நாளை மறுதினம் (10.02.2018) நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல் நிலவரம் பற்றிய கண்ணோட்டம்…

யாழ் மாநகர சபை

—————————-

தமிழ்த்தேசியப் பேரவை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. எந்தத் தரப்பும் பெரும் பெரும்பான்மையைப் பெறக் கூடிய நிலைமை காணப்படவில்லை. ஆகவே, இதுவரையான வரலாற்றுக்கு மாறான முறையில் இந்த முறை புதியதொரு மாநகராட்சி அமையக் கூடிய வாய்ப்புகளே உள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபை
———————————————-

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, போன்ற பெருங்கட்சிகள் போட்டியிட்டாலும் திரு. செல்வேந்திரா தலைமையிலான சுயேச்சைக் குழுவுக்கு கணிசமான ஆதரவுத் தளம் அங்கே உண்டு. ஆகவே அங்கு முத்தரப்புப் போட்டியொன்றே நிலவுகிறது.

இங்கும் நகரசபை நிர்வாகத்தை புதியதொரு கூட்டே உருவாக்கக்கூடிய நிலை காணப்படுகிறது.

பருத்தித்துறை நகரசபை
—————————————

தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழுக்கள் எனப் பல தரப்புகளுக்கிடையில் கடுமையான போட்டி நடக்கிறது.

ஒப்பீட்டளவில் தமிழ்த்தேசியப் பேரவைக்கான ஆதரவுத்தளமே மேலோங்கியுள்ளது. அதேவேளை கேடயம் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவுக்கும் பரவலான அளவில் ஆதரவைக் காண முடிகிறது.

சாவகச்சேரி நகரசபை
———————————–

தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த்தேசியப் பேரவைக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளர் அருந்தவபாலனுடன் ஏற்பட்ட மோதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் அங்கே வலுவானதோர் தளமுண்டு.

இங்கும் நெருக்கடியானதொரு நிலையிலேயே சபையை அமைக்க வேண்டியிருக்கும். அல்லது கூட்டாட்சியாக அமையும்.

வலிகிழக்குப் பிரதேச சபை (கோப்பாய்)
——————————————
தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எனப் பல தரப்பின் கடுமையான போட்டிக் களம் இது.

புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிசக் கட்சி இங்கே புதியதொரு சவாலாக மேலெழுந்திருக்கிறது. இங்கும் ஒரு கூட்டு முன்னணியே ஆட்சியை அமைக்கக் கூடிய களநிலவரமுண்டு.

பச்சிலைப்பள்ளிப் பிரேதேச சபை (பளை)
—————————————————

தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் சுயேச்சைக் குழு ஆகியன போட்டியிடுகின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக் குழுவுக்குமே கடுமையான போட்டி.

நெடுந்தீவுப் பிரதேச சபை
—————————————

ஈ.பி.டி.பிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமே கடுமையான போட்டி. இங்கே ஈ.பி.டி.பிக்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றது.

நல்லூர்ப்பிரதேச சபை
——————————————
.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியப் பேரவை, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் வலுவான போட்டிக்களம் இது. இவற்றுக்கு இணையாக வடமாகாண விவசாய அமைச்சராக இருந்த பொ. ஐங்கரநேசனின் சுயேச்சைக் குழுவும் இங்கே தாக்கத்தைச் செலுத்தும் வகையில் உள்ளது.

வேலணைப்பிரதேச சபை
———————————————–

தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் ஈ.பிடிக்குமே இங்கு கடுமையான போட்டி. பெரும்பாலும் ஈ.பி.டி.பிக்கான வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகிறது.

உடுவில் பிரதேச சபை
——————————————-
தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய முன்னணிக் கட்சிகள் போட்டியிட்டாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான வாய்ப்பே இங்கே காணப்படுகிறது
சங்கானைப் பிரதேச சபை
————————————————
தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய முன்னணிக் கட்சிகள் போட்டியிட்டாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான வாய்ப்பே இங்கும் காணப்படுகிறது
கரைச்சிப் பிரதேச சபை (கிளிநொச்சி)
தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் சுயேச்சைக் குழுவும் போட்டியிடுகிறது. கடுமையான போட்டியென்றால், சுயேச்சைக் குழுவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலேயே உள்ளது.
அதிகாரத்தைக் கூட்டுத்தரப்பே கைப்பற்றக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. அல்லது வலுவான ஆட்சியை யாரும் அமைக்க முடியாத நிலை உருவாகும்.

வவுனியா நகரசபை
————————————–
தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, மற்றும் முஸ்லிம் தரப்புகள் போட்டியிடுகின்றன. கடுமையான போட்டி என்பது தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையேதான் உள்ளது.

(தொடரும்)

(கருணாகரன் சிவராசா)