கொரோனா மரணங்கள்; காரணம் சொன்ன ரணில்

தற்போது ஏற்படும் கொரோனா மரணங்களுக்கு கொரோனா ஒழிப்பு செயலணியே காரணம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். வீடியோ தொழிநுட்பம் மூலம் கொழும்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டபோதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

’இந்திய மீனவர்களால் இரண்டு கோடி ரூபாய் நட்டம்’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக, தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் – செல்வம் அடைக்கலநாதன்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்.  வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பில் கண்டன பேரணி

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில், இன்று (05) பேரணி நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை  முன்னெடுத்தன.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கடந்த 25ஆம் திகதி முதலான 10 நாட்களில் 21,344 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி  குறித்த காலப்பகுதியில் 591 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

‘ஹிஷலினி-189 எனும் இலக்கம் வேண்டும்’

வீட்டு பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்,  தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்தார்

சீனாவின் நாஞ்சிங் நகர் முடக்கம்

கொரோனா டெல்டா பிறழ்வு அடையாளங்காணப்பட்டதை அடுத்து சீனாவின் நாஞ்சிங் (Nanjing) நகர் முடக்கப்பட்டுள்ளது. வூஹானில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதன் பின்னர் நாஞ்சிங் நகரில் டெல்டா பிறழ்வு முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆறுகளை இணைக்கும் திட்டம் நிறைவேறியது

களுகங்கையையும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தையும் இணைத்து மலைகளுக்கு அடியில் இரண்டு பக்கங்களிலும் இருந்து தோண்டப்பட்ட இலங்கையின் மிக நீண்ட சுரங்கம் நடுவழியில் சந்தித்துள்ளது. மொத்தம் 7.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கம் இலங்கையில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு அத்தியாயமாகும். மொத்தமாக 28 கிலோமீட்டர் சுரங்கப் பாதைகள் இந்த திட்டத்தில் அமைக்கப்படவுள்ளதோடு இறுதியில் மஹாவலி நதியும் கனகராயன் ஆறும் இணைக்கப்பட்டு முழுமையான ஒரு வடக்கு தெற்கு நீர்வழியிணைப்பு ஏற்படுத்தப்படும். ஹீரடிய ஓயாவுக்கு மேலால் அமைக்கப்படவுள்ள 400 மீற்றர் நீளமான (Aqueduct )நீரிணைப்பாலம் மிகவும் அழகான காட்சியை இலங்கை மக்களின் கண்ணுக்கு விருந்தாக்கும்.