உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கண்ணீர்

“போர் சூழல் எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என, உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர். உக்ரேன் – ரஷ்யா போரால், பிற நாடுகளை சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 43 மாணவர்கள், நேற்று முன்தினம் (01) சென்னை வந்தடைந்தனர். 

நான் ஏன் அப்படி செய்தேன்

உக்ரேனைச் சேர்ந்த மாடல் அழகியான அனஸ்தாசியா லென்னா   ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. 

உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்தது சீனா

உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொடர்பு கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யூ, ரஷியாவுடனான போருக்காக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். அப்போது, இந்த போரை நிறுத்த ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு உக்ரேன் மந்திரி கோரிக்கை விடுத்தார். 

இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவும்

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பணித்துள்ளார். 

உக்ரேன் விவகாரம் : இலங்கை வாக்களிக்கவில்லை

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன, இலங்கை வாக்களிக்கவில்லை. இந்தியாவும் வாக்களிக்கவில்லை.

ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது

சென்னை மேயர் பதவியை விசிக கோருகிறது? சாந்தி என்கின்ற யாழினியை ….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆளும் தி.மு.க கூட்டணி அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகமெங்கும் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து செல்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ”உங்களில் ஒருவன்” வரலாற்று நூலை வெளியிடுகிறார் ராகுல் காந்தி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகத்தை, நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், “உங்களில் ஒருவன்” என்ற பெயரில் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. “உங்களில் ஒருவன்” வரலாற்று நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை – நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நாளை (பிப்ரவரி 28) மாலை நடைபெற உள்ளது.

ராகுலை அழைத்த ஸ்டாலின்: 2024 தேர்தல் மெசேஜ்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் அந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பிதழ் வந்திருந்தது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் சுய வரலாற்று நூலான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகம் பிப்ரவரி 28 ஆம் தேதி காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியால் வெளியிடப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு

ஒரு சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் Zelenskyy ஐரோப்பிய ஒன்றியத்தை அவசரமாக கேட்டுக் கொண்டார்.