நுண்கடன் திட்டத்துக்கு எதிராக கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு

நுண்கடன் திட்டத்தை இல்லாமல் செய்து, பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து, மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை, இன்று (30) முன்னெடுத்தன.

யாழுக்குப் பூட்டு; மேல் மாகாணத்துக்கு திறப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் ஆயர் பொறுப்பேற்பு

பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை(19) இடம்பெற்ற கோர விபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய வின்சன் பெர்னாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளார் என்று, குறித்த பிள்ளைகளின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், சகல வகுப்புகளையும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை சுகாதார பணிப்பாளர் நாயகம் வழங்கியுள்ளார்.

மியான்மாரில்…..

குறைந்தது 50 ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று மியான்மாரின் பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதாக செய்தியறிக்கைகளும், சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் தெரிவித்துள்ளனர். அந்தமான் கடலில் தத்தளிக்கும் படகிலுள்ள 81 றோகிஞ்சாக்கள் குறித்து தகவலை வழங்க இந்தியா, பங்களாதேஷ், மியான்மார் தவறியுள்ளதாக, இந்தியாவைத் தளமாகக் கொண்ட, அந்நாட்டுத் தலைநகரிலுள்ள றோகிஞ்சா மனித உரிமைகள் முன்னெடுப்பு நேற்றுத் தெரிவித்துள்ளது.  

மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

கிழக்கு பங்களாதேஷில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் நேற்று குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாக வைத்தியசாலை வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

இந்திய மீனவர்கள் 20 பேர் இரணைத்தீவில் கைது

கிளிநொச்சி – இரணைத்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு (24), இரண்டு றோலர் படகுகளில் வருகைதந்திருந்த 20 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே, கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (25) ஒப்படைக்கப்படுள்ளனர்.

’சிறுபோகத்தில் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடுங்கள்’

கிளிநொச்சி மாவட்டத்தில், விதை நெல்லுக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, சிறுபோகத்தின் போது, விதை நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட வேண்டுமென, கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.