புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் 

ஊருக்கு நூறு பேர்.இது ஜெயகாந்தனின் நாவல்.

ஒருவன் நக்கல்பாரி இயக்கத்தில் பயிற்சி பெற செல்கிறார்.அவரை ஆயுதங்கள் சகிதம் சிலர் வந்து வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.பயிற்சிக்காக செல்பவர் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்கள் என்னை கடத்திச் செல்வது போல உணர்கிறேன் என்றார்.அதைக் கேட்ட மற்ற தோழர்கள் சிரித்துவிட்டு ஒருவர் தனது துப்பாக்கியை பயிற்சிக்கு வந்தவரிடம் கொடுத்தார்.அவரும் வாங்கிப் பார்த்தார்.அவரையே வைத்திருக்கும்படி கூறுகிறார்கள்.அவரும் புன்னகையோடு வைத்திருக்கிறார்.வாகனம் தொடர்ந்து பயணிக்கிறது.இப்போது தோழர்கள் கேட்டார்கள்.இப்போது எப்படி உணருகிறீர்கள்.என் தோழர்களோடு தோழர்களோடு தோழர்களாக பயணிக்கிறேன் என்றார்.

(“புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் ” தொடர்ந்து வாசிக்க…)

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ? சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின் இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, பிரேமதாசா உட்பட,  பத்மநாபா, அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்  புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே  செத்துவிட்டார்கள்.

(“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!

(இரா.வினோத்)

காங்கிரஸ் தேசிய‌த் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தலில் சமூக நீதி, சாஃப்ட் இந்துத்துவா இரண்டையும் கூட்டி ‘வெற்றி’க் கணக்கு போட்டார். குஜராத் தேர்தலின்போது பின்பற்றிய அதே ‘ஆலய தரிசனம்’ பாணியை கொஞ்சம் மாற்றி, கர்நாடகாவில் இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் மற்ற மத வழிபாட்டுத் தளங்களும் படையெடுத்தார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து, ஒல்லிகர், பிராமணர் உள்ளிட்ட சாதிகளின் மடங்களுக்கும் சென்று ஆசிபெற்றார். ஆனால் ராகுல் போட்ட கணக்கு தேர்தலில் பலிக்காமல் போய்விட்டது.

(“ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈரான்: சூழும் போர்மேகங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன.

(“ஈரான்: சூழும் போர்மேகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது.

(“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்” தொடர்ந்து வாசிக்க…)

MY TRANSCENDENTAL BIRTH STORY

(by birthindia | May 13, 2018 | Birth, Birth Photography, Birth Story, Home Birth, Hypnobirth, Midwifery, Parenting, Pregnancy, Unassisted birth)

My Transcendental Birth Story
She decided, that a hospital birth wasn’t how she wanted to birth her second baby. Mom Ragavardhini, planned to birth her baby from the comfort of her home and in the warmth of water, and that’s what she did. On mother’s day, she shares her sublime birth story and her all-powerful birth experience!

(“MY TRANSCENDENTAL BIRTH STORY” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’

இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். (“இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..

(Rathan Chandrasekar)
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இல்லாத காரணத்தால் குழந்தைகள்
கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை
இதயம் உள்ளவர்கள் அவ்வளவு எளிதில்
மறக்கமாட்டார்கள். அதேபோல,
கைக்காசை செலவு செய்து ஆக்சிஜன் வாங்கி
பல குழந்தைகளின் உயிர் காத்த டாக்டர்
கஃபீல் அஹ்மத் கானையும்
நம்மால் மறக்கவே முடியாது.

(“குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..” தொடர்ந்து வாசிக்க…)

வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது.

(“வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை” தொடர்ந்து வாசிக்க…)