நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்

மத்திய அரசுக்கும் ‘நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில்’ (என்எஸ்சிஎன்-ஐஎம்) அமைப்புக்கும் இடையில் 2015 ஆகஸ்ட் 3-ல் கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பக்கம் பக்கமாக பலரால் விமர்சனங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த ஒப்பந்தம் நாகா மக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அதேசமயம், பக்கத்தில் உள்ள அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. அதில் நியாயமும் உண்டு. ஏராளமான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து, அதன் பிறகு மாநிலங்களின் எல்லைகளும் பரப்பளவும் தீர்மானிக்கப்பட்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் மாறுதல் என்றால் சற்றே பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமுண்டு. எல்லைகள் மாறும் என்பது மட்டும்தான் பிரச்சினையா, வேறு உண்டா என்றும் பார்க்க வேண்டும்.

(“நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

காலம் கடந்த ஞானம்

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்!

லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம். – த சோதிலிங்கம்

(“காலம் கடந்த ஞானம்” தொடர்ந்து வாசிக்க…)

உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல

சர்வதேச மாபியாக்களையே!

புலிகளின் பணத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தன் மகளை helicopter இல் அழைத்துவந்து பூப்புனித நீராட்டுவிழா கொண்டாடியுள்ளார் கனடாவில் உள்ள சுரேஸ் என்பவர்.
இவர் 2009 வரை கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்து வந்துள்ளதுடன் அதன்பின் தனது சொந்த உடமையாக்கியுள்ளார்.

(“உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.)

சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம்.

சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.

(“‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)” தொடர்ந்து வாசிக்க…)

ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை

‘ பக்கத்து வீட்டில் பேயாய் இருப்பது நம் வீட்டில் தேவதையாக மாறாது ‘

அண்மைக்காலமாக இந்த அமைப்புகள் பற்றியும் இந்துத்துவ கருத்தியலின் செயல்பாடுகள் பற்றியும் முகநூலில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றியும் இன்ன பிற மத அமைப்புகள் பற்றியும் ஆழமான உரையாடல் தேவை. அதற்கான சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன் சில அடிப்படையான புரிதல்களை இந்த விவாதத்தின் போது கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்கின்றது.

(“ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்

 

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும்.

(“இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மே – 18 ஆம் திகதி என்பது எனன?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டுமொரு தடவை முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறார். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கையை தவிர மிகுதி அனைத்து விடயங்களிலும் சதிராடுகின்ற தனது சம்பிரதாய கூத்துக்களில் ஒரு பகுதியாக இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளிற்குள் தனியாக நின்று காவடியாடுவதற்கு அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

(“மே – 18 ஆம் திகதி என்பது எனன?” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???

முன்பு இருந்த எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு காரியமாக திரு. நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் பதினைந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போகின்றார். இதே தந்திரத்தைப் பயன்படுத்தி உத்திரப் பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று தான் மோடி லோக்சபாவில் நுழைந்தார். அவருடைய இந்தி பேசும் திறமை எப்படி அவரை வெற்றியடையச் செய்ததோ அதே போல் அவருடைய கட்சியினரின் மதவாதக் கலவரங்களை உண்டாக்கும் போக்கும் அக்கட்சியினை இதுவரை வெற்றியடைய வைத்திருக்கும் காரணிகளாக காணலாம்.

(“கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய சக ரெலோ போராளிகளை நினைவுகூரும் கூட்டத்தை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பட இதர பல கட்சிகளின் பங்கேற்புடன் ரெலோ நடாத்தியிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் கட்சிகளோ, உறுப்பினர்களோ குறிப்பாக ரெலோவின் முக்கிய தலைவர்களோ சிறிபாரத்தினத்தையும்,, ரெலோவின் நூற்றுக்கணக்கான போராளிகளையும் குரூரமான முறையில் கொன்றொழித்த விதம் பற்றியோ, அதைச் செய்தவர்கள் பற்றி எதையும் வெளிப்படையாகப் பேசியதாகத் தெரியவில்லை.

(தொடர்ந்து வாசிக்க…)

தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது.

(“தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்” தொடர்ந்து வாசிக்க…)