கிழக்கு எழுகதமிழ் சொன்ன செய்தி என்ன.???

நடந்து முடிந்த எழுக தமிழ் தேசியஉணர்வை சொல்லுது, விடுதலை வேட்கையை சொல்லுகிறது, இன்னும் அதை சொல்லுது இதை சொல்லுது என்று எழுத்தாளர்களும், நடுநிலையாளர்களும், முகநூல் பொறட்சியாளர்களும் பக்கம் பக்கமாக எழுதி பெயர் வாங்குவதற்கு ஒரு பிடிமானம் கிடைத்துள்ளது. மற்றும் விளங்காஶ்ரீ, Ibc தொலைக்காட்சி விவாதம் என்று அடுத்து வரும் மே பதினேழுவரை கூப்பாடு போட்டு வசூல் வேட்டைய விரிவுபடுத்தலாம்.

கிழக்கில் பல லட்சம் தமிழர்கள் வாழும் இடத்தில் வெறும் ஆயிரம்பேருக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து கொண்டுவரப்பட்டவர்கள் அதிலும் பெண்கள் மிகசொற்பமானவர்களே.

இதில் பெரும் அரசியல்லாபம் அடைந்தவர்கள் மக்களால் தூக்கி சாக்கடை சகதிக்குள் போடப்பட்டவர்களான திரு.கஜேந்திரகுமார், மண்டையன் குழு புகழ் திரு.சுரேஸ், இந்திய கைக்கூலி சித்தார்த்தன் கும்பல்,

மற்றும் ஓரினச்சேர்க்கையை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த பிரேமானந்தா பக்தனும் ஓடுகாலி திரு.விக்கினேஸ்வரனும் சேர்ந்து எமக்கு உலகநாடுகளின் முயற்சிகளுடன் அமையவிருக்கும் அரசியல் தீர்வை குழப்ப முயற்சிக்கிறார்கள்.

வியாழேந்திரன் என்ற எம்பி அண்மையில் கனடா சென்று வசூலித்த பல கோடிரூபா பணம் எங்கே அதற்கு இதுவரை கணக்கு காட்டவில்லை மாறாக கொழும்பில் தனி வீடு வாங்கியுள்ளார்.

அவரை குற்றப்புலனாய்வாளர்கள் விசாரித்து வரும் இந்த வேளையில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் ஆதரவை தன்பக்கம் அனுதாப அலைகளை வீசட்டும் என்று பகல் கனவு கண்டுவருகிறார்.

புலத்திலுள்ள சருகுப்புலிகள் இதைவைத்து இனி அடுத்தவர்களை துரோகிப்பட்டம், திருட்டுப்பட்டம்
கொடுத்து தாங்கள் ஒரு பொறுப்பற்ற அரசியல் கோமாளிகள் என்று நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு எனவே விடாதீர்கள் தொடருங்கள்.

அடுத்து தலைவர் வருவார் விடமாட்டார் என்று சொல்லும் புலத்து ஆன்மீகவாதிகள் மற்றும் கோயில் முதலாளிகள் இன்னும் பத்து கோயில்களை கட்டி வசூல் வேட்டையை விரிவு படுத்தலாம்.

என்னைப்பொறுத்தவரையில் இது தேவையற்ற அவசியமற்ற போராட்டம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட TNA எடுத்து வரும் அரசியல் முற்சிகள் தோற்கும் பட்சத்தில் இப்படியொரு மக்கள் போராட்டத்தை செய்தால் ஆக்கபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் இருக்கும் அத்தோடு உலகநாடுகளும் இந்தியாவும் எமது பக்கம் நிற்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

தமிழர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததாக இதுவரை வரலாறு இருந்ததாக இல்லை, எல்லோரும் தலைவராக வேண்டும் என்ற மரணவெறியைத்தவிர ஒற்றுமை என்பது வேறும் ஏட்டளவில்தான் உள்ளது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழரசு கட்சியை தவிர்த்து இந்தப்போராட்டம் நடந்துள்ளது என் கேள்வி என்னவென்றால் இது சிங்கள இனவாதிகளுக்கு எதிரான போராட்டமா.???
அல்லது தமிழரசுக்கட்சிக்கு எதிரான போராட்டமா.???

ஒரு பக்கம் சிங்கள இனவாதிகள் இந்த சமாதானத்தை எப்படியாவது குழப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். மறுபக்கம் மகிந்தா தனது ஆட்சியை மறுபடியும் கைப்பற்ற துடிக்கிறார், சிங்கள ஊடகங்கள் சிங்கள இனவாத வெறிகொண்டு தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை சிங்கள மக்களுக்கு பரப்பி வருகின்றனர்.

இந்த எழுகதமிழ் போராட்டத்தை எந்த வெளிநாட்டு ஊடகம் காணொளி செய்தியாக வெளியிட்டுள்ளன இல்லையே,இதுவரை எதுவுமே இல்லையே.

கடந்தாண்டு வடக்கில் நடந்து முடிந்த எழுகதமிழில் கலந்து கொண்ட இரு இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது இதற்கான இழப்பீட்டை எவர் பொறுப்பேற்றார்கள்.???

இதற்கு பிறகு இன்னும் எத்தனை முன்னால் போராளிகள் கைதாகவுள்ளனர் என்பதை நினைத்தால் நெஞ்சுபதறுகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது எனவே இதை தவற விடுவோமாக இருந்தால் இப்படியொரு வாய்ப்பு இனிமேல் அமையாது அமையவும் மாட்டாது.!!!

கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தித்து பார்க்க வேண்டாமா.???

(Siva Erambu)