இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் தொலைபேசி ஊடாக வைத்தியர்கள் தொடர்புக்கொண்டு, தொற்றாளர்களின் நிலைமையைக் கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் தொற்றுக்குள்ளானோரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவில் மேலும் தேவாலயங்கள் எரிப்பு

மேற்கு கனடாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்களில் மேலுமிரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்கள் நேற்றுக் காலையில் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு தேவாலயங்களிலும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு கட்டடங்களும் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும், தீகளை சந்தேகத்துக்கிடமானதாகக் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

’கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் மாற்றம்’

தமது கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வு: ’சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவோம்’

கௌதாரிமுனையில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது தொடர்பில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுப்போம் என்றும் கூறினார்.

மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

’இரட்டை குடியுரிமை தனி நபருகே பயனளிக்கும்’

இரட்டை குடியுரிமையுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிப்பது நாட்டிற்கு அல்லாமல் அந்த நபருக்கே பயனளிக்கும் என, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். தனது விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘அமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை’ – மைத்திரி

தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார். ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையை அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்கு நாமல் விஜயம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.

‘16 பேரில் ஒருவர்கூட கிழக்கில் இல்லை’

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட கிழக்கைச் சேர்ந்தவர் இல்லை என்பது கவலைக்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 1,801 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கையானது 251,727ஆக அதிகரித்துள்ளது.