பிக்பொஸ் செட்டிற்கு சீல் வைப்பு

பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியானது சென்னையிலுள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியானது கொரோனா விதிமுறைகளை மீறி, நடைபெற்று வந்ததாகவும் இதனால் அதில் கலந்து கொண்ட ஆறு போட்டியாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கறுப்பு பூஞ்சைக்குப் பின் வெள்ளை பூஞ்சை வருகிறது

கொரோனா, கறுப்பு பூஞ்சை நோய் பரவலை தொடர்ந்து தற்போது வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கறுப்பு பூஞ்சை என்ற நோய் பரவத் தொடங்கியது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போலித் தகவல் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஜுன் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பரப்பப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவிடமிருந்து 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,  அதில் ஒரு தொகுதியான 3 இலட்சம் தடுப்பூசிகளை ஒரு மாதத்துக்குள் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என,கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றையதினம் மட்டும் 3,051 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரு நாளொன்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

பாணந்துறை- மோதரவில பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 450 பணியாளர்களுக்கு கொ​ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, குறித்த நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்ததாக,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. இன்றிரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

கொரோனாவின் கோர தாண்டவம்: தமிழக அகதிகள் முகாம்களில்…. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.அனைத்து கடற்;கரை மாவட்டங்களிலää; இராமநாதபுரம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அகதிகள் முகாம்கள் உள்ளன.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாகவே வாழக்கை பணயத்தை பல சுமைகளுடன தொடர்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 139

காஸாவில் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்ற நிலையில், இன்று காலை வரையில் 39 சிறுவர்கள் உள்ளடங்கலாக 139 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 920 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 24 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.