மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 350 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திவுலுபிட்டிய – பேலியகொடை கொரோனா கொத்தணிகளின் தொற்றாளர் எண்ணிக்கை 21333 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24882 ஆக உயர்ந்துள்ளது.

‘புரெவி புயல்’எங்கு நிற்கிறது தெரியுமா?

‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியிருந்தது. எனினும், ‘புரெவி’ புயல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் திருகோமலைக்கு கிழக்கு-தென்கிழகில் 140 கிலோமீற்றில் நிலைகொண்டுள்ளது என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ​ஆகையால், பிற்பகல் 11.30 மணியளவிலேயே அவ்விடத்தில் நிலைகொண்டிருந்தது என அந்நிலையம் அறிவித்துள்ளது.

யாழ். மாநகர சபையின் பட்ஜெட் தோல்வி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் விசேட அமர்வு, மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. இதன்போது, நிதியறிக்கை்கான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன நிதியறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

சிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா

சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மரடோனா காலமானார்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும். அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21261ஆக உயர்ந்துள்ளது. 5720 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கண்டி, களுத்துறையில் முடக்கப்பட்ட பகுதிகள்

கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் நேற்றிரவு முதல், மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், களுத்துறை – பண்டாரகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம கிழக்கு, எபிட்டமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கண்டி-அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத் தலைநகரை சரணடைய திக்ரே படைகளுக்கு 72 மணித்தியால காலக்கெடு

திக்ரே பிராந்தியத் தலைநகர் மெகெல்லே மீது இராணுவம் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சரணடைவதற்கு 72 மணித்தியாலங்களை திக்ரே பிராந்தியப் படைகளுக்கு எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட் வழங்கியுள்ளார்.