உக்ரைனிலிருந்து வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்பு

உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மழைபெய்யும் வரை தொடர்ந்து மின் வெட்டு

நாட்டில் மீண்டும் மழை பெய்யும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு

டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது.

மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபரீத முடிவு எடுத்த 700 இந்திய மாணவர்கள்; அச்சத்தில் இந்திய அரசு

உக்ரேனின் சுமி நகரில் சிக்கி தவிக்கும்  இந்திய மாணவர்கள் எடுத்த விபரீத முடிவால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.

60 சதவீத ஹோட்டல், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக 60 சதவீதமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதியில் மகளிர் தினம்

மார்ச் 08ஆம் (நாளை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, அதன் முதலாவது நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவுக்கு அருகில் நேற்று (06) நடத்தப்பட்டது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தியின் தலைமையில்  ஆரம்பமானதுடன்,  இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் சூரியா கலாச்சார குழுவினரால் அளிக்கை செய்யப்பட்டது.

ஆறுமுக சாமி ஆணையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்குகிறது

  தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. 
அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு இந்த விசாரணையில் பங்கேற்கச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 7 மற்றும் 8ஆம் தேதி இந்த விசாரணையில் கலந்துகொள்ள உள்ளனர்.   

இந்தியாவை சீண்டுவதே சீனாவின் வேலை: அமெரிக்கா குற்றச்சாட்டு

‘ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியாவை சீண்டுவதே சீனாவின் வேலையாக உள்ளது’ என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

விதிகளை மீறுவோருக்கு இனி வீடு தேடி வரும்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை மீறுவோருக்கான அபராதச் சீட்டுகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பவும் பொலிஸ் திணைக்களம் விரைவில் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.