பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி

(ஆர்.மகேஸ்வரி)

நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை.

(“பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி” தொடர்ந்து வாசிக்க…)

இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் கடந்த 22 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுத முற்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர். தற்போது குஜராத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தவரும்கூட. இந்தத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து வட்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர், சுமார் 18,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழையில் நனைந்துக்கொண்டிருந்தவரிடம் ‘தி இந்து’-வுக்காக பேசினோம்.

(“இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டி

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதாக முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு என்று தெரிவு செய்த பகுதிகளில்ட மாத்திரம் போட்டியிடுவதாக தெரிவித்தார். சில பகுதிகள் அப் பிரதேச மக்கள் தமக்கு ஒரு சுயேச்சைக் குழுக்களை அமைத்து போட்டியிடுகின்றனர்.  கிராம பிரதேச ஒற்றுமையை கருத்தில் கொண்டு அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப் பிரதேசங்களில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (SDPT)போட்டியிடுவதை தவிர்த்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

(காணொளியை பார்க்க…)

நாபா என்ற மானிடன்

அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
கனிவாகப் சத்தமில்லாமல் பேசுவது -நடந்து கொள்வது- சிறியோர் பெரியோர் என்ற பதகளிப்புக்கள் இல்லாதது- எல்லாவற்றையும் அமைதியாக ஆரவாரமில்லாமல் நோக்குவது
வெறுப்பு –காழ்ப்புணர்வு இவற்றின் சுவடுகளைக் கூட காணமுடியாது.
இடையறாத தன்னலமற்ற உழைப்பு- தோழமை- வழிகாட்டல் இது நாபா என்ற மானிடன்.
(“நாபா என்ற மானிடன்” தொடர்ந்து வாசிக்க…)

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி 1960க்குப் பின்னான இலங்கை இடதுசாரி, மற்றும் தொழிற்சங்க வரலாற்றுக் காலகட்டம் தொடக்கம் புகலிட அரசியல் -சமூக -கலை- பண்பாட்டு துறை , எழுத்து- செயற்பாட்டுத் தளம் வரை பங்களித்த அனுபவமிகு மூத்த மனிதர்களில் ஒருவர்.

(“பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி” தொடர்ந்து வாசிக்க…)

ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09

மக்களுடைய நம்பிக்கைகளைக் கட்சிகளும் தலைமைகளும் சிதைத்து விட்டன. இதனால், இப்பொழுது மக்கள் தலைமைகளை நம்பத் தயாராக இல்லை. கட்சிகளை நம்பத் தயாராக இல்லை. சின்னங்களை நம்பத் தயாராக இல்லை. இவற்றுக்கு வெளியேதான் தங்களுக்கான அரசியலை அவர்கள் தேடுகிறார்கள். உண்மையும் அதுதான். மக்களுக்கான அரசியல் என்பது கட்சிகளுக்கும் பாரம்பரிய சின்னங்களுக்கும் உளுத்துப்போன தலைமைகளுக்கும் வெளியேதான் உண்டு. இதை இன்னும் ஊடகங்கள் கண்டு கொள்ளாதிருப்பது அவற்றின் வரலாற்றுத் துயரமாகும்.

(“ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09” தொடர்ந்து வாசிக்க…)

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்… ஆனால்…!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார் (“மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத்தில் இராமையாவுடன் வரதராஜப்பெருமாள்

அன்று தோழர் வரதராஜ பெருமாள்வடகீழ் மாகாணமுதலமைச்சராக இருந்த சமயம். மலைநாட்டில் செங்கொடி சங்கம் அதன் பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா தலைமையில் அட்டனில் அவருக்கு பெரும் வரவேற்பளித்தது. அட்டன் டன்பார் கிரௌண்டில் ஹெலியில் வந்திறங்கிய அவர் வரவேற்பு இடம்பெற்ற அட்டன் நகரசபை மண்டபத்திற்கு வாகனத்தில் வந்தார. சுமார் ஒரு கி.மீட்டருக்கு அதிகமான தூரம். பாதுகாப்பிற்கு வழி நெடுக, அட்டன் நகரெங்கும் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இராணுவம் நிறுத்தப்பட்டிருந்து. வாழ்வில் முதன் முதலாக ஒரு தமிழ் இராணுவத்தைக் கண்ட மக்கள் உளம் பூரித்துப் போனார்கள். வரவேற்பில் இராமையாவுடன் நானும் முன்னின்றேன். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தயங்கமாட்டேன் என தோழர் வரதராஜ பெருமாள் மிகவும் ஆக்ரோசமாக முழங்கினார். தோழர். இராமையா இன்று இல்லை. என்றாலும், அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே……..

– (Muthulingam Vanni Kathan)

(“மலையகத்தில் இராமையாவுடன் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

தேவானந்தா காட்டிய பாதையில்….

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் திடீரென தேர்தற் கால ஞானோதயம், அருளோதயம், சிந்தனாதோதயம் என்ற எதோ ஒன்றைப் பெற்று விட்டதைப்போல, ஊரூராகச் சென்று வீதி அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார்கள். குளங்களைப் ஆழப்படுத் வேண்டும். வாய்க்கால்களையும் வடிகால்களையும் சீரமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் போன்றவற்றைப் புனரமைக்க உதவுகிறார்கள். விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்கள். இப்படிப் பல நற்பணிகள் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

(“தேவானந்தா காட்டிய பாதையில்….” தொடர்ந்து வாசிக்க…)