தா. பாண்டியன் தோழருக்கு எமது அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முதுபெரும் தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கனத்த இதயத்துடன் தன் செங்கொடி தாழ்த்தி, வீர வணக்கம் செலுத்தி விடைகொடுக்கிறது.

தோழர் தா பாண்டியன் எம்மை விட்டுப் பிரிந்தார்

ஐயா தா.பாண்டியன் அவர்களின் இழப்பானது பேரிழப்பாகும் . எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்….!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

ஈக்குவடோரில் சிறைக்கலகங்களில் 62 பேர் உயிரிழப்பு

ஈக்குவடோரில், மூன்று வெவ்வேறான சிறைக் கலகங்களில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(24) 458 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பு மாவட்டத்தில் 100 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் 100 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

’வடக்கின் சுற்றுலாத்துறை முன்னேற்றப்படும்’

எதிர்வரும் காலத்தில், வடக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்தியாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் நான்கு வருட நிறைவை எட்டியது

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.

நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றும் சில மணிநேரத்துக்குள் இலங்கையை வந்தடையவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.