பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?

(எம். காசிநாதன்)
‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக, பஞ்சாப் வங்கி ஊழல் அமைந்திருக்கிறது. ‘லெட்டர் ஒப் அன்டர்டேங்கிங்கை’ பயன்படுத்தி, 110,400 மில்லியன் ரூபாயை அபகரித்துள்ள வைரவியாபாரி நிராவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடிக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறார்.

(“பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?” தொடர்ந்து வாசிக்க…)

மனிதம் மரணித்த சிரிய யுத்தம்

(சாகரன்)
 
இடதுசாரி அரசை நிறுவிய ஆப்கானிஸ்தானை இல்லாமல் செய்தல்… மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஈரான் நாட்டில் ஆட்சியை அகற்றல்…. வாழ்கைத் தரதில் உயர்ந்து நின்ற ஈராக் லிபியா இன் இருப்பை கேள்விக் குறியாக்கல்…. இவற்றிற்கும் மேலாக மத்தியதரை கடற்பகுதியில் இருக்கும் (எண்ணை)வழங்களை சுரண்டுதல் இவற்றிற்காக தமக்கு சாதகமான பொம்மை அரசுகளை அங்கு உருவாக்குதல் என்பதற்கு மேற்குலகம் கையாண்ட வழி முறை இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி செயற்படும் தீவிரிவாத்தை உருவாக்குதல் என்பது முகைதீன் என்று ஆரம்பி ஐஎஸ் வரை உருவாக்கட்ட அமைப்புவரை நீண்டு இன்று சிரியாவில் உச்சமாக மையம் கொண்டு யுத்தத்தின் விளைவுகளை நாம் இன்று காண்கின்றோம்.

(“மனிதம் மரணித்த சிரிய யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

அம்பாரை சம்பவமும் அது சொல்லும் பாடங்களும்

மலட்டுத்தன்மை! இது தான் சிங்களவர்கள் சொல்லும்/ குற்றம் சாட்டும் “வந்தபாவய” எனும் சொல்லுக்கு நேரடியான தமிழ் சொல்லாக எனக்கு தெரிகிறது. இதை விட நல்ல சொற்கள் இருந்தால் யாராவது கூறுங்கள். மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்தார்கள் என்பதே சமீபத்திய அம்பாரை கலவரத்தின் ஆணி வேராக இருந்தது.

(“அம்பாரை சம்பவமும் அது சொல்லும் பாடங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

காசி ஆனந்தன் பற்றிய திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்துகிறார் முன்னாள் பிரபாகரன் சகா ஆன இராகவன்(சிவகுமார்/Chinniah Rajeshkumar)

காசி ஆனந்தனை நான் 1977 காலப்பகுதியில் இந்தியாவில் சந்தித்தேன். தமிழரின் பிரச்சனையின் அடிப்படை அவர்கள் சிறுபான்மையாயிருப்பதால் தான். எனவே அதற்கான வழி சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை குறைக்கவேண்டும் என்று அதற்கான திட்டத்தை கூறினார். ஒன்று குளங்களில் சயனைட்டை கலப்பது. இரண்டு ஐஸ் பழத்தில் கருத்தடை மாத்திரையை கலந்து விற்பது. இதனைக்கேட்டு நான் மிக அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் 83 கலவரத்தின் பின்னர் எனது ஊரில் ஒருவர் என்னை சந்திக்கவேண்டும் என அடாப்பிடியாக நின்றார். அவரை நான் சந்தித்தபோது தனது பிளானை கூறினார். காசி ஆனந்தனின் அதே சிந்தனை முறை. அவரது ஐடியா பெரகெராவில் பல்லாயிரக்கணக்காக சிங்கள மக்கள் கூடுவார்கள் எனவே விடுதலைப்புலிகள் அங்கு சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து முழுக்கூட்டத்தையும் அழித்தால் இரு இனங்களும் எண்ணிக்கையில் சமமானால் பிரச்சனையை தீர்க்கலாம் என்றார். இதனை ஏன் சொல்லவருகிறேன் என்றால் இனத்துவ மன நிலை இன்னொரு இனத்தை அழிப்பதை பற்றிய எவ்வித தார்மீகத்தையும் கொண்டிருப்பதில்லை.

(“காசி ஆனந்தன் பற்றிய திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்துகிறார் முன்னாள் பிரபாகரன் சகா ஆன இராகவன்(சிவகுமார்/Chinniah Rajeshkumar)” தொடர்ந்து வாசிக்க…)

என் இனிய குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக எனக்கும் பலருக்கும் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி. பாபு படத்தில் அவரின் வசதி, வறுமை என்ற இரு மாறுபட்ட நடிப்பில் எனக்கு அறிமுகமாகி பாலசந்தரின் கறுப்பு வெள்ளையில் கமலஹாசனின் காதலி ரஜனியின் தாய் என்ற இரு பரிமாண நடிப்பை தனது 15 வயதில் வெளிப்படுத்தி கமல், ரஜனி என்ற இரு முன்னிலை நடிகர்களையும் தனது நடிப்பால் தோற்க வைத்தவர். கூடவே பாரதிராஜாவின் 16 வயதில் சப்பாணியின் ஆதரவுடன் பரட்டையிடம் இருந்து தன்னை பாதுகாத்த பண்பட்ட நடிப்பு இவரை உச்சத்திற்கு கொண்டுவர பாபுவில் சிவாஜியின் பேத்தி போல் தோன்றியவர் அவருக்கு காதலியாக நடிக்கும் பார்முலா நடிப்பிற்குள் பிற்காலத்தில் தள்ளப்பட்டவர்.

(“என் இனிய குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவி” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்யாவில் புரட்சி

ரஷ்யாவில் புரட்சி பாதுகாக்கப்பட்டவுடன்,
ஆரம்ப கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர்,
புதிய பொருளாதாரக் கொள்கையால் வழிநடத்தப்பட்ட
கலப்புப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் பணியில்
சோவியத் யூனியன் முனைந்தது. 
குறிப்பாகச் சிறு நிலவுடைமை மற்றும் அந்நிய முதலீடு ஆகிய தனிச்சொத்து உள்ளிட்ட பலதரப்பட்ட சொத்துடைமை வடிவங்களை அது சட்டபூர்வமாக்கியது. (“ரஷ்யாவில் புரட்சி” தொடர்ந்து வாசிக்க…)

நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரமாக பாவிக்கப்படுகிறது.  அப்படி பாவிப்பதில் அதற்கான நியாயமும் உள்ளது. காரணம் மயிலாக வந்த ஸ்ரீதேவியாகட்டும் அல்லது எண்பதுகளின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவியாகட்டும், அந்த தலைமுறையின் காலாச்சார மறு-ஒப்பனையாக (cultural re-fashioning) குறிப்பாக காதலுறுதலுக்கான அழகியல் பிம்பத்தை சமூக நனவிலியில் கட்டமைத்தவர். அந்த தலைமுறை பெண்களும், ஆண்களும் ஒருசேர விரும்பிய ஒரு தமிழ் முகமாக இருந்தவர். கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஸ்ரீதேவி அடித்தட்டு மக்களின் குறிப்பாக விளிம்புநிலையினரின் முகத்தை தனது முக-ஒப்பனைகள் வழியாக ஆள்தள உளவியலிலை வடிவமைத்தவர். ஆனாலும், மேட்டிமையினர் மற்றும் மையத்துவ நடுத்தர வர்க்கத்தினர் ஸ்ரீதேவியால் கவரப்படவில்லை. அவர்கள் அவரை ஒரு மாதிரியாக கொள்ளவில்லை. இது உள்ளார்ந்து நிகழும் ஒரு உளவியல் போராகக் கொள்ளலாம்.

(“நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

வரதராஜப்பெருமாளின் வாக்குமூலம்

எனக்கு இடது கைப்பக்கம் இருப்பவர் இப்போது வடக்கு ஆளுநராக இருக்கும் ரெஜினோல்ட் கூரே அவர்கள். அதற்கு அடுத்ததாக இருப்பவர் இப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் ராஜித செனிவிரத்னா. அந்த நாட்களில் எமது வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள். அப்போது இவர்கள் விஜய குமாரதுங்க ஆரம்பித்த ஐக்கிய சோசலிச முன்னணியின் சார்பில் தென்னிலங்கையில் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள்

ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.

எங்கள் தெருவில் இருந்த அந்த நாய்
வாயில் அடிபட்டப் புண் புரையோடிப் போய்
மரணாவஸ்தையில் கிடந்து அரற்றிற்று.

தினமும் பிஸ்கெட் போட்டதால் பல்லாண்டு நண்பன்.

ஸ்கேன் பவுண்டேஷனுக்கு சொன்னேன்.
டாக்டர் வந்து பார்த்தார்.

(“ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.” தொடர்ந்து வாசிக்க…)