அன்புநிறைந்ததாயாருக்குஆழ்ந்தஇரங்கல்கள்…

(இராமச்சந்திர மூர்த்தி.பா)

குலம் அக்கா ஜோசப்பின் வேதநாயகம் அவர்கள் 11.07.2019 அன்று யாழ்நகரில் மாரடைப்பால் காலமானார்
என்பதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்….

1960 மற்றும் 1970களில் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் களச்செயற்பாட்டாளராக விளங்கியவர். குலம் அக்காவினுடைய பிள்ளைகள் பாசத்திற்குரிய தங்கை கௌரி,நளினி ஆகியோர் உள்ளிட்ட அவருடைய பிள்ளைகள் அனைவருமே அவரைப்போல் போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர்கள்.

அதனால் அவருடைய குடும்பம் சிறை வாழ்க்கை ,சித்திரவதை என்று பல துன்ப துயரங்களைச் சந்தித்தது.
ஓருகாலத்தில் அவர்களினுடைய வீடு
போராட்டத் தலைவர்வர்களான பிரபாகரன், உமாமகேஸ்வரன், தோழர் பத்மநாபா போன்றவர்கள் பாதுகாப்பாக வந்து தங்கிப்போகுமிடமாகவும் இருந்தது.
புஸ்பராணி அவர்களின் “அகாலம்” நூலிலும் புஸ்பராஜா அவர்களின் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்னும் நூலிலும் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குலம் அக்காவின் குடும்பத்தின் பங்களிப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவர் வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சராய் இருந்த பாசத்திற்குரிய தோழர் வரதராஜப்பெருமாள் மற்றும் பாசத்திற்குரிய தோழர் மாவின் என அழைக்கப்படும் Roy tontan அவர்களின் மாமியாருமாவார்.

ஈழ மக்களின் அரசியல் பயணத்தில் பல தசாப்தங்களாக இணைந்து செயற்பட்டுவந்தவர் அன்புத் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் துயரில் நானும் எனது துணைவியார் எனது அன்பு பிள்ளைகள் ஆகியோரும் இணைந்து கொள்கிறோம்.

அன்புத் தாயாருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்…
தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
இந்த தாயாரின் கையால் நானும் உணவு உண்டிருக்கிறேன்…
அவ்வளவு பாசமுள்ள தாயாரின் இறுதி அஞ்சலி
அன்னாரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை 16 – 07 – 2019 அன்று காலை நடை பெறுகிறது.
இந்த இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை யே என்று மனம் வேதனைக் கொள்கிறது…

அன்புநிறைந்ததாயாரை இழந்து வாடும் அவரது குடும்பதினர்

அன்புத் தங்கைகள்
Gowry Perumal
Nalini Roy.

அன்புத் தோழர்கள்
Varathar Rajan Perumal
Roy Danton.

அன்பு மருமகள்கள்
Kannamma perumal.
Ragavadhini perumal.
Nelambari perumal.
Jennifar Niruthika Rai
Karthika Rai

ஆகிய அனைவருக்கும்…
மற்றும் தோழர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

என்றும் அன்புடன்….
இராமச்சந்திர மூர்த்தி.பா

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 8

(யஹியா வாஸித்)
எப்போது உருப்படும் இந்த தேசம்,இனி என்ன செய்வதாய் உத்தேசம்
1983 ஜூலை. மொத்த ஸ்ரீலங்கா மக்களினதும் வாழ்க்கை,
வாழ்வாதாரம் அனைத்தையும் வெட்டி குழிதோண்டி
புதைத்த மாதம். அந்த நாள் எல்லா நாளையும்போல,
பொல பொல எண்டுதான் எங்களுக்கும் விடிஞ்சது,
ஆனா நேரம் போக போகத்தான் நாடி,நரம்பு, மூளை,
முண்ணான் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது.

மாற்று அரசியல் சக்திகளின் பலவீனம்.

(கருணாகரன்)
2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, எதிர்காலத்தில் தமிழ்த்தரப்பினுடைய அரசியலைக் கையாள்வதைப் பற்றிச் சிங்கள அரசியல் உயர் மட்டத்தில் பல விதமான உரையாடல்கள் நடந்தன. இதன்போது பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்தன. அதில் முக்கியமான ஒன்று, ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஈழவிடுதலை இயக்கங்களை எந்த வகையிலும் முதன்மைப்படுத்தக் கூடாது என்பது. அவை அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டாலும் சரி அல்லது சிங்களச் சமூகத்தோடு நெருங்கிச் செயற்படும் ஆர்வத்தை வெளிப்படுத்தினாலும் சரி, அவற்றை எந்தக் காரணம் கொண்டும் உள்ளே எடுக்கக் கூடாது என்றவாறாக.

34வது ஆண்டு நினைவில்…………

07.07.1986ம் ஆண்டு யாழ் மாவட்டத்தின் குருநகருக்கும் பாலைதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மக்கள் விடுதலைப் படையின் அன்றைய பிரதமதளபதியாகவிருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா நோக்கி EPRLF இன் உறுப்பினர்கள் பயனித்த படகு ஒன்று சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்ததில் 7 தோழர்கள் உயிரிழந்தனர் . அப்படகில் 15 பேரளவில் பயனித்திருந்தனர் .குருநகரைச் சேந்த தோழர் கெனடி அப்படகிற்கு ஓட்டியாக சென்றார். அவரினுடைய கடுமையான முயற்சியினூடாக தோழர் டக்ளஸ் தேவானந்தா கரைக்குகொண்டுவந்து சேர்க்கப்பட்டார்.
ஏனைய தோழர்களின் மீட்புப்பணியினை தோழர்கள் மேற்கொண்டபோது தோழர்களான செண்பகன் ,சுகிர்தன் ,அசோக் ,இமாம் ,எட்வேட் , ஞானம் ,நாகராசா ஆகிய ஏழு தோழர்களும்
மரணமடைந்திருந்தனர்.
அதில் தோழர் நாகராசாவின் சடலம் கிடைக்கவில்லை . ஏனையவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் . மூன்று நாட்களின்பின்பு மானிப்பாயிலுள்ள மயானத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் தோழர்களுக்கான அஞ்சலிகள் செலுத்தப்பட்டு இரானுவ மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன .

தோழர் செண்பகன் (அகிலன்)

உரும்பிரயினை பூர்வீகமாக கொண்டபோதும் இவர் கொழும்பில் வாழ்துவந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர் . இவருடைய கல்லூரியின் சமகால மாணவர்களும் தோழர்களுமான கபூர்,இப்ராகீம்.றொபின் போன்றவர்களுடன் 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து 1983 ம் ஆண்டின் இனக்கலவரம் வரை GUES என்னும் மாணவர் அமைப்பின் கொழும்பு மாவட்டத்தின் அமைப்புச் செயற்பாடுகளில் முக்கிய பங்கற்றியவர் .தோழர் கபூரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளில் முக்கியபங்ற்றியிருக்கின்றார்.குறிப்பாக தோழர் கபூர் தலைமையில் மாணவர் மத்தியில் முத்தமிழ் கலாமன்றம்என்ற மறைபெயரில்
இயங்கிய செயற்பாடுகளிலும் 1977ம் ஆண்டு கிழக்கு மாகானத்தில் ஏற்பட்ட சூறாவளிக்கு மேற்கொண்ட நிவாரணப்பணிகளையும் குறிப்பிடலாம். 1983ம் ஆண்டில் ஏற்பட்டஇனக்கலவரத்தில் கொழும்பில்
அவருடைய வீட்டிற்கு புகுந்த காடையர்கள் தந்தையாரையும் அண்ணனையும் படுகொலை செய்தனர்.எதிர்பாராதவிதமாக சம்பவதினத்தன்று தோழர் கபூருடன் நின்றிருந்ததால் அப்படுகொலையிலிருந்து தப்பியிருந்தார்.அவருடைய ஓரேஒரு சகோதரியுடன் உயிர்தப்பி யாழ் மண்ணை வந்தடைந்தார். இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இயங்கிய அகதிமுகாம்களில் தங்கியிருந்த மக்கள் மத்தியில் தோழர் கபூர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பணியாற்றியிருந்தார்.யாழ் மண்னிற்கு வந்து மரணிக்கும் வரைக்கும் செம்மண் பிரதேசத்திலுள்ள குறிப்பாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட கூலிவிவசாயிகள்,மாணவர்கள், இளைஞ்ஞர்கள் மத்தியில் அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.அவருடைய குடும்பம் இனக்கலவரத்தில் உயிர்களை, சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியபோதும் இவரிடம் குறுகிய இனவாதமோ அல்லது பழிவாங்கும் எண்ணமோ இருந்ததில்லை.சிங்கள மக்கள்மீதான நேச உறவும் ,ஈழ விடுதலையினூடாக முழு இலங்கைக்குமான புரட்சிக்கான விடுதலையில் தெளிவாகவிருந்தார்.

தோழர் சுகிர்தன் (பரமநாதன்)

கல்வியங்காட்டை பிறப்பிடமாக கொண்டவர் உயர்கல்வியை முடித்தபின்பு 1980 களின் ஆரம்பத்தில் 
ஜெர்மனியின் தலைநகரான பெர்லீனில் வாழ்ந்துவந்தார். ஜெர்மனியில் தோழர் ஜோர்ஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டஅரசியல் வேலைத்திட்டங்களில் இனைந்து பணியாற்றியவர்.கட்சியின் பிரச்சார வெளியீடுகள் மற்றும் நிதிசேகரிப்பு போன்ற விடயங்களில் முக்கிய பங்காற்றியவர்.1983ம் ஆண்டு ஏற்பட்ட
இனக்கலவரத்தினைத்தொடர்ந்து1984 ம் ஆண்டு பாலஸ்தீனவிடுதலை
இயக்கமொன்றின் பயற்சி முகாமில் பயிற்சிபெற்ற குழுவில் இவருமொருவராக இனைந்து பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி மரனிக்கும் வரைக்கும் பல்வேறு இரானுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்தக்கொண்டவர்.

தோழர் அசோக் (வில்பேட் மோகன்ரர்ஜ்)

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1983 ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இரானுவப் பயிற்சியை முடித்து தாயகம்திரும்பி பல்வேறு இரானுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டவர். குறிப்பாக இளவாலை இரானுவமுகாமுக்கு பொறுப்பாக இயங்கியதுடன் காரைநகர் கடற்படை முகாம்மீதான தாக்குகலுக்காக தோழர்களை தங்கவைத்து தயார்படுத்தியதிலும் முக்கிய
பங்காற்றினார்.

தோழர் இமாம் (கிருபானந்தம்)

தோழர் இமாம் சாவககச்சேரியைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தோழர் ரேபேட் அவர்களினூடாக கட்சிக்குள் இனைந்து கொண்டவர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டு வெளியில் வசித்து வந்தார். 1983 ஆண்டு
இனக்கலவரத்தினைத் தொடர்ந்து நேரடியாக போராட்டத்தில் இனைந்து கொண்டவர். இவரும் பாலஸ்தீனவிடுதலை இயக்கமொன்றின் போர்ப்பாசறையில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியபின் அவர் மரனிக்கும்வரை யாழ் மாவட்டத்தில் பணியாற்றினார்.

தோழர் எட்வேட் (ஈஸ்வரன்)

கோப்பாயைப் பிறப்பிடமாகக்கொண்டவர். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் உயர் கல்வி பயின்றபோது தோழர் இராஜ ன் அவர்களினால் 1980 களின் ஆரம்பத்தில் GUES என்னும் மாணவர் அமைப்பில் இனைத்துக்கொள்ளப்பட்டவர். அவர் இறக்கும்வரை யாழ் மாவட்டத்தில்
குறிப்பாக கோப்பாய் தொகுதியிலுள்ள உயர் கல்விபயிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் மத்தியிலும் அரசியல் பணியாற்றினார்.

தோழர் ஞானம் (திருச்செல்வம்)

கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1983 ன் இனக்கலவரத்தினைத் தொடர்ந்து கல்வியை இடைநிறுத்திவிட்டு போரட்டத்தில் இனைந்து கொண்டவர். இரானுவப்பயிற்சியை முடித்துக்கொண்ட பின்பு வடகிழக்கில்
செயற்பட்டவர்.குறிப்பாக பாதுகாப்பு பிரிவில் நீண்டகாலமாக பனியாற்றியவர்.

தோழர் நாகராசா (விமலேந்திரன்)

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1983ம் ஆண்டின் இனக்கலவரத்தினைத் தொடர்ந்து திருகோணமலையில் ஏற்பட்ட அசாதாரண
சுழ்நிலைகாரணமாக கல்வியைத் துறந்து போராட்டத்தில் இனைந்துகொண்டு
பின்நாளில் இரானுவப்பயிற்சியை முடித்து களத்தில் செயற்பட்டவர்.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 5

(யஹியா வாஸித்)

கள்ளத் தோணிகளில் வந்த சோனவனும் , நல்ல தோணிகளில் வந்த மகாத்மாக்களும்.மதம்,மதம், அது , உன்மதமா, என்மதமா,சம்மதமா எண்டு யாருக்குமே புரியல, அதப்பத்தி புரிஞ்சவங்களும் புரியாத எங்களுக்கு புரிய வைக்க முயலல. எல்லாரும் நாங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் எண்டுதான் அடிச்சி சொல்றாங்க.

5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால் உருவானவை ஆகும்.

அமெரிக்க – ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல் FacebookTwitter

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன. அந்தப் பேரழிவைத் தமது கேலிக்கூத்துகளின் மூலம், சிலர் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வதற்கு உதவாத உலகைப் பரிசளிப்பதற்கு, இவர்கள் முண்டியடிக்கிறார்கள்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?

ஈஸ்டர் ஞாயிறு தினமான ஏப்ரல் 21ந் திகதி இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஊடுருவிவிட்டதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான இஸ்லாமிய மக்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பலமாகக் காலூன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளன என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

வெள்ளாளர்கள்; யாழ்ப்பாணத்தின் துயரம்

” குவாங்கோ நதியை சீனாவின் துயரம் என்பதுபோல; யாழ்ப்பாணத்தின் துயரம்; யாழ்ப்பாணத்து வெள்ளாளர்” என்பார் நண்பர் ஒருவர். யாழ்ப்பாணத்தில்; பிராமணர்கள் ஆதிக்க சாதி இல்லை என்று பார்த்தோம். ஆனால், பிராமணர்கள் செய்யக் கூடிய கொடுமைகளை; கீழ் ஜாதியினருக்கு வட்டியும் முதலுமாகச் செய்தனர் வெள்ளாளர்கள். உண்மையில் கேரளத்துக்கு நம்பூதிரிகளோ எப்படியோ; யாழ்ப்பாணத்துக்கு வெள்ளாளர்கள் அப்படி.