கொரோனாவின் கோர தாண்டவம்: தமிழக அகதிகள் முகாம்களில்…. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.அனைத்து கடற்;கரை மாவட்டங்களிலää; இராமநாதபுரம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அகதிகள் முகாம்கள் உள்ளன.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாகவே வாழக்கை பணயத்தை பல சுமைகளுடன தொடர்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 139

காஸாவில் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்ற நிலையில், இன்று காலை வரையில் 39 சிறுவர்கள் உள்ளடங்கலாக 139 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 920 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 24 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு தென்கிழக்கே 642 கிமீ தொலைவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சரியாக இன்று பிற்பகல் 12.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை

கரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை மாற்ற பாஜக மேலிடம் திட்டம்?

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோரின் அலட்சியத்தாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளொன்றுக்கு நடத்தப்படவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்திலிருந்து 30,000 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.சி.​ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள், பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை தனிமையில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பிக்கையில் ​தோற்றார் நேபாளப் பிரதமர்

பாராளுமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் நேபாளப் பிரதமர் கஹட்கா பிரசாத் ஷர்மா ஒளி தோல்வியடைந்துள்ளார். அந்தவகையில், பிரதமர் பதவியில் தொடருவதற்கு தான் போதுமான ஆதரவைக் கொண்டிருக்கின்றார் எனக் காண்ப்பிப்பதற்கான பிரதமர் ஷர்மா ஒளியின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடு முழுயைாக முடக்கப்படாதென தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா   மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பொருள்கள்  விநி​யோகம் மற்றும் மக்களின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 22 கொவிட்-19-ஆலான இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அந்தவகையில், உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 786ஆக உயர்ந்துள்ளது.  

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளையும், வைத்தியசாலைகளிலுள்ள படுக்கைகளையும் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரும், அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.