வியட்நாமும் நம்ப மலையகமும்

சுமார் இருபது வருடங்கள் அமெரிக்காவுடன் நடந்த உக்கிரமான போரில் சுமார் 51 லட்சம் மக்களை வியட்நாம் இழந்தது மட்டுமன்றி அந்த கொடூர போரில் போராளிகள் மற்றும் அமெரிக்க படையினர் என 14 லட்சம் பேர் பலியாகினர் இதில் பலியான அமெரிக்க படையினரின் தொகை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது, ஹோ சி முங் என்ற புரட்சி தலைவனால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வியட்நாமிய மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரங்கேறியது . இப்படி பல இழப்புகளை சந்தித்த இந்த நாடு இன்று சீனாவுக்கு அடுத்த இடத்தில் பொருளாதாரத்தை தன்னகத்தே கொண்டு உலகில் முன்னணி வகிக்கிறது, எமது நாட்டை போன்றே அரிசி, தேயிலை, கோப்பி, ரப்பர் மற்றும் மீன்பிடி என்ற உற்பத்திகளுடன் முன்னேறியுள்ளது. மலை முகடுகளை செதுக்கி சிற்பமாக்கி அங்கே விவசாயம் மேற்கொள்கிறார்கள் அங்கு பாவிக்கப்படும் உரம் இயற்கையாக எடுக்கப்படுவது ரசாயனம் இல்லை, இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் இதே போன்ற வளம் கொண்ட மலையக பகுதிகளில்தான் நாமும் வாழ்கிறோம், நீர்விழ்ச்சிகளை விவசாய நிலம் நோக்கி திசை திருப்பினாலே போதும் தரிசு நிலங்களை விளை நிலமாக்கலாம்.

(வரதன் கிருஸ்ணா)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 10)

(அக்கினிஞானஸ்நானம்)

மீண்டும் ஓர் கூட்டம்.
ஆனால் இது சற்றுவித்தியாசமானது.
ஜக்கியநாடுகள் சபையின் ‘ஆயுதப் போரட்டத்தில் சிறுவர்கள்’என்றபிரிவின் உலகளாவியதலைவர் திரு. ஓலராஒட்டுண்ணு 3 நாள் வன்னிவிஜயத்தின் இறுதியில் வன்னியில் பணிபுரியும்சகலசர்வதேசஅரசசார்பற்ற நிறுவனங்களினுடனான ஒன்றுகூடல். வன்னியில் புலிகளால் அவருக்கு அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பங்குபற்றியசகல கூட்டங்களிலும் புலிகள் கலந்துகொண்டார்கள்.  ஆனால் நான் குறிப்பிடும் இந்தக்கூட்டத்திற்குபுலிகள் அழைக்கப்படவில்லை.
இந்தக்கூட்டத்தில் நான் ஒருவனே இலங்கைப்பிரசை. (வெள்ளாட்டுமந்தையில் கறுப்பாடு!)

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 10)” தொடர்ந்து வாசிக்க…)

பெற்றோரே! உங்கள் பிள்ளைகளை ”அவையத்து முந்தி இருக்க” செய்வீர்களா?  

வட மாகாணத்தில் இன்று பிரதான பேசுபொருளாக இருப்பது போதைப் பொருள் பாவனை. அதிரடிப் படையை களம் இறக்கி தேடுதல் வேட்டை முதல் கைதுகள் வரை தொடர்வதும், நீதிமன்றம் கடும் தண்டனைகள் விதிப்பது  மூலமாகவும் மட்டும்,  இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை.காரணம் இது எம் சமூகம் சார்ந்த பிரச்சனை. இதனை செய்பவர்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் யார் என்பது இந்த சமூகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். போதைப் பொருள் கடத்துபவரை வேண்டுமானால் ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்.

(“பெற்றோரே! உங்கள் பிள்ளைகளை ”அவையத்து முந்தி இருக்க” செய்வீர்களா?  ” தொடர்ந்து வாசிக்க…)

அபிவிருத்திக் கடன், இறுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகத்தை ஊக்குவிக்கவே உதவுகின்றது.

மேற்கத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்கும் அபிவிருத்திக் கடன், இறுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகத்தை ஊக்குவிக்கவே உதவுகின்றது. எத்தியோப்பியாவிற்கான அபிவிருத்தி உதவியில் வர்த்தகம் செய்யும் நெதர்லாந்து நிறுவனங்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்று (Hollandse handel), டச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதிலிருந்து சில தகவல்கள்.

(“அபிவிருத்திக் கடன், இறுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகத்தை ஊக்குவிக்கவே உதவுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)

சும்மா காலமும் பட்டையடியும்

ஓபாமாவின் மகள் Sasha (15) படிப்பில் ஈடுபடும் அதேநேரத்தில் கடலுணவு விடுதியொன்றில் பகுதிநேர வேலைசெய்வதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் (இலங்கையர், இந்தியர்) பகிர்ந்துள்ளனர். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விடயத்தை இது நினைவுபடுத்தியுள்ளது. பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவ மாணவிகள் விடுமுறைகால வேலை தேடி உணவகங்கள், தொழிற்சாலைகள் என ஒரு வாரமோ இரு வாரமோ அல்லது ஒரு மாதமோகூட வேலைக்கு போய் உழைப்பார்கள். அந்தப் பணத்தை சேர்த்துவைத்து தமக்கான பொருட்களை வாங்கவோ கார் பழகுவதற்கோ பயன்படுத்துவார்கள். பல்கலைக் கழக மாணவ மாணவிகள் பாடசாலை காலங்களில்கூட வாரத்துக்கு ஒரு நாளோ இரு நாட்களோ வேலைக்குப் போய் தம்மாலியன்றவரை சொந்தக் காலில் நிற்க முயற்சிப்பார்கள்.

ஆனால் இலங்கையிலோ படிச்ச பிள்ளை குப்பை பொறுக்கவோ? கடையிலை வேலைசெய்யவோ? தோட்டத்தில் புல்லுப் பிடுங்கவோ? என கௌரவப் பிரச்சினையில் மாய்கிறோம். குடும்பம் கஸ்ரத்தில் ஓடினாலும் இந்த தன்மானம் வாய்க்கால் நிரம்பி ஓடும். பாடசாலை லீவுக்கு மட்டுமல்ல உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டு முடிவுகள் வருகிற நீண்ட காலப் பகுதியில்கூட உலாத்துவதைத் தவிர எதைச் செய்கிறோம்.

(“சும்மா காலமும் பட்டையடியும்” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு எழுகதமிழ் சொன்ன செய்தி என்ன.???

நடந்து முடிந்த எழுக தமிழ் தேசியஉணர்வை சொல்லுது, விடுதலை வேட்கையை சொல்லுகிறது, இன்னும் அதை சொல்லுது இதை சொல்லுது என்று எழுத்தாளர்களும், நடுநிலையாளர்களும், முகநூல் பொறட்சியாளர்களும் பக்கம் பக்கமாக எழுதி பெயர் வாங்குவதற்கு ஒரு பிடிமானம் கிடைத்துள்ளது. மற்றும் விளங்காஶ்ரீ, Ibc தொலைக்காட்சி விவாதம் என்று அடுத்து வரும் மே பதினேழுவரை கூப்பாடு போட்டு வசூல் வேட்டைய விரிவுபடுத்தலாம்.

(“கிழக்கு எழுகதமிழ் சொன்ன செய்தி என்ன.???” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!

(மீரா ஸ்ரீனிவாசன்)
ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் மத்தியில் அவருக்கு உருவான செல்வாக்கும் செல்லரித்துப்போனது.

(“இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?

தமிழகத்தில், குறிப்பாக தென் தமிழகத்தில், இஸ்லாமியருக்கும் பிற சமூகத்தவருக்கும் இடையே இன்றளவும் நிலவிவரும் மாமன் – மச்சான், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் என்ற ஒரே குடும்பம் போன்ற உறவு முறைகள், உலகில் வேறெங்கும் காணப்படாத, தமிழகத்துக்கும் தமிழருக்கும் மட்டுமே உரிய சிறப்புக் குணாம்சம்!

(“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன.

(“உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன.

(“கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்” தொடர்ந்து வாசிக்க…)