பழங்குடியின மக்களும் ரிசர்வ் காடுகளும்!

-இரா.முருகவேள்.

மதுவின் கொலையை முன்வைத்து பழங்குடி பகுதிகளைப் பீடித்திருக்கும் வறுமையையும் பட்டினிச் சாவுகளையும் பற்றி….

காலனியாட்சிக்கு முன்பு சமவெளிகள் போல காடுகளில் தனியுடமை இல்லை. காடு முழுவதும் பழங்குடி இனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. விவசாயமும் எரித்துப் பயிரிடும் கூட்டு விவசாயமாகவே இருந்தது.

(“பழங்குடியின மக்களும் ரிசர்வ் காடுகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

சிரித்துச் சிரித்தே செத்தொழிகிறது சிறுபான்மை இனம்

கண்டிக்கலவரத்தின் தொடர்ச்சியாய்
உயிரோடு ஒரு முஸ்லிம் வாலிபன் சிங்களக்காடையர்களால் எரித்துக்கொல்லப்பட்டிருக்கிறான் இதைக்கண்டு சில தமிழர்கள் சந்தோசமடைந்து பதிவுபோடுகின்றனர். முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்படுவதைக்கண்டு சிலர் கைகொட்டி ரசிக்கின்றனர். சபாஷ் இப்பிடித்தான் செய்யோனும் சோனிக்கு என்று சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

(“சிரித்துச் சிரித்தே செத்தொழிகிறது சிறுபான்மை இனம்” தொடர்ந்து வாசிக்க…)

கொஞ்சம்தான் நீளம். படித்துவிடுங்கள்…

புரட்சி முடிந்து

ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளின் அரசாங்கம்.

பக்கோமோவ் ஒரு விவசாயி.

புரட்சித்தலைவர் லெனினைப் பார்த்தே ஆகவேணுமென்று
மாஸ்க்கோவிலிருந்த அவரது ஸ்மோல்னி அலுவலகத்துக்கு
வந்தேவிட்டார்.

(“கொஞ்சம்தான் நீளம். படித்துவிடுங்கள்…” தொடர்ந்து வாசிக்க…)

கண்டியில் நடப்பது அரசியல் கலவரம்!

புதிய ஆட்சி வந்த பின்னர், உள்ளூராட்சி தேர்தல் வரை, இப்படியான ஒரு குமுறலும் நாட்டில் இருக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின் வென்றவர்கள் , இருக்கும் ஆட்சியை எறிந்து தமது ஆட்சியை கொண்டு வர முடியும் எனும் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டார்கள். தேர்தல் கால மேடைகளில் “புதிய அரசை மாற்றுவதற்கான வாக்கெடுப்பு” என்று பேசியே மக்கள் மனதில் விசத்தை விதைத்தார்கள். அதன் பிரதிபலனே இந்த கலவரங்களுக்கான பின்னணி.

(“கண்டியில் நடப்பது அரசியல் கலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)

கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்

பிரான்ஸில் நடைபெற்ற குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய சில அற்புதமான கருத்துக்களை முகநூலில் காணக்கிடைத்தது. (நன்றி: யோகு) சிலிர்த்துப்போய் கணனியின் மீது சில்லறையை விட்டெறியாததுதான் குறை. பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே போகிறார். அடுத்த அன்டன் பாலசிங்கம் கணக்கில் பேசுகிறார். நடு நிசியில் கனவு காலைந்து எழுந்திருந்து பிதற்றுவதைப்போல, ஒரு பெரும் விடுதலைப்போராட்ட அமைப்பின் முக்கியமான முடிவுகள் குறித்தெல்லாம் சகட்டுமேனிக்கு பேசிதள்ளுகிறார். இப்போதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பை யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்களே, குணா கவியழகன் எல்லாம் ஒரு பொருட்டா என்ன? இருந்துவிட்டு போகட்டும். முன்னுக்கு இருந்து கேட்பவர்கள் எல்லோரும் கதிரை நுனியில்தான் கிடக்கிறார்கள்.

(“கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்” தொடர்ந்து வாசிக்க…)

உடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் பேரவையில் பெரும் உடைவு ஏற்படுமென தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விரைவில் வெளியேறலாமென தெரிகிறது. அவர்களை வெளியேற்றும் இரகசிய முயற்சியொன்றையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார். நேற்றைய தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

(“உடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்!” தொடர்ந்து வாசிக்க…)

நான் ரசித்த மிக அழகான பதிவு…

 

அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்…

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.

இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

(“நான் ரசித்த மிக அழகான பதிவு…” தொடர்ந்து வாசிக்க…)

சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம்…

நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல் போன் கோபுரங்களும் அதிலுருந்து வரும் கதிர் வீச்சும் தான் சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம் என்று…

எனக்கு நிச்சயமாக தெரியாது அது தான் காரணமா என்று!!

ஆனால் மிக நிச்சயமாக தெரியும அது மட்டும் காரணம் இல்லை என்று!!

நான் 12 ஆம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் அணைத்து வகை சிறு தானியமும் பயிர் செய்தோம்.

(“சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம்…” தொடர்ந்து வாசிக்க…)

கம்யூனிஸ்டுகள் சிந்தனைக்கு (!!!????)

கொஞ்சநாள் முன்புவரை காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.

அப்போதும் இதே இந்திய வரலாற்றுக் கழகம் இருந்தது.

ரொமீலா தாப்பர் – இர்பான் ஹபீப் – பணிக்கர் என்று மார்க்சிய சிந்தனையாளர்கள் அதில் பொறுப்பேற்று நிரம்பி வழிந்தார்கள்.

அவர்களை கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் என்பதற்காக – ‘வரலாற்றை திரித்து தமக்கு சாதகமாக எழுதுவதற்காக’ காங்கிரஸ் கட்சி நீக்கவில்லை.

ரொம்பப் பெரிய கதை வேண்டாம்.

(“கம்யூனிஸ்டுகள் சிந்தனைக்கு (!!!????)” தொடர்ந்து வாசிக்க…)