இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா  நிலவரம் தொடர்பில் பாராளுமன்றில் தகவல் வெளியிடுகையில் அவர் இதனை இன்று (05) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 10 நாட்களில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 179 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை 140 – 150க்கும் முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளாதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 14 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தவறினால், டெல்டா திரிபை வைரஸ் பரவலை கட்டுப்படுத்ந கடினமாகிவிடும் என, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு இன்று இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறையில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அவர்  சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தை அனைத்து தரப்பினருடைய  ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போதும், ஒரு சில நாள்களில் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளதாக, மன்னார் மாவட்ச் செயலாளர்; திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதலை கடைப்பிடிப்பதில் இருந்து  தவறி உள்ளார்களா என்று சந்தேகம் ஏற்பட்டுள்தாகத் தெரிவித்தார்.