சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம்…

நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல் போன் கோபுரங்களும் அதிலுருந்து வரும் கதிர் வீச்சும் தான் சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம் என்று…

எனக்கு நிச்சயமாக தெரியாது அது தான் காரணமா என்று!!

ஆனால் மிக நிச்சயமாக தெரியும அது மட்டும் காரணம் இல்லை என்று!!

நான் 12 ஆம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் அணைத்து வகை சிறு தானியமும் பயிர் செய்தோம்.

சிறு தானியங்கள் என்றால்

சாமை,
திணை,
கம்பு,
குதிரைவாலி,
கேழ்வரகு,
வரகுஅரிசி,
சோளம்,

குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது

இந்த சிறு தானியங்கள் தான் இவைகளின் முக்கிய உணவு

சிறு தானியங்களை தான் இந்த சிட்டு குருவிகளால் எளிதாக உண்ண முடியும்

வேலையாள் பற்றாக்குறை,
போதிய விலையின்மை,
நகரமயமாதல்,
நவீனமயமாதல்,
ஒரு பயிர் முறை,

போன்ற காரணங்களால் இந்த சிறுதானிய பயிர் அறவே அழிக்கப்பட்டது

எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காசோளம்!!

எங்கள் தோட்டத்திலும் முழுவதும் மக்காசோளம், விருதுநகர் மாவட்டம் முழுவதும்

மக்காசோளம் மிக எளிமையான பயிர் முறை, அதிக வேலையாள் தேவை இல்லை, ஓரளவு கட்டுபடியாககுடிய விலை.

மக்காசோளம் மயிலுக்கு நல்ல இரை, அனால் குருவி , மைனா க்கு???

சிட்டு குருவியால் சோளத்தை உண்ண முடியாது,

இந்த சிட்டு குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தததே உண்மை…

சென்ற முறை ஊருக்கு போனப்ப அப்பா கிட்ட சொல்லிட்டு வந்தேன்,
அடுத்த பட்டம் மக்காசோளம் போடும்போது ஒரு 5 பாத்தி கம்பு, திணை போடுங்கனு

நவீன மயமாதல் என்ற அடிப்படையில் உணவு சங்கிலி இல் ஒரு உயிரினதையே அழைத்துவிட்டோம்

கடைசியாக உங்கள்ள எத்தன பேர் தூங்கனங்குருவி கூட்ட பார்த்திங்க???

கடலின் நடுவில் கட்டிடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை,
முயன்று தோற்றது விஞ்ஞானம்!!

சிட்டு குருவிக்கு அடுத்து வேகமாக அழியும் உயிரினம் தேனீ

தேனீ இனங்கள்என்பது அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை இன்றி, உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்.!!

நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம் தான். அனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அல்ல