முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 10)

(அக்கினிஞானஸ்நானம்)

மீண்டும் ஓர் கூட்டம்.
ஆனால் இது சற்றுவித்தியாசமானது.
ஜக்கியநாடுகள் சபையின் ‘ஆயுதப் போரட்டத்தில் சிறுவர்கள்’என்றபிரிவின் உலகளாவியதலைவர் திரு. ஓலராஒட்டுண்ணு 3 நாள் வன்னிவிஜயத்தின் இறுதியில் வன்னியில் பணிபுரியும்சகலசர்வதேசஅரசசார்பற்ற நிறுவனங்களினுடனான ஒன்றுகூடல். வன்னியில் புலிகளால் அவருக்கு அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பங்குபற்றியசகல கூட்டங்களிலும் புலிகள் கலந்துகொண்டார்கள்.  ஆனால் நான் குறிப்பிடும் இந்தக்கூட்டத்திற்குபுலிகள் அழைக்கப்படவில்லை.
இந்தக்கூட்டத்தில் நான் ஒருவனே இலங்கைப்பிரசை. (வெள்ளாட்டுமந்தையில் கறுப்பாடு!)


ஆரம்பத்தில் சிறுவர் பாதுகாப்புநிதிய இங்கிலாந்துப் பிரதிநிதிவன்னியில் சிறுவர்களின் அப்போதையநிலைமைகளைஎடுத்துக்கூறினார். குறிப்பாகசிறுவர்கள் வலுக்கட்டாயமாகபடையணியில் சேர்க்கப்படுவதையும் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் நிலைஏற்பட்டிருப்பதைகோடிட்டுக்காட்டினார். அதன் பின்னர் திரு. ஓலராஒட்டுண்ணுஅவர்கள் தனதுவிஜயத்தின் நோக்கத்தையும் அதன்போதுதான் அறிந்தவற்றையும் கூறிவிட்டு“நாட்டில் சமாதானம் ஏற்படவாய்ப்புகள் உள்ளதா”எனபொதுவானகேள்வியொன்றைத் தொடுத்தார்.

கருத்துக் கூறியஅனைவருமேபிராபாகரன் இருக்கும்வரைஅதுசாத்தியம் இல்லையென்ற எண்ணத்தையே முன்வைத்தனர். பிராபாகரனால் சுதந்திரமாகநடமாடமுடியாது. அதனால் அவர் தொடர்ந்துசண்டைபிடித்துக்கொண்டேயிருப்பார் என்றுதமதுஎண்ணத்துக்கானகாரணத்தையும் அவர்கள் கூறினர். நான் எவ்விதபேச்சு மூச்சுமின்றிகம்மென்றுஇருந்தேன். எனக்குஒருவிதத்தில்மனத்திருப்தி. இவ்வளவுவெளிநாட்டவரும் என்முன்னால் பிரபாகரனைப்பற்றிஎவ்விதஒளிவுமறைவின்றி கூறுவதுஅவர்கள் என்மேல் வைத்துள்ளநம்பிக்கையையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுவதாகவேநான் கருதினேன்.

இவர்களதுகருத்துக்களை கூர்ந்துசெவிமடுத்துக்கொணடு இருந்தஒலாராஒடண்ணு“Do you got anything to say about this” என்றுஎதிர்பாராவிதமாகஎன்னைநோக்கிக் கேட்டார். எனக்குத்தெரியும் இது நடக்குமென்று. இதற்குமுன்னரும் பலகூட்டங்களில் இது போன்ற இக்கட்டுக்களைசந்தித்துள்ளேன். எனவேதான் மற்றவர்கள் கதைக்கும் பொழுதுஎன்னைநானேதயார்படுத்திக்கொண்டிருந்தேன்.
“அரசியலில் என்னநடக்குமெனஎதிர்வுகூறுவதுகடினம் என்பதைநீங்கள் நன்குஅறிவீர்கள்தானே…”எனநான் ஆரம்பிக்கஅவர் புன்முறுவலுடன் மேலும்கீழுமாகமெதுவாகதலையசைத்தார். “ஏனையோர் கூறியகருத்துடன் முரண்படஎன்னிடம் எவ்விதகாரணங்களும் இல்லை”எனத்தொடர்ந்து“ஆனால் தற்போதையஅரசு (சந்திரிக்காஅம்மையாரின்) சமர்ப்பித்திருக்கும் தீர்வுத்திட்டத்தைசரிவரகையாண்டால் இக்கொடியயுத்தத்தில் சிக்கியிருக்கும் சிறுவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்பதில் எனக்குஎவ்விதசந்தேகமும் இல்லை”எனபட்டும்படாமலும் கூறினேன். இம்முறைஅங்கிருந்தஅநேகர் மேலும்கீழுமாகதலையாட்டுவதுபோல் எனக்குப்பட்டது.
கூட்டம் முடிவுற்றபின்னர் இரவுஉணவுபரிமாறப்பட்டது. இக்கூட்டத்திற்கெனபலநிறுவனங்களின் வதிவிடபிரதிநிகள் கொழும்பிலிருந்துவருகைதந்திருந்தார்கள். அவர்களுக்குகுறுகியநேரத்தில் வன்னியில் இடம்பெறும் பலவிடயங்களைஅறிந்துகொள்ளஆவல். இன்னோர் நிறுவனத்தின் வதிவிடபிரதிநிதிஎன்னைத் தேடிவந்துதானாகவேஉரையாடலைத் தொடங்கினார். பலவிடயங்கள் குறித்துகதைத்தோம். வேறும் சிலரும் எம்முடன் இணைந்துகொண்டனர்.
இறுதியில்; விடைபெறும் பொழுதுஒருவெளிநாட்டுநிறுவனத்தின் பிரதிநிதிஎன்னிடம் வந்து“உமக்குஎப்போதாவதுவன்னியைவிட்டுவெளியேறவேண்டுமெனதோன்றினால் என்னுடன் தொடர்புகொள்ளவும்”எனக்கூறிதனதுவிசிட்டிங்காட்டைத் தந்தார். நன்றி கூறிஅதைவாங்கிஎனதுசேர்ட் பொக்கட்டில் மிகப் பத்திரமாகவைத்துக்கொண்டேன்.
(நற்செய்தி: அடுத்த அத்தியாயத்துடன் இத்தொடரின் முதற் பாகம் நிறைவு பெறும்)