கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில்நடைப்பெற்றயுத்தகுற்றங்கள்தொடர்பாகநீதிகிடைக்கவேண்டுமானால்வெளிநாட்டுநீதித்துறையின்உள்நுழைவுஅவசியம்எனமுன்னாள்நீதியரசரும், வடக்குமாகாணமுன்னாள்முதலமைச்சரும்தமிழ்மக்கள்கூட்டணியின்தலைவருமானசி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
அவர்ஊடகங்களுக்குஅனுப்பிவைத்துள்ளகேள்விபதில்ஊடகஅறிக்கையில்மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இலங்கையின்நீதித்துறைதற்போதுசிறந்ததீர்ப்புக்களைத்தரத்தொடங்கியுள்ளன. எனவே, உள்நாட்டு நீதிபதிகள்குழாம்யுத்தக்குற்றவிசாரணைகளைநடத்தலாம்என்றும்வெளிநாட்டுஉள்ளீடல்கள்தேவையில்லைஎன்றும்கூறப்படுகிறது. ஒருநீதியரசராகஇருந்தஉங்களின்கருத்துஎன்னஎன்றகேள்விக்குபின்வருமாறுவிக்னேஸ்வரன்பதிலளித்துள்ளார். (“இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி

(ஜெரா)

இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். (“இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி” தொடர்ந்து வாசிக்க…)

உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ

(ஜனகன் முத்துக்குமார்)

ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் முனைப்புக் காட்டுவதாகவே உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும், ஐரோப்பிய ஒன்றியத் தொடர் கூட்டத்தில், கூட்டு ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான தேவையை இந்த மாதம் ஆதரித்திருந்தனர். இந்த இரு நாடுகளும், வலுவான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாவன என்பது ஒரு புறமாக இருக்க, மறுபுறமாக, பொருளாதார – அரசியல் கண்ணோட்டங்களிலிருந்து, அவர்களுடைய வார்த்தைகள் வெறும் அரசியல் சார்ந்தது அல்லாமல், தீர்க்கமான ஒரு விவகாரம் என்பது நோக்கத்தக்கது. (“உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ” தொடர்ந்து வாசிக்க…)

முற்றுப்பெற்றது அரசியல் நெருக்கடி

(விசு கருணாநிதி)

நாட்டில் சுமார் ஐம்பது நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி முற்றுப்பெற்றுள்ளது. நாட்டு மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதோடு, அரசியல் கொந்தளிப்பு தணிந்திருக்கிறது. தணிந்தது என்பதைவிட முற்றாகத் தீர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். (“முற்றுப்பெற்றது அரசியல் நெருக்கடி” தொடர்ந்து வாசிக்க…)

சமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை

(ஜெஸ்மி எம்.மூஸா)

சமூக வலைப்பின்னல் ஊடகங்களுக்குள் சிக்கி அவ்வளர்ச்சி நிலைக்கேற்ப நகராதவன் இயங்குநிலையற்றவனாகவே கணிக்கப்படுகின்றான். உலகத்தைச் சுருட்டி உள்ளங்கைக்குள் வைத்து ஒரு நொடிப்பொழுதில் தகவல்களை அள்ளிக் கொள்ளும் அபார துறையாக மாறியிருப்பது சமூக ஊடகங்களே என மார்பு தட்டிக் கொள்ளும் தொடர்பாடல் யுகத்தில் நாம் வாழுகின்றோம். (“சமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்த தேர்தல் ( பாகம் – 2 )

சிறிலங்காவில் உள்ள பா .உ. க்கள் எத்தனை வகைப்படுவர். ( சுலோகம் – ஏகதேச காம்போதி )
(சஹாப்தீன் நானா )
குரூப் ஒன்று –
பரம்பரை பரம்பரையாக அப்பாட  அப்பா, அந்த அப்பாட அப்பாட அப்பப்பா,அம்மாவழி உறவுகள்,பழைய
பண்ணையாளர்கள், வெள்ளையனுக்கு வால்  பிடித்தவர்களின் வாரிசுகள் என ஒரு மென்மையான,
வெள்ளையும் சொள்ளயுமான அல்லது கருப்பும் ,கம்பீரமும் கலந்த முறுக்கு மீசை பா.உ க்கள்.

(“அடுத்த தேர்தல் ( பாகம் – 2 )” தொடர்ந்து வாசிக்க…)

இது ராகுலின் காங்கிரஸ்!

(வர்கீஸ் கே.ஜார்ஜ்)

பாஜகவை காங்கிரஸ் நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டிய மாநிலங்களில் மூன்றில் இனி காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியில் இருப்பார்கள்; கடந்த ஆண்டு குஜராத்தில் பாஜகவுக்கு உயிராபத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஆனால், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இப்போது ஆட்டம் சூடுபிடித்துவிட்டது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற ஓராண்டின் சாதனைச் சுருக்கம் இதுதான்.

(“இது ராகுலின் காங்கிரஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.  (“கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?” தொடர்ந்து வாசிக்க…)

மோடி ஏன் கைவிடப்பட்டார்?

மக்களவைத் தேர்தலுக்கு ஆறே மாதங்கள் இருக்கும் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவைக் கலங்கடித்திருக்கின்றன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. உளவுத் துறையின் அறிக்கை, தேர்தல் கணிப்பாளர்களின் கணிப்புகள் இவற்றுக்கெல்லாம் பிறகு, நிலைமையைக் கட்சி உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

(“மோடி ஏன் கைவிடப்பட்டார்?” தொடர்ந்து வாசிக்க…)