ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க இராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

யாழில் புத்தாண்டு வர்த்தகம்…

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், பொருட்களின் விலையேற்றம் காரணமாக வியாபாரம் இம்முறை மந்தகதியில் காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்திற்காக அயராது உழைப்போம்: பிரதமர் வாழ்த்து

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: ஜனாதிபதி வாழ்த்து

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும்  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.

ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), ஈரான் இராணுவம் விரித்துள்ள கண்ணிவெடி வலையில் அந்த நாடே சிக்கித் திணறி வருகிறது. போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், இந்தக் கண்ணிவெடிகளை அகற்றுவது ஈரானுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இளைஞனை இழுத்துக்கொண்ட சம்பூர் கடல்

 மூதூர் கிழக்கு, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘சம்பூர் வெளிச்சவீடு’ (Foul Point) கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகச் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சோகமான சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் 3:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீரர் கௌட்

ஆஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட்டின் ’20 வயதுக்குட்பட்டோருக்கான’ (U-20) சாதனையை முறியடித்து, இளம் வீரர் கௌட் கௌட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஏப்ரல் 19 பிரார்த்தனை தினமாக அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப் பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது என கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நீராடத் தடை: மீறுவோர் மீது சட்டம் பாயும்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை  (09) அன்று  தெரிவித்தார்.