இறுதி மூச்சுவரை போராடுவோம்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இன்றும் அதிகரித்தது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 482 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 543,867 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசியில் சமத்துவம் தேவை

“கொரோனாத்  தடுப்பூசியில் சமத்துவம் தேவை “ என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரர்ஸ் (Antonio Guterres )தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ₹225.86 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வருக்கு வாழ்த்தும் நன்றியும்

ஈழத் தமிழர் மறு வாழ்வு முகாமில் தமிழக முதல்வர் ஸ்ராலின் அவர்கள்.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நலத் திட்டங்கள் முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.தமிழக மக்களுக்கு சமதையான பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்ட சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு சிறப்பு பெறுகிறது.

யாழின் பல பகுதிகளுக்கு வட மாகாண ஆளுநர் விஜயம்

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்டத்தில் சில இடங்களுக்கு, இன்று (02),  நேரில் சென்று பார்வையிட்டார்.  பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா  பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து இதன்போது கேட்டறிந்துகொண்டார். இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ். பிரதேச செயலாளர்  மற்றும் அரச உத்தியோகத்தர்களை நேரில் அழைத்து, நிலைமை குறித்தும் கலந்துரையாடினார். 

இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்’ எனப் பேசியுள்ளார்.

புதிய விவசாயப் புரட்சி அவசியம்

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். 

அனைவருக்கும் கதவுகள் திறந்திருக்கும் – ஞானசார தேரர்

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.