தொடர்ந்து வாசிக்க…)

தந்தை பெரியார்

என் தங்கை இளம் வயதிலேயே
ஒரு பெண் குழந்தையையும்
ஒரு ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள்.

(“தந்தை பெரியார்” தொடர்ந்து வாசிக்க…)

ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு.

(“ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?” தொடர்ந்து வாசிக்க…)