இலங்கை: கொரனா செய்திகள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய (25) தினத்தின் கொவிட் 19  மரணங்களின் எண்ணிக்கை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி ஆண்கள் 25 பேரும், பெண்கள் 18 பேரும் மொத்தமாக 43 பேரும் நேற்றைய தினம் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்  என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

3 மாவட்டங்களிலுள்ள 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 6 மணி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் தலங்கம பொலிஸ் பிரிவின் தலாஹேன தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜய மாவத்த மற்றும் ஜயகத் மாவத்த, தலாஹேன வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் சத்சர மாவத்த, இசுரு மாவத்த, சமனல மாவத்த மற்றும் தபாற்சந்தி ஆகியன முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் கஹன்கம – கொஸ்கலவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்குரிய போபெத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் நுவரெலிய மாவட்டத்தின் கட்டபுலா மத்திய பிரிவு என்பன முடக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திலிருந்து சென்ற 425 பேருக்கு காலி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மற்றும் 7ஆம் திகதிகளில் குறித்த அலுவலகத்தில் 632 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்ட நிலையில், இவர்களுள் 425 பேர் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை, காலி தொகுதி குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்குமாறு, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் உணவட்டுன மருந்தக களஞ்சியசாலை கட்டுபாட்டாளருக்கும் 14ஆம் திகதி காலி பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.